பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!

0
63

பெட்ரோல், டீசல் போடும்போது இதை கவனிச்சு இருக்கீங்களா?? இனி இதையெல்லாம் கட்டாயம் கவனியுங்கள்!!

வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் போடும் போது அதனின் தரத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தது உண்டா? மீட்டர் 0-வின் இருந்து தொடங்குகிறதா என்று மட்டும் பார்த்தால் போதாது அதனின் தரத்தையும் அறிந்துகொள்வது அவசியமாக உள்ளது.

வாகனங்கள் இயங்க எரிப்பொருளாக திகழும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்பது மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். தற்போது உள்ள பொருளாதார நெருக்கடியில் தினமும் ரூ.100க்கு மேல் பணம் செலுத்தி பெட்ரோல் பெறவேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், நீங்கள் பணம் கொடுத்துப் போடும் பெட்ரோல் தரமாக உள்ளதா என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதனைத் தெரிந்துகொள்ளுவது மிக எளிமையான விஷயம்.

பெட்ரோல் பங்கில் Display-வில் பெட்ரோலில் Density அளவு இடம்பெற்று இருக்கும். அதனை வைத்து நீங்கள் பெட்ரோலின் தரத்தைக் கண்டறியலாம்.

அரசு, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு என்று தர மதிப்பீட்டை நிர்ணயித்துள்ளது. அதன் அடிப்படையிலேயே நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

பெட்ரோல் மற்றும் டீசல் போடும் இயந்திரத்தின் Display மற்றும் பில் ஆகியவற்றில் நீங்கள் போட்டுக்கொண்ட எரிபொருளின் Density அளவு இடம்பெற்று இருக்கும்.

இதற்குக் குறைவான அடர்த்தி அளவில் உங்களுக்கு பெட்ரோல் டீசல் விநியோகம் செய்யப்பட்டால் உங்களால் அந்த நிறுவனத்தின் மேல் புகார் அளிக்க முடியும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 இன் படி, ஒவ்வொரு நுகர்வோருக்கும் பெட்ரோலின் தூய்மையை அளவிட உரிமை உண்டு.இவ்வாறு நீங்கள் பெட்ரோலின் தரத்தினை அறிந்து கொள்ளலாம்.

காலை நேரத்தில் பெட்ரோல் போட்டால் நீண்ட நேரம் வரும் என்கின்றார்கள் அது உண்மையா??இல்லை ஏனென்றால் எந்த ஒரு எரிபொருளும் வெப்பமடையும்போது விரிவடையும் இந்த கோட்பாடு உண்மைதான் ஆனால் நீங்கள் எந்த நேரத்தில் பெட்ரோல் போட்டாலும் அதன் அளவும் தரமும் மாறப்போவதில்லை.

பெட்ரோல் பங்கில் மொபைல் போன்கள் உபயோகிக்க கூடாது என்று கூறுகிறார்கள் ஆனால் மொபைல் போனை வைத்து தானே G pay மூலம் பணம் அனுப்பப்படுகிறது.

மொபைல் போன்கள் அனைத்தும் குறைந்த அளவில்தான் radio frequency பயன்படுத்துகிறது என்பதால் மொபைல் போன்கள் மூலம் பெட்ரோல் பங்கில் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

அதை மீறியும் சில மொபைல் போன் பேட்டரி வெடிப்பதை நாம் கண்கூட பார்த்திருக்கின்றோம் அதனால் அனைத்து மொபைல் போன்களும் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது.

இதற்காக 2016 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது அதன்படி பெட்ரோல் பங்கில் இருந்து 6 மீட்டர் தூரத்தில் தான் மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகின்றது.

 

author avatar
Parthipan K