6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

0
68

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் புத்தகச் சுமையை குறைத்து, வாழ்க்கைக்கான கல்வியை அனுபவங்களின் மூலம் மாணவர்கள் பெற்றிடும் வகையிலான செயல்பாடுகளை பள்ளிகளில் மேற்கொள்வதற்காக ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்கி, மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி மாணவர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படையான உடல் நலம் மற்றும் மனவளத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அந்த வகையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ‘புத்தகமில்லா தினம்’ கொண்டாட வழிகாட்டுதல் மற்றும் நிதி அளித்து மாநில திட்ட இயக்குநர் அண்மையில் உத்தரவிட்டிருந்தார். அதனை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பிப்ரவரி 26-ஆம் தேதி ‘புத்தகமில்லா தினம்’ கடைபிடிக்கப்படுவதாக தமிழக அரசு  அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்த ‘புத்தகமில்லா தினம்’ என்ற அறிவிப்பை விலக்கி கொள்வதாக  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் தற்போதுதான் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த கொரோனா காலத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யவும், கற்றல் அடைவுத் திறனை மேம்படுத்தவும் வேண்டியுள்ளது. இதன் காரணமாக பிப்ரவரி 26-ஆம் தேதி அன்று நடைபெற இருந்த ‘புத்தகமில்லா தினம்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K