முட்டை இல்லா “சைவ ஆம்லெட்” சாப்பிட்டுருக்கீங்களா? இப்படி ஒருமுறை செய்யுங்கள்! சுவையாக இருக்கும்!!

0
26
#image_title

முட்டை இல்லா “சைவ ஆம்லெட்” சாப்பிட்டுருக்கீங்களா? இப்படி ஒருமுறை செய்யுங்கள்! சுவையாக இருக்கும்!!

மனித உடல் ஆரோக்கியமாக இருக்கவும்,இயங்கவும் உணவு முக்கியமான ஒன்று.மனிதர்கள் அசைவ விரும்பி மற்றும் சைவ விரும்பி என்று இரு வகைகளாக இருக்கின்றனர்.இந்நிலையில் அசைவம் சாப்பிட விரும்பாதவர்கள் சைவ ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.கடலை மாவை கொண்டு செய்யக்கூடிய ஒரு எளிதான ரெசிபி இந்த சைவ ஆம்லெட்.இந்த சைவ ஆம்லெட்டை சாண்ட்விச் உடன் வைத்து சாப்பிடலாம்.அசல் முட்டை ஆம்லெட் சுவையை கொடுக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கடலை மாவு – 1/2 கப்

*கோதுமை மாவு – 1/4 கப்

*பெரிய வெங்காயம் – 1(நறுக்கியது)

*பச்சை மிளகாய் – 2

*மல்லி தழை – சிறிதளவு

*மிளகு தூள் – தேவையான அளவு

*உப்பு – தேவையான அளவு

*சோடா உப்பு – 1/2 தேக்கரண்டி

*நெய் – 2 தேக்கரண்டி
(அல்லது)
எண்ணெய்

செய்முறை:-

1.ஒரு பவுலில் கடலை மாவு,கோதுமை மாவு,உப்பு,சமையல் சோடா ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் கலந்து நன்கு கலக்கி விடவும்.

2.பிறகு அதில் பெரிய வெங்காயம்,பச்சை மிளகாய்,மல்லி தழை சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.

3.பிறகு அடுப்பில் தோசைக்கல் வைத்து அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் அல்லது நெய் சேர்த்து தடவி விடவும்.பின்னர் கலக்கி வைத்துள்ள சாவை முட்டை அதாவது கடலை மாவு கலவையை ஆம்லெட் போல் ஊற்றவும்.

4.தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் சேர்த்து அதில் மிளகு தூள் தூவி வெந்தவுடன் ஒரு தட்டிற்கு மாற்றவும்.