அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

0
68

அடிக்கடி தும்பல்.. டஸ்ட் அலர்ஜியா? இதிலிருந்து விடுபட இனி 1 ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!

ஒவ்வொருவருக்கும் பருவநிலை மாற்றம் ஏற்படும் பொழுது அதில் வரும் தொற்றுக்களால் அலர்ஜி ஏற்படும். சிலருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் இந்த டஸ்ட் அலர்ஜி அவர்களுக்கு தீவிரமாகவே இருக்கும். அவ்வாறு இருப்பார்கள் இந்த பதிவில் வருவதை பின்பற்றினால் போதும் டஸ்ட் அலர்ஜி என்ற ஒன்று இருக்காது.

முதலாவதாக மஞ்சள்

நம் உண்ணும் உணவில் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்வதால் அது ஆன்டிபயாட்டிக்காக பயன்படுவது நமக்கு ஏற்படும் இருமலுக்கு நல்ல ஒரு தீர்வளிக்கிறது. அந்த வகையில் தினம் தோறும் தூங்குவதற்கு முன் ஒரு டம்ளர் பாலில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து குடித்து வரலாம்.

துளசி

சளி இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி அருமருந்தாக இருக்கும் பட்சத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் துளசி இலைகளை போட்டு காய்ச்சி பானமாக அருந்தும் பொழுது இவ்வாறு ஏற்படும் அலர்ஜிகள் குணமாகும்.

கருஞ்சீரகம் விதைகள்

கடைகளில் கருஞ்சீரக விதைகளில் தயாரிக்கப்படும் எண்ணையை வாங்கி ஒரு நாளில் காலை மற்றும் இரவு என்று இரு முறை தொண்டை மற்றும் மூக்கில் தடவி வர நல்ல தீர்வு காண முடியும்.

தேன்

தேன் ஆனது பல ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்க தற்பொழுது வரை பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் தேனில் இருக்கும் மகரந்தம் அலர்ஜிக்கு சிறந்த ஓர் மருந்து. அந்த வகையில் ஒரு நாளைக்கு இரண்டு என்ற முறையில் தேனை உட்கொள்ளலாம்.

நெய்

மெய்யானது நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகப்படுத்த உதவுவதோடு அலர்ஜி போன்ற ஒவ்வாமை களுக்கும் நல்ல ஒரு தீர்வாக இருக்கும். தினமும் கால் பண்ணையை உட்கொண்டு வர நல்ல மாற்றத்தை காணலாம்.