குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!!

0
98
#image_title

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 3 நாளில் சளி இருமல் தொல்லை பறந்து போய்விடும்!!

இன்றைக்கு இருக்கின்ற வானிலை மாற்றங்கள் காரணமாக பலரும் இருமல், சளி, காய்ச்சல், நெஞ்சு எரிச்சல், கபம் போன்ற பிரச்சனைகளால் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இந்த பிரச்சனைகளுக்கு ஒரு இயற்கையான தீர்வை இங்கு காண்போம்.

இதற்கென்று எவ்வளவு மருந்துகளையும் மாத்திரைகளையும் சாப்பிட்டாலும் முழுவதுமாக சரி செய்ய முடியாது.

தொண்டை வலி, தொண்டை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த தீர்வு நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:
இஞ்சி
ஆறு பிரியாணி இலைகள்
பட்டை
லவங்கம்

செய்முறை:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு கப் அளவுக்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஒரு இஞ்சியை தோலை சீவி நன்றாக துருவி ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீரில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு ஆறு பிரியாணி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

சிறிதளவு பட்டையை உரலில் இடித்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு இதனுடன் மூன்று லவங்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்போது அடுப்பை கம்மியான தீயில் வைத்து நன்றாக கொதிக்க வைக்கவும். கொதிக்க வைத்த பிறகு அதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இதை இரண்டிலிருந்து ஐந்து வயது இருக்கும் குழந்தைகள் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு கிளாஸில் ஊற்றி மீதி இருக்கும் கிளாசிற்கு வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து பருகி வரவேண்டும்.

இந்த சுவை குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் இதில் ஒரு ஸ்பூன் அளவு தேனை கலந்து கொடுக்கவும்.

5 லிருந்து 10 வயது இருக்கும் குழந்தைகளுக்கு இரண்டு தேக்கரண்டி இந்த மருந்தை ஒரு கிளாஸில் எடுத்துக் கொண்டு மீதி வெதுவெதுப்பான தண்ணீரை கலந்து கொடுக்க வேண்டும்.

பெரியவர்கள் தாராளமாக ஐந்து தேக்கரண்டி குடித்து வரலாம். அதிகமான கபம் மற்றும் நெஞ்செரிச்சல் உடையவர்கள் இதை காலை வெறும் வயிற்றில் மற்றும் இரவு தூங்குவதற்கு முன் எடுத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் காலையில் மட்டும் குடித்துவிட்டு ஒரு மணி நேரம் கழித்து காலை உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு இதைத்தொடர்ந்து மூன்று நாட்களுக்கு குடித்து வர சளி, இருமல், நெஞ்செரிச்சல் என அனைத்தும் மூன்று நாட்களில் மாயமாகிவிடும் .

author avatar
CineDesk