அந்தரங்க இடத்தில் அரிப்பு தொந்தரவு தடிப்பு உள்ளதா! உடனே இந்த 3 பொருட்களை இப்படி பயன்படுத்துங்கள்!!

0
156
#image_title

அந்தரங்க இடத்தில் அரிப்பு தொந்தரவு தடிப்பு உள்ளதா! உடனே இந்த 3 பொருட்களை இப்படி பயன்படுத்துங்கள்!!

அரிப்பு தடிப்பு போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தும் பூஞ்சை நோய் அதாவது படர்தாமரை போன்ற சரும பிரச்சனைகளை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிமையாக குணப்படுத்தலாம். அதை எவ்வாறு செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் அந்தரங்க பகுதிகளில் மற்றும் உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு, தோல் உரிதல் போன்ற சருமப் பிரச்சனைகள் பலவிதமான தொந்தரவுகளை தருகின்றது. இந்த பிரச்சனையை எளிமையான வீட்டு வைத்திய முறையை பயன்படுத்தி எவ்வாறு குணப்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

 

இந்த நோயை குணப்படுத்த இந்த பதிவில் கூறப்படும் மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.

 

* முதலில் நம் அந்தரங்க பகுதி அதாவது இரண்டு தொடைகளும் சேரும் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அந்தரங்க பகுதி எப்பொழுதும் ஈரப்பதம், வெப்பம், வியர்வை ஆகியவை அதிகமாக இருக்கக் கூடிய இடமாகும். எனவே இந்த பகுதியில் தேவையான அளவு ஈரப்பதமும், வெப்பமும் இருப்பதால் இந்த நோய்த் தொற்று எளிமையாக தாக்கி விடுகின்றது. அது போல சிறுநீர் உறுப்பு அங்கு இருப்பதால் சிறுநீரில் இருக்கும் கிருமிகளும், ஆசனவாய் இருப்பதால் மலத்தில் இருக்கும் கிருமிகள் அந்தரங்க பகுதியை எளிமையாக பாதிக்கின்றது. எனவே இந்த நோய் தொற்று பரவாமல் இருக்க ஒரு நாளுக்கு இரண்டு முறை அந்தரங்க பகுதியை சுத்தம் செய்ய வேண்டும். அது போலவே ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழிக்கும் பொழுது அந்த பகுதியை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

 

* இரண்டாவதாக நம் அந்தரங்க உறுப்பு இருக்கும் பகுதியில் முடி இல்லாமல் இருக்க வேண்டும். அல்லது குறைவாக முடி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். முடி குறைவாக இருந்தால் வியர்வை சுரப்பது குறையும். இதனால் இந்த பாக்டீரியா பூஞ்சை தொற்று ஏற்படுவது குறையும்.

 

இதை தடுக்க பயன்படுத்தப்படும் அந்த மூன்று பொருட்கள்…

 

* இந்த பூஞ்சை தொற்றை குணப்படுத்த நாம் தயிரை பயன்படுத்தலாம். அதாவது நன்கு புளித்த தயிரை உங்கள் உடலில் எங்கு எல்லாம் இந்த நோய் தொற்று இருக்கிறதோ அங்கு எல்லாம் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து கழுவி விடலாம். இந்த தயிரில் இருக்கும் அசிடிக் தன்மை பாக்டீரியா கிருமிகளை அழிக்கக் கூடிய தன்மை கொண்டது. இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.

 

* இரண்டாவதாக மைதா மற்றும் எலுமிச்சையை நாம் இந்த நோய்த் தொற்றை குணப்படுத்த பயன்படுத்தலாம். அதாவது 100 கிராம் மைதா மாவையும் உலர்ந்த எலுமிச்சை தோலின் பொடியையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை இரவு அல்லது பகல் எதாவது ஒரு நேரத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இதை கழுவி விடவேண்டும். எலுமிச்சையையும் மைதா மாவையும் சேர்த்து பயன்படுத்தும் பொழுது பாக்டீரியா தொற்று ஏற்பட்ட இடத்தில் இருக்கு இறந்த செல்கள் நீங்கி புது செல்கள் உற்பத்தியாக உதவி செய்கின்றது. மேலும் இரத்த ஓட்டத்தையும் சரியாக இருக்க உதவி செய்கின்றது.

 

* மூன்றாவதாக இந்த நோய்த் தொற்றை குணப்படுத்த நாம் அதிகமாக பயன்படுத்தும் பூண்டு தான். பத்து பூண்டு பற்களை எடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு கடைகளில் கிடைக்கும் விட்டமின் ஈ கேப்சியூல் மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு இந்த மாத்திரையை பிரித்து அதில் இருக்கும் சாறையும் அரைத்து வைத்துள்ள பூண்டு சாறையும் கலந்து நோய்த் தொற்று இருக்கும் பகுதியில் தேய்த்து விட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து இதை கழுவி விடலாம்.

 

இந்த மூன்று மருத்துவ முறைகளையும் பயன்படுத்த வேண்டும். இதனால் பக்க விளைவுகள் ஏற்படாது. இந்த மூன்று மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம். வாரம் ஒரு மருத்துவமுறை என்று பயன்படுத்தலாம். அல்லது ஒரே ஒரு மருத்துவ முறையையும் தொடர்ந்து பயன்படுத்தலாம்.