மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

0
56
#image_title

மதிமுகவிற்கு பம்பர சின்னம் கிடைக்குமா? காத்திருக்க சொல்லும் உயர்நீதிமன்றம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மதிமுக கட்சி திமுக கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளார் அக்கட்சி பொது செயலாளர் வைகோ, மதிமுக புதிய சின்னத்தை கேட்டுள்ளதால் பரிசீலனை செய்து முடிவேடுப்பதாக தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், சின்னம் ஒதுக்க உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்திற்க்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் மதிமுக பொது செயலாளர் வைகோ.

இதற்க்கு இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்க்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதி மன்றம்.

ஆனால் இன்னும் எந்த பதிலும் அளிக்காததால் மதிமுகவிற்க்கு பம்பர சின்னம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அளித்த மனுவை வேகமாக பரிசீலிக்க கோரி மதிமுக சார்பில் வைகோ மேல் முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் முரளி முறையிட்ட நிலையில் நாளை விசாரிப்பதாக தலைமை நீதிபதி எஸ்.பி.கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி சக்ரவர்த்தி அமர்வு கூறியுள்

ளது.