மக்களின் முதல்வர் எடப்பாடியார்! மிகுந்த மகிழ்ச்சியில் முதலமைச்சர்!

0
77

விரைவில் தேர்தல் வரவிருப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் இருக்கின்ற முக்கிய அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்தவகையில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நாளுக்கு இரண்டு முதல் நான்கு தொகுதிகள் வரை நேரில் சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகின்றார்.அதேபோல வாகனங்களில் நின்று கொண்டு பிரச்சாரம் செய்வதற்கு அசௌகரியமாக இருப்பதாலோ என்னவோ ஒரு தொகுதிக்கு செல்வது என்று முடிவாகி விட்டால் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து மக்கள் அனைவரையும் அந்த இடத்திற்கு அழைத்து வந்து அங்கேயே சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின்.

அப்படித்தான் அவருடைய பிரச்சாரம் இன்று வரையில் இருந்து வருகிறது இது தொடர்பாக திமுகவின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது வெயிலில் சென்றால் ஸ்டாலின் கருத்து விடுவாராம் என்பது போன்ற வேடிக்கையான பதிலை தெரிவித்து திமுகவை சார்ந்தவர்களே நகைப்புக்கு உள்ளாகி விடுகிறார்கள்.ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம் ஆளும் கட்சியான அதிமுக மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். ஆனால் அதிமுக தரப்பு எங்கள் மீது பொய்க்குற்றம் சமத்துவத்தை விட தாங்கள் தமிழ் நாட்டிற்கு செய்த நல்ல திட்டங்களை தெரிவித்து வாக்கு கேளுங்கள் என்று. தெரிவிக்கிறார்கள்.

திமுகவைப் பொறுத்தவரையில் வாரிசு அரசியல் என்ற ஒரு விவகாரம் தற்போது பெரிய அளவில் பூதாகாரமாக இருந்துவருகிறது. திமுக தலைவர் பதவிக்கு கருணாநிதிக்கு பிறகு அவர் மகனான ஸ்டாலின் வந்ததில் இருந்தே இந்த வாரிசு அரசியல் விவகாரம் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.இந்த நிலையில், அவர் தலைவர் பதவிக்கு வந்து சிறிது காலத்திலேயே அவருடைய மகனான உதயநிதியை திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமனம் செய்தார். இந்த விவகாரம் வாரிசு அரசியல் என்று திமுக மீது இருந்த விமர்சனத்தை மீண்டும் மேலும் வலுப்படுத்தியது.

தேர்தல் வருவதற்கு முன்னரே உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நான் தலைவருடைய மகன் என்ற காரணத்திற்காக மட்டும் பதவிக்கு வர விரும்பவில்லை. அதனால் நான் இந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என தெரிவித்திருந்தார்.ஆனால் திமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்த சமயத்தில் உதயநிதி சேப்பாக்கம் திருவல்லிக்கேணி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பில் இருந்து அதிமுகவிற்கு திமுகவை விமர்சனம் செய்வதற்கு புது துருப்பு சீட்டு கிடைத்துவிட்டது. அதாவது திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்பது போன்ற விமர்சனங்கள் திமுக மீது எழத் தொடங்கியது.ஆனால் எதைப்பற்றியும் கவலைப்படாத உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திலும் இறங்கிவிட்டார்.
இது ஒருபுறம் இருக்க அதிமுகவை மறுபுறம் படுஜோராக தங்களுடைய பிரச்சாரத்தை செய்து வருகிறது. அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெருத்தெருவாக சென்று தன்னுடைய பிரச்சாரத்தை செய்து வருகிறார். மழை வெயில் என்று பாராமல் மக்களை அவர் நேரடியாக சென்று சந்தித்து வாக்குகளை கேட்டு வருகிறார்.

சுமார் ஆறு மாதங்கள் முன்பிருந்தே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் எடப்பாடி பழனிச்சாமி மீது தமிழக மக்களுக்கு ஒரு நல்ல எண்ணம் வந்து இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது தேர்தல் வந்தால் மட்டுமே மக்களை இழந்து சந்திக்கும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் தேர்தல் வருவதற்கு முன்னரே தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்கும் முதலமைச்சர் இவர் வெறும் முதலமைச்சர் மட்டும் கிடையாது மக்கள் முதல்வர் என்கிற ரீதியில் முதல்வருக்கான பெயர் தமிழகத்தில் உயர்ந்திருக்கிறது.அதேபோல ஒருநாளுக்கு பத்து இடங்கள் என்று கணக்கிட்டு அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களுக்கான வாக்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சேகரித்து வருகிறார்.