குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

0
153
#image_title

குடும்பத் தலைவிகளுக்கு குட் நியூஸ்!! இன்று முதல் ரேஷன் கடைகளில் இது அமல்!!

ரேஷன் கடைகளில் மக்களுக்கு மலிவு விலையில் பல பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல பெண்களுக்கும் தமிழக அரசானது பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது கரூர் மாவட்டத்தில் பெண்களுக்கு உதவும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் சானிட்டரி நாப்கின் இனி விற்பனை செய்யப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

அதற்கான செயல்பாட்டை கரூர் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். பெண்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல நலத்திட்டங்களை கொண்டுவரும் பட்சத்தில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறைந்த விலையில் தரமான நாப்கின் வழங்குவதால் பெண்கள் பலரும் இதனை வாங்கி உபயோகிப்பர்.

அது மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்த நாப்கினை பெறாமல் கரூர் மாவட்டத்திலேயே சுய உதவிக் குழு மூலம் தயார் செய்யப்படும் நாப்கினை தான் இங்கு விற்பனைக்குக்கு பயன்படுத்துகின்றனர்.

அதனால் பெண்கள் மத்தியில் இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பெண்களுக்கு உதவும் வகையில் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் நாப்கினை ரேஷன் கடையில் விற்பதும் குறிப்பாக சுய உதவி குழுக்கு உதவி புரியும் வகையில் இது இருப்பதாலும் கரூர் மாவட்டத்தில் பலரும் இதனை பாராட்டி வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கரூரில் உள்ள 21 ரேஷன் கடைகளிலும் இந்த நாப்கின் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று அம்மாவட்ட ஆட்சியர் கூறினார். கூடிய விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் நடைமுறைக்கு வரும்.