உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

0
43

உணவு தரமாக இல்லையா?? இனி 5 லட்சம் வரை இழப்பீடு பெறலாம்!!

இன்று பெரும்பாலும் மக்கள் கடைகளில் சமைத்த உணவு பண்டங்களை தின்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்று உள்ள காலகட்டத்தில் சமைப்பதற்கு கூட நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு உணவகங்கள் என்பது மிகவும் பெரிதான ஒன்றாக இருக்கின்றது.

மேலும் உணவகங்களில் நமக்கு பிடித்த எதிர்பார்த்த சுவையுடன் இருக்கும் என்பதாலும் பலர் உணவகங்களை தேடி சென்று உண்ணுகின்றனர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்திற்காக உணவகங்களை தேடிச் சென்று உண்ணுகின்றனர்.

ஆனால் அங்கு சில சமயங்களில் தரமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படவில்லை என்றால் என்ன செய்வது என்று உங்களுக்கு தெரியவில்லையா? இந்த தகவல்கள் உங்களுக்காக.

அதற்கும் முறையாக நீங்கள் அந்த உணவகத்தை பற்றி புகாரை தெரிவிக்க வேண்டும். இதற்கெல்லாமா புகாரை தெரிவிப்பார்கள் என்றால் the prevention food adulteration act 1954 என்ற சட்டத்தின் படி நீங்கள் சாப்பிடும் உணவில் பூச்சி உள்ளது, அல்லது கலப்படம் செய்து இருக்கிறார்கள் ,அதை சாப்பிட்டு உங்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட்டது, குடிக்கும் தண்ணீரில் சரியில்லை, எக்ஸ்பீரியரான பொருட்களை விற்பது ,விற்கப்படும் பாக்கெட்களில் எக்ஸ்பீரியன்ஸ் டேட் இல்லை, மேனுஃபேக்சர் டேட் இல்லை போன்ற அனைத்திற்குமே புகாரை தெரிவிக்கலாம்.

இது மட்டுமல்லாமல் விளம்பரத்திற்காக பொய்யான தகவல்களை கூறி விற்கப்படும் பொருட்கள் மற்றும் நிறுவனத்தின் மீதும் புகாரை தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிக்க பல வழிகள் உள்ளது அதில் மிகவும் சுலபமான வழி அவர்கள் அதிகாரப்பூர்வமான வாட்சப் எண் 9444042322 க்கு புகாரை தெரிவிக்கலாம்.

இவற்றின் மூலம் உங்கள் புகார் சென்னை மாநகரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு எந்த மாவட்டம் மற்றும் எந்த நிறுவனம் என்பதை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது மட்டுமல்லாமல் அவர்களது அதிகாரப்பூர்வ foscos.fssai.gov.in இன்று இணையதளத்தில் நீங்கள் எந்த ஊர் மற்றும் நிறுவனம் முதலிய விவரங்களை உள்ளிட்டால் போதும் உங்களது புகார் பதிவாகிவிடும்.

இதுவே நீங்கள் அந்த உணவை சாப்பிட்டு இறந்து விட்டீர்கள் என்றால் அந்த நிறுவனம் உங்களுக்கு 5 லட்சம் வரை இழப்பீடு தர வேண்டும். நீங்கள் சிகிச்சை பெற்று வருகிறீர்கள் என்றால் ரூ 2 லட்சம் வரை இழப்பீடாக தர வேண்டும்.

அதுவே அந்த உணவின் மூலம் உங்களுக்கு பாதிப்பு மட்டும் ஏற்பட்டது என்றால் ரூ.1 லட்சம் வரை இழப்பீடு தர வேண்டும் இவை அனைத்தையும் 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும்.

author avatar
Parthipan K