அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை

0
131
#image_title
அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தல்! சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டுமென கோரிக்கை
திருப்பூரில் பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படும் சம்பவம் சமீப நாட்களாக அதிகரித்தே வருகிறது. காவல்துறையினரும் விரைந்து விசாரணை நடத்தி குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு மருத்துவமனையில் போதிய அளவு பாதுகாப்பின்மை காரணமாக இந்த குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 3 நாட்களான ஆண் குழந்தை கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அர்ஜுன் குமார் மனைவி கமலினிக்கு கடந்த 22ம் தேதி திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவரது குழந்தை திடீரென மாயமானது. கமலினி சிகிச்சை பெற்று வந்த அதே வார்ட்டில் எஸ்தர் ராணி என்ற பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு உதவியாக உமா என்ற பெண்ணும் உடன் இருந்துள்ளனர்.
இந்நிலையில் பணி முடிந்து மாலையில் திரும்பி வந்து அர்ஜுன் குமார் தனது குழந்தையை தேடிய போது மாயமானது தெரியவந்தது. கமலினிக்கு நடித்து உதவி செய்வது போல் உமாவும், எஸ்தர் ராணியும் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பச்சிளம் குழந்தை கடத்தல் விவகாரம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் உரிய பாதுகாப்பும், போதிய சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
author avatar
Savitha