கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

0
81

கிருஷ்ணரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ..பார்க்கலாம் வாங்க..!!

 

அஷ்டமியில் எட்டாவது குழந்தையாக பகவான் அவதாரம் தான்  இந்த கிருஷ்ணன். நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரித்துள்ளனர். இன்று நாம் கிருஷ்ணரை பற்றி அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்கள் தெரிந்து கொள்வோம்.மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ண அவதாரமாகும். கிருஷ்ணர், தமிழ்நாட்டில் கண்ணன் என்றும், வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

 

கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.கிருஷ்ணர் மூன்று வயது வரை கோகுலத்திலும், மூன்று முதல் ஆறு வயது வரை பிருந்தாவனத்திலும், ஏழாம் வயதில் கோபியர்களுடனும், எட்டு முதல் பத்து வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார். கம்சனை வதம் செய்த போது கிருஷ்ணருக்கு வயது ஏழு கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் மற்றும் சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாக திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று பெயர்.

ஜகத் மந்திர் என்று அழைக்கப்படும் இந்த ஆலயத்தில் பிரதான வாசலின் பெயர் சுவர்க்க துவாரம். இது எந்த நேரமும் திறந்தே இருக்கும். இதைதாண்டி சென்றால் மோட்ச துவாரம் வரும். அதையும் தாண்டி சென்றால்தான் கண்ணன் தரிசனம் கிடைக்கும். கண்ணனின் லீலைகளை விளக்கும் கர்பா என்ற நாட்டியம் குஜராத்தில் பிரபலம். இது தமிழ் நாட்டு கும்மி, கோலாட்டம் போல் நடத்தப்படுகிறது.உடுப்பி கிருஷ்ணர் கோவிலில் பூஜைக்குரிய பொருட்கள் வாங்கும் போது மரத்தாலான மத்து ஒன்றையும் வாங்கும் பழக்கம் பக்தர்களுக்கு உண்டு. கேரளாவில், ஆலப்புழை அருகேயுள்ள அம்பலம்புழை ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் கிழக்கு நோக்கி அருள்கிறார். இவருக்கு பால் பாயாசம், நெய்வேத்தியம் செய்தால் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கை.

இங்கு ஒரு லிட்டர் பாலில் இரண்டரை கிலோ சீனி கலந்து பாலை சுண்டக்காய்ச்சி பால் பாயாசம் தயாரிக்கின்றனர். மதுராவில் தேவகி-வசுதேவருக்கு எட்டாவது மகனாக அவதரித்தார் கிருஷ்ணர். அவர் பிறந்த இடம் ஒரு சிறிய சிறைச்சாலை. தற்போது, அந்த இடத்திற்கு மேல் கத்ர கேஷப்தேவ் என்ற கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.

 

 

author avatar
Parthipan K