மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

0
147

மாவட்ட ஆட்சியரிடம் முக்கிய கோரிக்கையை வைத்த இந்து முன்னணி!

தஞ்சாவூர் பெருவுடையார் திருக்கோயில் உலகபிரசித்திபெற்ற கோயிலாக விளங்கி வருகிறது அதோடு யுனஸ்கோவால் உலகபாரம்பரிய சின்னமாக அங்கிகரிக்கபட்டிருக்கிறது.

அதோடு இந்த கோவிலுக்கு வெளிநாட்டு நபர்களும் வந்து பார்வையிட்டு செல்கின்றன.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம் ஒரு கோரிக்கை மனுவை இந்து முன்னனி இயத்தின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் வழங்கினார்.அதில் இந்தாண்டு கோவிலின் பிரசித்திபெற்ற சித்திரை திருவிழாவை நடத்திட வேண்டும் என தெரிவித்திருக்கிறார். இந்த திருவிழா சென்ற ஆண்டே நடைபெறவில்லை ஆகையால் இந்த முறை நிச்சயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.

அதோடு தமிழ்நாட்டில் பெரும்பான்மையான இந்து மக்களின் வழிப்பாட்டு உரிமையாக இருந்து வரும் இந்த திருவிழாவிற்கு மட்டும் தடைவிதிப்பது அவர்களின் மனதை புண்படுத்தும் விதமாகவே இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

அத்துடன் இந்த திருவிழாவை நம்பி இருக்கும் சிற்றுண்டி தயாரிப்பாளர்கள் கைவினை கலைஞர்கள் போன்றவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதோடு அவர்கள் சிரமப்பட வேண்டிய நிலையும் இருக்கிறது ஆகவே மாவட்ட ஆட்சியர் திருத்தேர் விழா அவை சமூக இடைவெளியுடன் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.