வேப்பிலை மஞ்சள் தெளித்து பாதுகாப்பை உருவாக்கும் பெண்கள்! மகளிரை பாராட்டிய ராமதாஸ்! பகுத்தறிவாளர்கள் தலைமறைவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள பழந்தமிழர் மருத்துவமான கிருமிநாசினியை விரட்டும் வேப்பிலை மற்றும் மஞ்சளை தீவிரமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வரும் சூழலில் வருகின்ற 31 ஆம் தேதி வரை 144 தடையை தமிழக அரசு அமல்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு நாடு முழுக்க அடுத்த 21 நாட்களுக்கு தேசிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஊரடங்கு பற்றி அரசுகள் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் பலர் அதை மதிக்காமல் கொரோனாவின் ஆபத்தை உணராமல் பொதுவில் வலம் வருகின்றனர்.
இதனையடுத்து, வெளியே சுற்றிய நபர்களுக்கு சில மாவட்டங்களில் நூதன தண்டனைகளும் வழங்கப்பட்டன. கேரளாவில் ஒரே நாளில் 500 பேர் மீது வழக்கு பதியப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் இந்த வழக்கும் நூதன தண்டனையும் தொடரும் என கூறப்படுகிறது.வெளியில் சுற்றி திரிபவர்களை கண்டால் சுட்டுத் தள்ளவும் தயங்கமாட்டோம் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதும் நேற்று வைரலாக பரவியது.
இந்நிலையில், தங்கள் குடும்பத்தை கொரோனா ஆபத்தில் இருந்து பாதுகாக்க வீட்டு வாசலில் வேப்பிலை கொத்துகளும், வீட்டுக்கு வெளியே கிருமிநாசினிகளை அழிக்கும் பழந்தமிழர் மருத்துவமான மாட்டு சாணத்தை கரைத்து தெளித்து வருகின்றனர். இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குழந்தைகளையும், குடும்பத்தையும் பாதுகாத்து வருகின்றனர்.
இதனை பாராட்டும் விதமாக “ஆக்கும் சக்தியும் காக்கும் சக்தியும் பெண்கள்தான்” என்று பாமக வின் ராமதாஸ் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ஊரடங்கு உத்தரவை வீட்டளவில் செயல்படுத்தும் கடைமையும், பொறுப்பும் இல்லத்து அரசிகளுக்கு உண்டு. பெண்கள் வீட்டையும், நாட்டையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மற்றும் இராணிப்பேட்டையில் களத்தில் இறங்கி வேப்பிலை தோரணம் கட்டுவதும், மஞ்சள் நீரை தெருக்களில் தெளித்தும் கொரோனா தொற்றில் இருந்து தங்களது பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். குடியாத்தம் பகுதியில் டேங்கர் லாரியில் மஞ்சள், சாணம் மற்றும் உப்பு கலந்த தண்ணீரை பாதுகாப்பிற்காக இளைஞர்கள் தெருக்களில் திறந்துவிட்டு வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய முறைகளை அடிக்கடி பகுத்தறிவு என்கிற பெயரில் மூடநம்பிக்கை என முத்திரை குத்திய போலி பகுத்தறிவு பேசும் நபர்கள் பலரும் கொரோனாவுக்கு பயந்து பகுத்தறிவு பேசாமல் வீட்டில் தலைமறைவாகி இருக்கின்றனர். தமிழரின் வழிபாட்டில் கடத்தப்பட்ட வேப்பிலை, மஞ்சளின் மரபுவழி மருத்துவத்தை புரியாமல் பேசிய பிழைப்புவாத பகுத்தறிவாளர்களுக்கு இதுபோன்ற இல்லத்தரசிகளின் கொரோனா பாதுகாப்பு செயல்பாடுகள் சாட்டையால் அடித்தது போலவும், அவர்களின் முகத்தில் கரியை பூசியது போலவும் அமைந்துள்ளது.