2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் நிலம் எரிந்து நாசம்! அதிர்ச்சியில் வல்லுநர்கள்!

0
83
Greece Wild Fire
Greece Wild Fire

தொழிற்புரட்சியின் பலனாக மனித குலத்திற்கு கிடைத்த பயன்கள் ஏராளம். அதே நேரத்தில், தன்னை தாங்கி வாழ வைத்துக் கொண்டிருக்கும் பூமியை அழித்து வருவது தான் நிதர்சனம்.

உலகம் முழுவதும் நாள்தோறும் ஒரு இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. அவை அனைத்தும் புதிது புதிதாகவே இருப்பது தான் பேரடியாக உள்ளது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் அமேசான் காடுகளில் காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா, ரஷ்யா, கிரீஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் படுவேகமாக பரவி வருகிறது.

கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயை கட்டுப்படுத்த, தீயணைப்புத் துறையினரும், ராணுவமும் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ஹெலிகாப்டர், விமானங்கள் மூலமாக தண்ணீர் கொட்டி தீயை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். ஆனால், தீ அணைந்த பாடில்லை. மாறால பல லட்சம் மக்களை வெறு இடத்திற்கு இடம்பெயர வைத்துள்ளது.

தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் வனத்துறை தெரிவித்துள்ள கணக்கின்படி, கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், கடந்த 2 வாரத்தில் ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஏக்கர் கணக்கில் பார்த்தால் இரண்டு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இது கடந்த 2007 கிரீசில் ஏற்பட்ட தீ விபத்தை விட மிகவும் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் புவி வெப்பமயமாதல் என எச்சரித்துள்ள வல்லுர்கள், கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர்.

இதற்காக பாரீஸ் உடன்படிக்கையை உலக நாடுகள் நடைமுறைப்படுத்தி,  பசுங்குடில் வாயுவை வெளியேற்றும் புதைபடிவ எரிபொருட்களான நிலக்கரி, டீசல், பெட்ரோல் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.