உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!! 

0
115
#image_title
உங்களுக்கே தெரியாமல் ஹேக் செய்யும்!! மக்களே இந்த ஆப்களிடம்  இருந்து உஷார்!!
ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட் போன் இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான ஒன்று. பலருக்கும் பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு இதில் தான். வேலைலயும் கூட இதில் தான். இன்றைய நவீன காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் வழியாக பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.  சைபர் கிரைம் காவல்துறையினர் இணையதள குற்றவாளிகளை தேடி கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பினும் நாம் செல்போனில் பதிவிறக்கம் செய்யும் ஒருசில செயலிகள் மூலம் பணம் திருட்டு, பண இழப்பு போன்ற நிதி அபாயங்கள் நிறைய ஏற்படுகின்றன.
இதற்கெல்லாம் மேல், பெண்கள் தங்களின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றன. இதுவும் ஒரு ஆபத்தாகவே அவர்களுக்கு அமைகிறது.
குற்றவாளிகள் நாம் பயன்படுத்தும் ஒரு சில செயல்கள் மூலமாக நம் செல்போனை முழுவதுமாக ஹேக் செய்து நமது செல்போனில் உள்ள  அனைத்து படங்களையும் திருட்டுத்தனமாக எடுத்து தவறாக பயன்படுத்தும் நிகழ்வுகளும் அரங்கேறிய கொண்டு தான் வருகிறது.
இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விழிப்புணர்வு படங்கள், விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும் எந்தெந்த செயலி பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து தற்போது பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில்,
Fleckpe என்படும் செயலி மிகவும் அபாயகரமானது என்றும் அதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து,
# Impressionism Pro Camera
# GIF Camera Editor Pro
# HD 4K Wallpaper Fingertip Graffiti
# Microclip Video Editor
# Beauty Camera Plus
# Beauty Photo Camera
# Beauty Slimming Photo Editor
# Photo Camera Editor
# Photo Effect Editor
# Night Mode Camera Pro
# FIGHTING ANDROID MALW  போன்ற செயல்களை முற்றிலும் நாம் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள செயலிகளை நாம் எந்த ஒரு செயலியையும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலியை மட்டும் நன்கு ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும், லிங்க் மூலம் எந்த ஒரு செயலையையும் பயன்படுத்த வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
author avatar
CineDesk