ஜாதி மறுப்பு திருமணம் செய்தவரா நீங்கள்? உங்களுக்கு பாதுகாப்பு இல்லம் ரெடி : அதிரடி திட்டம்

0
88

ஜாதி மறுப்பு திருமணம் செய்தவரா நீங்கள்? உங்களுக்கு பாதுகாப்பு இல்லம் ரெடி : அதிரடி திட்டம்

ஜாதி மதம் கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பை வழங்கிடும் வகையில் பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்பட இருப்பதாக கேரள சமூகநீதி துறை அமைச்சர் ஷைலஜா அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் கலப்பு திருமணம் செய்தவர்கள் குடும்பங்களால் புறக்கணிக்கப்பட்டு வந்தனர். அதில் சிலருக்கு ஜாதிய ரீதியான அச்சுறுத்தல்களும் இருந்து வந்தது. சில இடங்களில் ஆணவ கொலைகளும் நடந்தேறியது.

இதனைத் தடுப்பதற்காக ஜாதி மறுப்பு திருமணம் செய்தவராகளை பாதுகாக்க கேரள அரசின் சமூகநீதி துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா புதிய திட்டத்தைப் பற்றி இன்று சட்டப்பேரவையில் உரையாற்றினார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது ”சாதி, மதம் கடந்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் நிராகரிப்பு, ஆணவ கொலை உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். அவர்களைப் பாதுகாப்பது அரசின் தார்மீக கடமை.

அவர்களுக்காக பாதுகாப்பு வசதிகளை அளித்திட புதிய முயற்சியை கேரள அரசின் சமூகநீதி துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. அவர்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓராண்டு வரையில் தங்கி கொள்ளக்கூடிய வகையில் பாதுகாப்பு இல்லங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கேரள அரசின் சமூகநீதி துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கூறியுள்ளார்.

author avatar
Parthipan K