சர்க்கரையிலிருந்து விடுபட கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி போதும்!!

0
225
#image_title

சர்க்கரையிலிருந்து விடுபட கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி போதும்!!

கொண்டைக்கடலையை நாம் ஊக்குகடலை என்றும் கூறலாம்.கொண்டைக்கடையில் கருப்பு கொண்டை கடலை மற்றும் வெள்ளை கொண்டை கடலை என்ற இரண்டு வகைகள் உள்ளன. வெள்ளை கொண்டை கடலையை நாம் அதிக அளவு சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அதில் வெறும் மாவு சத்து மட்டும்தான் இருக்கும். கருப்பு கொண்டை கடலையை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:

கருப்பு கொண்டை கடலை
உப்பு
பெருங்காயம்
சர்க்கரை

செய்முறை:

முதலில் கருப்பு கொண்டை கடலையை எடுத்துக்கொள்ளவும்.

பின்பு அதை முதல் நாளிலே நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.

நன்கு ஊற வைத்திருந்த கருப்பு கொண்டை கடலையை 6-7விசில் விட்டு அது நன்கு வெந்த பிறகு அத்துடன் சிறிதளவு உப்பு மற்றும் பெருங்காயம் போட்டு அரை கப் அளவு நம்ம சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள ஊட்டச்சத்து நமக்கு கிடைக்கும்.

அதில் அதிக ஊட்டச் சத்துக்கள் இருப்பதால் சுண்ணாம்பு, புரோனியம் இது போன்றவை நமக்கு எளிதாக கிடைக்கும் . இது நல்லது என்று நம் அதிகமாக சாப்பிட்டால் வாய்வு மற்றும் செரிமான பிரச்சனைகள் இது போன்றவையும் ஏற்படும்.

அதனால் இதை நாம் அளவாக அரை கப் மட்டுமே சாப்பிட வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் போன்ற உணவுகளை உட்க்கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் .

எனவே கருப்பு கொண்டை கடலையை அரை கப் சாப்பிட்டு வந்தால் அதுவே போதுமான அளவு ஆகும். கருப்பு கொண்டை கடலையில் அதிக நார்ச்சத்துகள் உள்ளன. இதனை நாம் இன்னொரு முறையிலும் சாப்பிடலாம்.

முதலில் கருப்பு கொண்டை கடலையை எடுத்து கொள்ளவும். பின்பு அதனை மிதமான சூட்டில் நன்கு நிறம் மாறும் வரை வறுக்கவும் . வருக்கப்பட்ட கருப்பு கொண்டை கடலையை பொடியாக்கி கொள்ளவும். ஒரு டீஸ்பூன் கொண்டைக்கடலை பொடி சிறிதளவு தண்ணீர் மற்றும் ஒரு டீஸ்பூன் நாட்டு சக்கரை சேர்த்து காபியாக குடித்து வந்தால் அதிக உணவு சத்துக்கள் கிடைக்கும்.

இந்த கருப்பு கொண்டை கடலையை குழம்பாகவோ அல்லது வருத்தோ நாம் அன்றாட வாழ்வில் டெய்லியும் சாப்பிட்டு வந்தால் நமக்கு அதிக உணவு சத்துகள் கிடைக்கும் .இதை சர்க்கரை நோயாளிகள் உண்டு வந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய்கள் குறையவாய்ப்புகள் உண்டு.

அதிக சக்கரை நோய்கள் உள்ளவர்களுக்கு அதிகம் பசி ஏற்படாது அதனால டெய்லியும் கருப்பு கொண்டை கடலையை அரை கப் அல்லது முக்கால் கப் உண்டு வந்தால் அவர்களுக்கு சர்க்கரை நோய் குறைய வாய்ப்புகள் உண்டு. எனவே கருப்பு கொண்டை கடலையை நாள்தோறும் நம் அன்றாட வாழ்வில் உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் குறைய வாய்ப்புகள் உண்டு.

author avatar
Parthipan K