பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

0
195
#image_title

பெண் குழந்தைகளுக்கு ரூ.5,50,000 கிடைக்கும்… இந்த திட்டம் பற்றி தெரியுமா?

பெண் குளந்தைகளின் நலனிற்காக மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்று “செல்வமகள் சேமிப்பு திட்டம்”. சுகன்ய சம்ரிதி என்ற பெயரில் கடந்த 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

காரணம் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கும் வட்டி அதிகம் ஆகும். இந்த திட்டம் துவங்கப்பட்டதன் முக்கிய நோக்கம் பெண் குழந்தைகள்.. அவர்களது மேற்படிப்பு அல்லது திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்வதற்காக துவங்கப்பட்டது.

1 வயது முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகள் மட்டுமே அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும்.

குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.250.. அதிகபட்ச வைப்புத் தொகை ரூ.1.50 லட்சம் ஆகும். வருட முடிவில் குறைந்தபட்சம் ரூ.500 ஆவது சம்மந்தப்பட்ட குழந்தையின் வங்கி கணக்கிற்கு செலுத்தி இருக்க வேண்டும். செலுத்த தவறினால் ரூ.50 அபராதமாக கட்டி மீண்டும் கணக்கை புதுப்பித்து கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் அதிகபட்ச ஆண்டு வைப்பு தொகை ரூ.1,50,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கலாம்.

ஆனால் ஒரு குழந்தைக்கு ஒரு செல்வமகள் சேமிப்பு கணக்கு மட்டுமே தொடங்க முடியும். பெண் பிள்ளைகள் தங்களுக்கு 18 வயது பூர்த்தியான பிறகு பணம் தேவைப்பட்டால் இந்த திட்டத்தின் மூலம் 50% தொகை பெற்றுக் கொள்ள முடியும்.

21 வயதை பூர்த்தியடைந்த பிறகே மீதமுள்ள 50% தொகையை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்தின் மூலம் வருமான வரி 80c பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு பெற முடியும்.

உதாரணத்திற்கு…

மாத முதலீடு தொகை: ரூ.1000
(வருடத்திற்கு: ரூ.12000)

வட்டி விகிதம்: 8.2%

திட்டத்தில் சேரும் பொழுது குழந்தையின் வயது: 01

திட்டத்தில் சேர்ந்த ஆண்டு: 2024

திட்டம் முடியும் ஆண்டு: 2045(முதிர்வு காலம் 21 ஆண்டு)

நீங்கள் செலுத்திய தொகை: ரூ.1,80,000

வட்டி: ரூ.3,74,206

உங்கள் கைக்கு கிடைக்கும் தொகை: ரூ.5,54,206