ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்!

0
162
#image_title

ஏடிஎம்மில் 15 நிமிடங்களில் கொள்ளையடிப்பது எப்படி? பிஹாரில் செயல்படும் பயிற்சி மையம்

வேலையில்லாத இளைஞர்களுக்கு 15 நிமிடங்களில் ஏடிஎம்களை உடைக்க பயிற்சி அளித்த ரகசிய பயிற்சி நிறுவனத்தை உத்தரப்பிரதேச காவல் துறையினர் பிஹார் மாநிலத்தில் கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம். லக்னோவில் ஏடிஎம்மை உடைத்து ரூ.39.58 லட்சம் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 04 இளைஞர்களைப் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அப்போது ஏடிஎம் கொள்ளையடிப்பவர்களுக்கு பிஹாரில் பயிற்சி நிறுவனம் நடத்தப்படுகிறது என்ற அதிர்ச்சி செய்தி வெளியானது.

லக்னோவில் ஏடிஎம் கொள்ளையில் ஈடுபட்டு கைதான நீரஜ் பிஹார் மாநிலம் சாப்ராவைச் சேர்ந்த சுதிர் மிஸ்ரா என்பவரிடம் இருந்து ஏடிஎம்களை உடைக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த ரகசிய பயிற்சி நிறுவனத்தை உபி காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வேலையில்லாத இளைஞர்களுக்கு சுதிர் மிஸ்ரா என்பவர் ஏடிஎம்களை உடைத்துக் கொள்ளையடிப்பதற்கு மூன்று மாத பயிற்சி வழங்குகிறார்.

இதற்கான பயிற்சி நிறுவனம் அவர் நடத்தி வரும் அவர் இந்த பயிற்சியின் போது வேலையில்லாத இளைஞர்களுக்கு ஏடிஎம்மில் விரைவாக நுழைவது எப்படி, ஏடிஎம்மில் உள்ள கண்காணிப்பு கேமிரா மற்றும் கண்ணாடிகளில் திரவத்தை எப்படி தெளிப்பது என்பது குறித்த தொழில்நுட்பங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

15 நாள் பயிற்சிக்குப் பிறகு அவர்களுக்கு நேரடித் தேர்வும் நடத்தப்படுகிறது. இதில் 15 நிமிடங்களில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளையடிப்பவர்கள் மட்டுமே களப்பணிக்கு அனுப்பப்படுகிறார்கள் என தெரிவித்த காவல் துறையினர் இந்த கும்பல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட ஏடிஎம் கொள்ளை வழக்குகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

author avatar
Savitha