வற்புறுத்திய காதலி! விஷ ஊசி போட்டு கொலை செய்த காதலன்!

0
113

நோயால் பாதிக்கப்பட்டிருந்த காதலி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் காதலன் விஷ ஊசி போட்டு அந்த காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில் பன்வேல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய விமான நிலையம் அமையவிருக்கும் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் மே 29-ஆம் தேதி கண்டறியப்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்தப் பெண்ணை பரிசோதித்த பொழுது உடலில் எந்தவிதமான காயங்களும் இல்லை. அதுபோல அந்த பெண்ணின் அருகில் எந்த ஒரு சான்றும் கிடைக்கவில்லை. எதுவும் கிடைக்காததால் இறந்தவர்கள் யார் என அடையாளம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஆட்டோ டிரைவர் ஒருவர் தன் கண்டெடுத்த ஒரு பொருளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

அந்த பையில் பர்ஸ் மற்றும் சில துணிகள் ஆதார் கார்டு போன்றவை இருந்துள்ளன. பின் ரமேஷ் தோம்ப்ரே என்ற ஒரு இளைஞர் காவல் நிலையத்திற்கு வந்து அந்த உடல் தனது சகோதரி என்றும், அந்த பை தன்னுடைய சகோதரிக்கு சொந்தமானது என்றும் கூறி, மருத்துவமனைக்கு சென்று சடலத்தை பார்த்து தன்னுடைய சகோதரி தான் என்பதையும் உறுதி செய்துள்ளார்.

அதன்பின் ரமேஷ் விசாரித்த காவல்துறை யினர், அதில் ரமேஷ் பன்வேலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சந்திரகாந்த் என்ற ஒரு நபருடன் சகோதரிக்கும் அவருக்கும் இடையே காதல் இருந்ததாக கூறினார். மேலும் அவர்களுக்குள் சண்டை நிகழ்ந்ததாக தனக்கு தெரியும் என்பதையும் பற்றி கூறினார்.

அதன்பின் சந்திரகாந்த் காவல்துறையினர் விசாரித்தபோது தான் அந்த பெண்ணை சந்திரகாந்த் கொலை செய்தது தெரியவந்தது.

அந்த மருத்துவமனையில் வார்டு பாயாக பணிபுரிந்து வரும் சந்திரகாந்த் மற்றும் கொலை செய்த பெண் இருவரும் 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு பெரிய நோய் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததாகவும், தனக்கு கொடிய நோய் இருப்பதால் தன்னை சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் மிரட்டியதாகவும், வேறு வழியில்லாமல் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை அளிப்பதாக கூறி நான்கு 4 விஷ ஊசிகளை அவருக்கு செலுத்தினேன். அதனால் அவருக்கு உயிர் பிரிந்தது. மேலும் அவருடைய பையை தூக்கி எறிந்து விட்டேன் என்று விசாரணையில் சந்திரகாந்த் கூறினார்.

சந்திரகாந்த் மீது கொலை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

author avatar
Kowsalya