வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0
79
#image_title

வரும் 16ம் தேதி வரை மழை இருக்கு! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்த மாதம் வரும் 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தற்பொழுது அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்பொழுது மிக்ஜாம் புயல் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி சென்றுள்ளது. இதனால் சென்னையில் சில பகுதிகளில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. தற்பொழுது சென்னை இதில் இருந்து மீண்டு வரும் நிலையில் கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக 16ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தற்பொழுது உள்ள நிலவரப்படி தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை.

அரபிக்கடலில் தென்கிழக்கு பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிகழ்ந்து வருகின்றது. மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் இல்லை. நேற்று(டிசம்பர்10) முதல் அதாவது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது.

மேலும் நீலகிரியில் 8 செ.மீட்டரும், மாஞ்சோலை, கன்னடியன் அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் 9 செ.மீட்டரும், சேரன்மகாதேவியில் 7 செ.மீட்டரும், மணிமுத்தாறு பகுதியில் 6 செ.மீட்டரும், அம்பாசமுத்திரம் பகுதியில் 5 செ.மீட்டரும், பவானி சாகர் பகுதியில் 4 செ.மீட்டரும், பேரையூர், தென்காசி, கொடுமுடியாறு ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.