டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!!

0
74
#image_title

டக்வெர்த் லீவிஸ் முறைப்படி நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டி! அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.

மேற்கிந்திய தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடி வருகின்றது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி கெனிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியின் பொழுது மழை குறுக்கிட்டதால் 50 ஓவர்கள் கொண்ட போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 40 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் சேர்த்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் அரைசதம் அடித்து 71 ரன்கள் சேர்த்தார். லிவிங்ஸ்டன் 45 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் அல்சாரி ஜோசப், மேத்யூ ஃபோர்ட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரோமாரியோ ஷேப்பரட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது. மேற்கிந்திய தீவுகள் அணி விளையாடும் பொழுதும் மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் லூகாஸ் முறைப்படி 34 ஓவர்களில் 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதையடுத்து 6 விக்கெட்டுகளை இழந்த மேற்கிந்திய தீவுகள் அணி 31.4 ஓவர்களில் 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிகபட்சமாக கீஸி கார்ட்டி அரைசதம் அடித்து 50 ரன்கள் சேர்த்தார். அலிக் அதனசா 45 ரன்களும், ரொமாரியோ ஷேப்பர்ட் 41 ரன்களும் சேர்த்தனர். இங்கிலாந்து அணியில் வில் ஜேக்ஸ் 3 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன் இரண்டு விக்கெட்டுகளையும், ரெஹான் அஹமது ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.