‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

0
188
#image_title

‘ராமேஸ்வரம் கபே’ குண்டுவெடிப்பு சம்பவம் – தமிழகத்தில் தேடுதல் வேட்டையில் இறங்கிய NIA அதிகாரிகள்!!

கடந்த மார்ச் 1ம் தேதி பெங்களூர் வைட்ஃபீல்ட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ‘ராமேஸ்வரம் கபே’ என்னும் உணவகத்தில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று அரங்கேறியது. இந்த குண்டு வெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய நிலையில், பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்ததில் சந்தேகப்படும் வகையில் நபர் ஒருவர் வாடிக்கையாளர் போல் அந்த உணவகத்திற்கு உள்ளே நுழைந்து வெடிகுண்டை வெடிக்க வைத்துவிட்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.

NIA அதிகாரிகளிடம் கைமாறிய வழக்கு

இதனை தொடர்ந்து பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இந்த வழக்கினை தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்களை வெளியிட்டு, இந்த நபர் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.

தமிழகத்தில் முகாமிட்டுள்ள NIA அதிகாரிகள்

இதனையடுத்து அந்த நபரின் புகைப்படத்தை தமிழ்நாடு காவல்துறைக்கு அனுப்பி வைத்து, ஏதேனும் தகவல் உள்ளதா? என்று விசாரித்த NIA அதிகாரிகள் தற்போது தமிழ்நாட்டில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதே போல் கர்நாடகா மாநிலத்தின் வேறு சில அண்டை மாநிலங்களிலும் NIA அதிகாரிகள் தங்கள் தேடுதல் வேட்டையினை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.