எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!

0
69

தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் அரசியல் களம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று எல்லோரும் தேர்தல் பரப்புரையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

அதேபோல திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதிலும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோன்று அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முக்கிய அமைச்சர்கள் என்று எல்லோரும் அவரவர் தொகுதியில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீடு வீடாக சென்று திருச்சியிலே வாக்கு சேகரிக்க தொடங்கி இருக்கிறார்.
அவர் பரப்புரையை மேற்கொண்ட சமயத்தில் திமுகவின் கூட்டணி சார்பாக நாடாளுமன்ற தேர்தலின்போது இங்கே போட்டியிட்டு வெற்றியடைந்த திருநாவுக்கரசை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இங்கே யாராவது பார்த்திருக்கிறீர்களா என்று தெரிவித்திருக்கிறார். அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை கண்டுபிடித்துக் கொடுத்தால் நான் உங்களுக்கு பரிசு கொடுக்கிறேன் என்று பொதுமக்களிடம் தெரிவித்திருக்கிறார் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.

அதேபோல சென்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக எண்ணற்ற வாக்குறுதிகளை பொதுமக்களுக்கு கொடுத்து தமிழகத்தில் வெற்றி பெற்றது. ஆனால் திமுக கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட இதுவரையில் நிறைவேற்றவில்லை.இதையெல்லாம் மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

என்னதான் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்தாலும் மத்தியில் ஆட்சியில் இருப்பது பாரதிய ஜனதா கட்சி ஆகவே அந்த கட்சியுடன் பகை பாராட்டி வரும் திமுகவால் தமிழகத்திற்கு இதுவரையில் எந்த ஒரு நன்மையும் ஏற்படவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.அந்த உண்மையை தற்சமயம் தமிழக மக்கள் உணர்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.