கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்!

0
86

கோலி ஃபேக் பீல்டிங் விவகாரம்… ஹர்ஷா போக்ளே கொடுத்த விளக்கம்!

வங்கதேச அணிக்கு எதிராக கோலி, போலியாக பந்தை த்ரோ செய்வது போல சைகை செய்தார். ஆனால் இதை இரண்டு பேட்ஸ்மேன்களுமே கவனிக்கவில்லை. அதனால் கோலியின் இந்த சைகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல நடுவர்களும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் போட்டியிலோ வீரர்களிடமோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபற்றி வங்கதேச அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன் விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், இது கள நடுவர்களால் கவனிக்கப்படாமல் போனது மற்றும் அவர்களின் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அவரது அணிக்கு முக்கியமான ஐந்து பெனால்டி ரன்களைக் கிடைக்காமல் செய்தது. அதனால் வங்கதேச அணியின் வெற்றி பாதிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஆனால் இதுபற்றி பேசியுள்ள வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே “ ஃபேக் பீல்டிங் சம்பவத்தை பற்றி பேசும் போது கோலி, அதை செய்ததை யாருமே பார்க்கவில்லை. நடுவர்கள், எதிரணி வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என யாருமே பார்க்கவில்லை. அதனால் நடுவர் புகாரளிக்காமல் என்ன செய்யமுடியும். அதனால் வங்கதேச வீரர்கள் அது சம்மந்தமான குறை கூறிக்கொண்டு இருந்தால் வளரமுடியாது. யாராவது ஒரு பேட்ஸ்மேன் நிலைத்து நின்றிருந்தால் கூட இலக்கை எட்டியிருக்க முடியும்.” எனக் கூறியுள்ளார்.

ஃபேக் பீல்டிங் விவகாரத்தில் கோலிக்கு ஆதரவாகவே பலரும் பேசியுள்ளனர். முன்னதாக அதே போட்டியில் கோலி நோ பால் கேட்டு, அதன் பிறகு நடுவர் நோ பால் கொடுத்த போதும் வங்கதேச கேப்டன் ஷகீப் அல் ஹசன் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோலி விளக்கம் அளித்ததும் அவர் சமாதானம் ஆனார்.