அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை! 

0
77
Happy news for government employees! New offer effective from yesterday!
Happy news for government employees! New offer effective from yesterday!

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்! நேற்று முதல் அமலுக்கு வந்த புதிய சலுகை!

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியானது.அந்த அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 34சதவீதத்தில் இருந்து நான்கு சதவீதம் உயர்த்தி 38 சதவீதம் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக உயர்த்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.மேலும் முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று புத்தாண்டு பரிசாக 38 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என கூறினார்.

அதனை தொடர்ந்து அவர் கூறியதாவது அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் தங்களை அர்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை முழுமையாக உணர்ந்துள்ளது இந்த அரசு அதனால் அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாக்கின்றது.

முந்தைய அரசு விட்டு சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றது.அந்த வகையில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த அகவிலைப்படி உயர்வு குறித்து பரீலினை செய்து இந்த உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தற்போது வரை 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி தற்போது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.இதன் மூலம் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கபடுகின்றது.இந்த அகவிலைப்படி உயர்வினால் ஆண்டுதோறும் அரசுக்கு 2,359 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K