தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு !!

0
63
#image_title

தமிழகத்தில் உளவுத்துறையும், காவல்துறையும் செயலிழந்து விட்டது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் உளவுத்துறையும்  தமிழக காவல்துறையும் தோல்வி அடைந்து உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்டதாகவும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.

கடந்த ஒரே வாரத்தில் 15 கொலை சம்பவங்கள் தமிழகத்தில் அரங்கேறி உள்ளன. இதில் பெருவாரியான கொலை சம்பவங்கள் மதுபோதையில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு தற்போது சரியில்லை என்று பொதுமக்கள் மத்தியிலும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொலை, கொள்ளை, வன்முறை சம்பவங்கள் என தமிழகத்தில் நாள்தோறும் பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

மேலும்,  சென்னை உயர்நீதிமன்ற கிளையும், மதுரை மாவட்ட காவல்துறைக்கு, அதிமுக மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பும், போக்குவரத்து நெரிசலை சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உரிய உத்தரவினை வழங்கியது. ஆனால் அதிமுக மாநாட்டிற்கு தமிழக காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்றும் போக்குவரத்து பணிகளையும் சீர் செய்யவில்லை என்றும்  எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. காவல்துறை உரிய பாதுகாப்புவிலை என்றும் போக்குவரத்தும் சீர் செய்யவில்லை என்றும் குற்றச்சாட்டிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் உளவுத்துறையும் காவல்துறையும் செயலிழந்து விட்டதாக கடுமையாக சாட்டினார்.

author avatar
Parthipan K