இந்த 23 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை தொடரும்! வானிலை அறிவோம் மையம் கடும் எச்சரிக்கை!

0
64

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தெற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல மேலிடக்கு சுழற்சி நிலவி வருகிறது.

ஆகவே அடுத்த நான்கு தினங்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும், நாளையும் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ததற்கான வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் வரும் 10ம் தேதி கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. அதோடு திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கிழக்கு மாவட்டங்களில் வரும் 11ஆம் தேதியும் கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், இன்று நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நேற்று காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக திருவள்ளுவர் மாவட்டம் புழலில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரி கடல், மன்னார் வளைகுடா அதனையொட்டி இருக்கக்கூடிய தமிழக தென்கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கையையொட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.