நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!

0
225
#image_title
நம் செல்போன் தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?? இதோ முழு விவரம்!!
நாம் பயன்படுத்தும் அழகிய ஸ்மார்ட் ஃபோன்கள் தவறுதலாக தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்வது என்பதை பார்க்கலாம்? என்ன செய்வது என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பது தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டும். அதை இங்கு பார்க்கலாம்.
செய்யக்கூடாதது :-
நாம் குளித்த முடித்த பிறகு ஹேர்-ரையர் மூலம் நம் தலைமுடியை காய வைப்போம். அதேபோல தண்ணீரில் விழுந்த ஆண்ட்ராய்டு போனையும் தனித்தனி பாகங்களாக பிரித்து காய வைக்க கூடாது. அதில் இருந்து வெளியாகும் சூட்டினால் செல்போனில் உள்ள உட்பகுதிகள் சூடாகி பாதிப்படைய செய்யக் கூடும். செல்போனில் மதர் போர்டு உள்ளிட்ட இதர முக்கியமான பாகங்களுக்கு இதனால் சேதமடையும். ஆதலால் இதனை செய்யக்கூடாது.
செல்போனை உதறுவது:-
தண்ணீரில் விழுந்த செல்போனை அப்படியே உதறுவது தவறானது.
நமது ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் தவறுதலாக விழுந்துவிட்டால் அதை உடனடியாக பயன்படுத்துவது மிகவும் ஆபத்து. அது நமது ஸ்மார்ட்போனை பாழாக்கிவிடும். நமது ஒரு நிமிட தவறு பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போன்களை பாதித்துவிடும்.
தண்ணீரில் விழுந்த நமது ஸ்மார்ட் ஃபோனை உடனே ஆன்-ஆஃப் செய்வது உடனே பயன்படுத்த முயற்சிப்பது தவறான ஒன்று. நிச்சயம் அதை தவிர்க்க வேண்டும். தண்ணீரில் விழுந்த செல்போனை எக்காரணத்தை கொண்டும் ஆன் செய்து பார்க்க கூடாது.
தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்து, அதை துடைத்து அரிசி மூட்டை, பருப்பு மூட்டைகளில் வைக்கக்கூடாது் இதனால் செல்போன் பாதிப்படைய கூடும் எனவே இதயம் தவிர்க்க வேண்டும்.
மிகவும் முக்கியமானது தண்ணீரில் விழுந்தவுடன் செல்போனை உடனே எடுத்து சார்ஜரில் போடக் கூடாது. இவ்வாறு செய்வதால் செல்போனில் உள்ள மதர்போர்ட் உள்ளிட்ட பலவற்றை கருக செய்துவிடும். ஆகையால் இதையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீரில் விழுந்த செல்போனை எடுத்து உடனே உதற கூடாது. அது வெளியே இருக்கும் தண்ணீரை செல்போனுக்குள் கொண்ட போய்விடும், அவ்வாறு செய்வதால்.
செய்ய வேண்டியவை:-
உடனே அருகில் உள்ள செல்போன் சர்வீஸ் சென்டருக்கு சென்று செல்போனை தர வேண்டும். அவர்கள் அதற்குரிய உபகரணங்கள் கொண்டு செல்போனை பழுத்து பார்ப்பார்கள். செல்போனை எந்த அளவுக்கு தண்ணீர் உள்ளே இறங்கி உள்ளது என்பதை பார்த்து அதனை சரி செய்துவிடுவார்கள். நாமாக ஏதாவது செய்யும்போது அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும். ஆகையால் தண்ணீரில் விழுந்து செல்போனை அதை அப்படியே எடுத்து அருகில் உள்ள நல்ல செல்போன் சென்டருக்கு செல்வது மிகவும் நல்லது.
author avatar
CineDesk