புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

0
121
Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!
Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு கட்டணமில்லா பேருந்து! சமயோகித புத்தியினால் அசத்திய பெண்கள்!

திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சியைப் பிடிப்பதற்கு பல்வேறு அறிக்கைகளை தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது கூறியது. அதேபோல அதிமுக, திமுக இடையே கடும் போட்டி நிலவி வந்தது.இதில் திமுக அதிக இடங்களை பெற்று தமிழகத்தில் ஆட்சி பெற்றது.மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக அரியணை ஏறிய போது ஐந்து திட்டங்களில் கையெழுத்திட்டார்.அதில் ஒன்றுதான் பெண்கள் கட்டணமில்லா பேருந்து பயணம்.

இதனால் நகரத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பயனடைந்துள்ளனர்.அந்த வகையில் தற்பொழுது சில பெண்கள் அவர்களின் சமயோகித புத்தினால் திருச்சி வரை பேருந்தில் கட்டணம் இல்லாமல் சென்றுள்ளனர்.தற்போது ஆடி மாதம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் அம்மன் கோவில்கள் மிகவும் பிரசித்தி பெற்று காணப்படும். அந்தவகையில் மிகவும் புகழ்பெற்ற சமயபுரம் ஓம்சக்தி கோவில்கள் போன்றவற்றில் பெண்கள் அதிகப்படியானோர் மாலையிட்டு பாதயாத்திரை செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் கரம்பக்குடி பகுதியை சேர்ந்த 13 பெண்கள் சமயபுரத்து அம்மனை தரிசனம் செய்ய மாலையிட்டு சென்றனர்.இவர்கள் பரமக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு செல்ல பேருந்து வருவதற்காக காத்து கொண்டு இருந்தனர்.வெகுநேரமாக காத்துக் கொண்டிருந்தோம் பேருந்து வராததால்,ஆலங்குடி வழியே சென்று புதுக்கோட்டை பேருந்து ஏறிக் கொள்ளலாம் என்று எண்ணி ஆலங்குடி நகர பேருந்தில் பயணம் பயணம் செய்தனர்.இவர்கள் செல்லும் போது பெண்கள் அனைவரும் இதே போல ஒவ்வொரு நகரப் பேருந்தில் சென்றால் கட்டணம் இல்லாமல் சமயபுரத்து அடைந்துவிடலாம் என்று யோசித்துள்ளனர்.அதனையடுத்து ஆலங்குடியிலிருந்து கீரனூர் சென்றனர்.

அங்கிருந்து திருச்சி நகரப்பேருந்திற்கு சென்றனர். அதன்பிறகு சத்திரத்தில் இறங்கி சமயபுரம் நகரப் பேருந்தில் பயணித்து அம்மனை ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் தரிசனம் செய்து வந்துள்ளனர்.சென்றது போலவே வரும் பொழுதும் அதே டெக்னிக்கை உபயோகம் செய்துள்ளனர். பெண்களின் சமயோசித புத்தியினால் ஒரு ரூபாய் கூட பணம் செலவழிக்காமல் சாமியை தரிசனம் செய்து வந்துள்ளனர்.