இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

0
30

இவ்வளவு நாள் தெரியாம போய்விட்டதே!! இ சேவை மையம் தொடங்கினால் இப்படி எல்லாம் பணம் சம்பாதிக்க முடியுமா??

தமிழகத்தில் அனைத்து குடிமக்களும் இ- சேவை மையம் தொடங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும் தொழில்முனைவோர்களையும் ஊக்குவகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டது தான் இந்த இ சேவை மையம். இந்த இ சேவை மையத்தின் மூலம் பொது மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த இ சேவை மையத்தின் மூலமாக பொதுமக்கள் தங்கள் குடிநீர் கட்டணம், மின் கட்டணம், கழிவுநீர் அகற்றல் கட்டணம் போன்ற பல்வேறு கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

கட்டணங்கள் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்த இ சேவை மையத்தின் மூலமாக வருமான துறையின் கீழ் வருமானச் சான்றிதழ் ஜாதி சான்றிதழ் குடியிருப்பு சான்றிதழ் போன்ற 40-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற முடியும்.

இவ்வாறு பயனுள்ள இந்த இ சேவை மையத்தை தொடங்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த நிலையில் தமிழக அரசு ஆனது இ சேவை மைய திட்டத்தை தொடங்கியுள்ளது.

இதில் பாதுகாப்பான முறையில் இ சேவை மையத்தை அமைத்து நடத்துவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றது.இந்த செய்தியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் வாயிலாக குடிமக்கள் அனைவரும் இ சேவை மையங்களை தொடங்கி பொதுமக்களுக்கு அரசின் அனைத்து இணைய வழி சேவைகளையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இவை அனைத்தும் பொதுமக்களின் குடியிருப்பு அருகமையிலேயே அமைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு இ சேவை மையத்தை தொடங்க விரும்பும் பொதுமக்கள் அனைவரும் அரசு அதிகாரப்பூர்வமாக அளித்துள்ள www. tnesevai. tn. gov. in/ tnega. tn. gov. in/ என்று இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பதாரரின் பெயர், கடவுச்சொல், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும். இதில் தகுதியுள்ள மற்றும் விருப்பமுள்ள அனைவரும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K