இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

0
154
#image_title

இந்தோனேஷியாவில் பெரு வெள்ளம், நிலச்சரிவு – 32 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை, அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்தோனேஷியா நாட்டின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் கடந்த வாரம் வியாழக்கிழமை கனமழை பெய்துள்ளது. அதனை தொடர்ந்து சில நாட்கள் பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததோடு, ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட துவங்கியது. இந்நிலையில் இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது என்று ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இத்தகவலை அந்த நாட்டின் தேசிய பேரிடர் தணிக்கை குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம்

கனமழை அப்பகுதி முழுவதும் வெள்ளம் ஏற்பட்டு 1500க்கும் மேற்பட்ட வீடுகள், 10க்கும் மேற்பட்ட சாலை பகுதிகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டு பாதிப்படைந்துள்ளது. மேலும் சில பகுதிகளில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமத்ரா மாகாணத்தில் மொத்தம் 12 ஆட்சிக்குட்பட்ட பகுதிகள் உள்ள நிலையில் அதில் 5 பகுதிகள் நெருக்கடி நிலை கொண்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், பல நபர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறி தற்போது பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மீட்பு பணியில் தொடர்ந்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில், வெள்ளம் முழுவதும் வடிந்த பின்னரே, மொத்த பலி எண்ணிக்கை மற்றும் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த உறுதியான தகவல் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.