புயலால் அரசு சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு!!

0
62
#image_title

புயலால் அரசு சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு நற்செய்தி! மீண்டும் பெற நாளை முதல் சிறப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு!!

புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு சொன்னையில் நாளை முதல் அதாவது டிசம்பர் 12 முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதில் சென்னையில் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உணவு இல்லாமல் மக்கள் அனைவரும் தவிர்த்து வந்தநிலையில் தற்பொழுது சென்னையில் வெள்ளம் சூழ்ந்த இடங்கள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்நிலையில் அப்பொழுது வெள்ளத்தால் சிலர் தங்களுடைய அரசு சான்றிதழ்கள் அனைத்தையும் இழந்தனர்.

இதையடுத்து தமிழக அரசு இழந்த அரசு சான்றிதழ்களை கட்டணம் இல்லாமல் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே சென்னையில் புயல் வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு விண்ணப்பிக்க 46 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதில் மக்கள் பலரும் தங்களின் ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு, பிறப்பு சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பள்ளி சான்றிதழ்கள், கல்லூரி சான்றிதழ்கள் என பல அரசு சான்றிதழ்களை இழந்தனர். அவர்கள் அனைவரும் அரசு சான்றிதழ்களை கட்டணம் இல்லாமல் பெறலாம் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருந்தார்.

இதையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தபடி புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் இழந்த அரசு சான்றிதழ்களை மீண்டும் பெறுவதற்கு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து மண்டலங்களிலும் நாளை(டிசம்பர்12) முதல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் தினமும் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி புழல், திருவொற்றியூர், மணலி, பாடி, அம்பத்தூர், மாதவரம், கீழ்பாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி, போரூர், அடையாறு, பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் உட்பட 46 பகுதிகளில் அலுவலகங்கள் மூலமாக சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.