விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம்!!! நான்காவது வெற்றியை பதிவு செய்த இந்தியா!!!

0
27
#image_title

விராட் கோஹ்லியின் சிறப்பான ஆட்டம்!!! நான்காவது வெற்றியை பதிவு செய்த இந்தியா!!!

உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்19) லீக் சுற்றில் இந்திய அணியின் விராட் கோஹ்லி அவர்கள் சதம் அடித்ததை தொடர்ந்து வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 4வது வெற்றியை பெற்றுள்ளது.

புனேவில் நேற்று(அக்டோபர்19) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேசம் 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 256 ரன்கள் சேர்த்தது.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் அரைசதம் அடித்து 66 ரன்களும், டன்சித் ஹாசன் அரைசதம் அடித்து 51 ரன்களும் சேர்த்தனர். மஹ்மதுல்லா 46 ரன்களும், முஸ்பிகுர் ரஹிம் 38 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, பும்ரா, சிராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷர்தல் தக்கூர், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதையடுத்து 257 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சுப்மான் கில் அவர்களும் ரோஹித் சர்மா அவர்களும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ரோஹித் சர்மா 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி அவர்கள் சுப்மான் கில் அவர்களுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடத் தொடங்கினார்.

தொடர்ந்து விளையாடிய தொடங்கிய வீரர் சுப்மான் கில் அரைசதம் அடித்து 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோஹ்லி சதம் அடித்து 103 ரன்கள் சேர்த்தார். மேலும் கே.எல் ராகுல் 34 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 41.3 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 261 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் 4வது வெற்றியை பதிவு செய்தது. மேலும் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற 103 ரன்கள் சேர்த்த விராட் கோஹ்லி அவர்கள் ஆட்டநாயகன் விருதை வென்றார்.