Thursday, November 14, 2024
Home Blog Page 4889

கொரோனா பாதிப்பின் உச்சத்தில் 16 நாடுகள் : குழந்தைகளை காப்பாற்ற அதிரடி நடவடிக்கை

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவலாக 110000 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. இதுவரை 3900 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

நோய்தொற்று ஏற்படாமல் இருக்க உலக சுகாதார மையம் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்துவருகிறது. கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகம் முழுக்க 16 நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது தவித்து வருகிறது. இதனால் அந்த நாடுகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது.

இதன் மூலம் குழந்தைகளை வைரஸ் தொட்டில் இருந்து காப்பாற்ற முடியும் என்று நம்பப்படுகிறது.

தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி.நட்டா

தமிழக பாஜக தலைவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு. – ஜே.பி.நட்டா

தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவியை 2014 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்தார். இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை பதவியேற்ற நிலையில், தமிழக பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

இந்த நிலையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்து வரும் எல்.முருகன் என்பவர், தமிழகத்தின் பாஜக தலைவர் பதவிக்கு நியமனம் செய்வதாக பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த பதவிக்கு பாஜக கட்சியின் பல்வேறு மூத்த தலைவர்கள் இடம் பெறலாம் என்கிற பேச்சுகள் பொய்யாகின.

இப்பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பலரின் பெயர்கள் கூறப்பட்ட நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவர் தேர்வு பலரை யோசிக்க வைத்துள்ளது. தமிழ்நாட்டில் பாஜவிற்கு ஆதரவாக செயல்படும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சமீபத்திய நாட்களில் பாஜகவில் இணைந்துள்ள நடிகர் ராதாரவி, இயக்குனர் பேரரசு போன்றோர் தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்குவங்கியை உயர்த்துவார்களா அல்லது மீண்டும் தேர்தலில் நோட்டாவுடன் சண்டை நடக்குமா என்பது வருகிற சட்டமன்ற தேர்தலில் அறியலாம்.

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

0

கணவனுக்கு தெரியாமல் நண்பனை வளைத்துபோட்ட மனைவி! ஆதாரத்தை வெளியிட்டு வேதனையில் தற்கொலை!

தாலிகட்டிய புருஷனுக்கு தெரியாமல் அவரது நண்பருடன் தவறான உறவு வைத்திருந்த காரணத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுனநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், தனது எதிர்கால நலன் கருதி புதிய குடும்பத்தை ஆரம்பிக்க இரண்டாவதாக பெண் பார்த்து அருணா என்பவரை மகேஷ் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இவர்களின் குடும்பத்தில் நண்பனின் மூலம் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. இந்த பிரச்சினை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி மகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு தன்னுடைய இறப்பிற்கான காரணத்தை ஆடியோ மூலம் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோவில், எனது மனைவி அருணா என்னுடைய நண்பனாக இருந்த மதன் என்பவனுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதை அறிந்து அவர்களிடம் கண்டித்த போது என்னை கொன்று விடுவதாக மிரட்டல் விடுக்கின்றனர். இப்பிரச்சினை சம்பந்தமாக ஆறுமுகநேரி காவல்லையத்தில் புகார் கொடுத்தேன். என்னுடைய புகாரை ஏற்காமல் காவல்துறையினர் என்னை திருப்பி அனுப்பினர். எனது மனைவியும், நண்பனும் சேர்ந்து எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதனால் என் வாழ்க்கையும், குடும்பமும் சிதைந்துவிட்டது.

அருணா மற்றும் ரதன் மீது நடவடிக்கை எடுங்கள், எனது குழந்தைகளை என் அம்மா வீட்டில் ஒப்படைத்து விடுங்கள் என்று அந்த ஆடியோவில் உருக்கமாக கூறியுள்ளார். இந்த ஆடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நவீன காலத்தில் குடும்பத்தை சிதைக்கும் இதுபோன்ற சம்பவங்கள் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய பிரதேச ஆட்சியில் குழப்பம் ஏற்படக் காரணம் சசிகலா தான் : முறியடிக்குமா காங்கிரஸ்?

0

மத்தியபிரதேச மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில நாட்களாக நெருக்கடி சூழ்ல் நிலவுகிறது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவரான கமல்நாத் முதல்வர் பதவியை வகித்து வருகிறார்.

மத்திய பிரதேச காங்கிரஸின் தலைவர் பதவியில் இருந்து கமல்நாத்தை நீக்கிவிட்டு அதனை கைப்பற்ற ஜோதிர் ஆதித்யா சிந்தியா முயற்சி செய்து வருகிறார். கமல்நாத் மூத்த தலைவர் என்பதால் காங்கிரஸ் தலைமை இதனை ஏற்க மறுத்துவிட்டது.

இதனையடுத்து ஜோதிர் ஆதித்ய சிந்தியா 17 எம்எல்ஏக்களுடன் மாயமானதாக தகவல்கள் வெளியானது. இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டது.

இதில் திடீர் திருப்பமாக ஜோதிர் ஆதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகுவதாக கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதே நேரத்தில் காங்கிரஸ் தலைமையும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது.

இந்த நிலையில் ஜோதிர் ஆதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மையை இல்லாமல் பாஜகவுக்கு பெரும்பான்மை சூழலையும் உருவாக்கியது.

இதனையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் 107 பேரும் கலந்து ஆலோசித்தனர். அதன் பிறகு அனைவரும் 5 சொகுசு பேருந்துகளில் ஏறி டெல்லி புறநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.

பரபரப்பான இந்த சூழலில் மேலும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யாமல் இருக்க காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி காங்கிரஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் 92 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு புதிய நிகழ்வுகள் கிடையாது. கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலா ஆட்சி அமைக்க தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்க வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா கையாண்ட இந்த பாணியையே மத்திய பிரதேச காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் பின்பற்றி வருவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது! தாயும் மகளும் உடல் கருகிய அதிர்ச்சி சம்பவம்!

நாட்டு வெடிகுண்டு திடீரென வெடித்தது! தாயும் மகளும் உடல் கருகிய அதிர்ச்சி சம்பவம்!

நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு செய்தவர் வீட்டில் திடீரென விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வசித்து வந்த பாண்டியம்மாள் என்பவர், தனது மகள் நிவிதாவுடன் சேர்ந்து வீட்டில் நாட்டு வெடிகளை உற்பத்தி செய்து விற்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவரது கணவர் சில வருடங்களுக்கு முன்னதாக இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

கணவர் செய்த நாட்டுவெடி தயாரிப்பு தொழிலை செய்து வந்த பாண்டியம்மாளின் வீட்டில், எப்போதும் போல நாட்டு வெடி தயாரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் உற்பத்தி செய்யப்பட்ட நாட்டு வெடி வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் பாண்டியம்மாள் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர். வீடுகள் இடிந்து விழுந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய நிவிதாவை அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தால் எதிர்பாராதவிதமாக நிவிதா பாதிவழியிலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்கிடையே தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து உடனடி மீட்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடி விபத்து சம்பவத்தில் தாயும்,மகளும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறைந்த விலைக்கு வாங்கி கொள்ளை லாபம் அடிப்பதா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

0

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;
உலக அளவிலான பொருளாதார மந்தநிலை காரணமாகவும், எண்ணெய் உற்பத்தி நாடுகளிடையிலான போட்டி காரணமாகவும் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்து வருகிறது. ஆனால், உள்நாட்டு சந்தையில் அதற்கு இணையாக பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்படாதது ஏமாற்றமளிக்கிறது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த கொள்ளை லாபப்போக்கு கண்டிக்கத்தக்கது.

உலகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக பொருளாதார மந்தநிலை நிலவி வந்த சூழலில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்றுமதி குறைந்ததால் அனைத்து நாடுகளிலும் உற்பத்தி பெருமளவில் குறைந்திருக்கிறது. இதனால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்துள்ள நிலையில், சவுதி அரேபியா உற்பத்தியை அதிகரித்திருப்பதால் போட்டி காரணமாக கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஆனால், அதன் பயன்களை நுகர்வோருக்கு வழங்க எண்ணெய் நிறுவனங்கள் மறுக்கின்றன.

கச்சா எண்ணெயின் விலை உலக சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக இருந்தன. மார்ச் 10&ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 30.20 டாலராக குறைந்து விட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை ரூ.73.28, ரூ.65.59 என்ற அளவில் தான் குறைந்துள்ளது. இது உண்மையாக குறைக்கப்பட வேண்டிய விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை மிகவும் எளிதாக நிரூபிக்க முடியும். ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 61.13 டாலர் எனும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.35.65 ஆகும். இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்து தான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர் தான் என்பதால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 17.66 மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37&க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. இது மிகவும் அநியாயமாகும்.

அதேபோல், இன்றைய நிலையில் ஒரு லிட்டர் டீசலின் உற்பத்திச் செலவு ரூ.19.10 மட்டுமே. அதனுடன் மத்திய கலால் வரி ரூ.15.83, விற்பனையாளர் கமிஷன் ரூ.2.47 மற்றும் மாநில அரசின் 24.04 விழுக்காடு விற்பனை வரி ரூ.8.99 சேர்த்தால் ஒரு லிட்டர் டீசல் ரூ.46.39க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட ரூ.21.20 கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இயல்பாக விற்கப்பட வேண்டிய விலையை விட 50% அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்யப்படுவது நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது.

ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.17.66 மட்டுமே. ஆனால், அதைவிட 4 மடங்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அடக்கவிலையை விட அதிகமாக மத்திய அரசும், மாநில அரசும் வரி வசூல் செய்கின்றன. அதுமட்டுமின்றி, கச்சா எண்ணெய் விலை குறைவை கணக்கில் காட்டாமல் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்கவிலை ரூ.32 என எண்ணெய் நிறுவனங்கள் கணக்கு காட்டுகின்றன. இந்த வகையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.15 மறைமுக லாபம் கிடைக்கிறது. இந்த மறைமுக லாபத்தின் பெரும் பகுதியை அரசின் கணக்கில் சேர்க்கும் வகையில் கலால் வரியை கணிசமாக, அதாவது குறைந்தது ரூ.10 வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இப்போதே ஒரு லிட்டருக்கு ரூ.19.98, டீசலுக்கு ரூ.15.83 வீதம் மத்திய அரசு கலால் வரி வசூலிக்கிறது. இதில் பெட்ரோல் மீதான கலால் வரி 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 13.47 ரூபாயும் 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016 ஜனவரி மாதம் வரையிலான 15 மாதங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்த போது, அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்காமல் இருந்ததன் மூலம் உயர்த்தப்பட்டவை ஆகும். இப்போது இன்னும் கூடுதலாக ரூ.10 கலால் வரியை உயர்த்த நினைப்பது ஏற்க முடியாததாகும். பொருளாதார மந்த நிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பயன்கள், பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்படக்கூடிய சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.

எனவே, கச்சா எண்ணெயின் விலை சரிவைக் கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு தலா ரூ. 20 வீதம் குறைக்க மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் முன்வர வேண்டும். இனி வரும் காலங்களில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திரௌபதி படத்தை பார்த்து பாராட்டிய பிரபல அமைச்சர் – இன்ப அதிர்ச்சியில் படக்குழு!

0

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி படத்தை பார்த்து இயக்குனரையும் படக்குழுவினரும் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியதாவது;

‘இன்று #திரெளபதி படம் பார்த்தேன்.

பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.

இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்’ என்று அதில் கூறியுள்ளார்.

இதனால் படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.


https://twitter.com/RajBhalajioffl/status/1237439099650236416?s=20

பணத்தை தூக்கி போடுங்க பண்ட மாற்று முறைக்கு வாங்க : கலாய்க்கும் நெட்டிசன்கள்

0

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 38 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேற்கொண்டு பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு கொரோனா வைரஸைப் பற்றி விழிப்புணர்வு நடவடிக்கைகள் செய்து வந்தாலும் மக்கள் பீதியிலேயே உறைந்துள்ளனர். இதற்கு காரணம் அன்றாடம் சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள் தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களிடையே கருத்து பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘பணத்தை எல்லாம் தூக்கிப் போடுங்கள் இதற்கு பதில் பண்டம் மாற்று முறையிலேயே வணிகம் செய்யலாம் வாங்க’ என்று கருத்து கூறி வருகின்றனர்.

நண்பேன்டா..!! விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் இரத்ததானம் செய்த இளைஞர்கள்! அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.?

நண்பேன்டா..!! விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் இரத்ததானம் செய்த இளைஞர்கள்! அவர்கள் சொன்ன முக்கிய காரணம்.?

சாலை விபத்தில் இறந்த நண்பனின் நினைவுநாளில் ரத்ததானம் வழங்கிய இளைஞரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த நிர்மல்குமார் என்பவர், கடந்த ஆண்டு சாலைவிபத்தில் சிக்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விபத்து ஏற்பட்டு உடலில் பலத்த காயமானதால் அதிக ரத்தம் வெளியேறியது.

இதனையடுத்து நிர்மலுக்கு உடனடியாக ரத்தம் வேண்டும் என்று மருத்துவர்கள் அவசரமாக தெரிவித்தபோது, நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சரியான நேரத்தில் ரத்தம் கொடுக்க முடியாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் நிர்மல் இறந்து ஓராண்டு நினைவாக நேற்று கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்து அனுசரிக்கப்பட்டது.

நிர்மலின் நினைவுநாளில் அவரது நண்பர்கள் மருத்துவமனையில் இரத்ததானம் கொடுத்தனர். இதுகுறித்து நிர்மலின் நண்பர்கள் கூறுகையில்; உரிய நேரத்தில் ரத்தம் கிடைக்காமல் போனதால்தான் எங்கள் நண்பன் உயிரிழந்தான், இனி அதுபோன்று ரத்தம் கிடைக்காமல் எந்த உயிரும் போக கூடாது என்கிற நல்லெண்ணத்தில் செய்கிறோம். இனி நிர்மலின் ஒவ்வொரு நினைவு நாளிலும் நாங்கள் ரத்ததானம் செய்யப்போவதாக கூறினர்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி பலரின் பாராட்டை பெற்று வருகிறது. நண்பன் என்றாலே ஒன்றாக சேர்ந்து குடிப்பது, ஊரைச்சுற்றுவது, சினிமா மற்றும் வெட்டி அரட்டை செயல்களை செய்துகொண்டு இருப்பார்கள் என்று ஒருபக்கம் பேசினாலும் நிர்மலின் நண்பர்களைப் போன்று சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நண்பன் இறந்தாலும் அதன் மூலம் நல்லது செய்யும் இவர்களை பலர் நண்பேன்டா..! என்று மகிழ்ச்சியுடன் அழைக்க வைத்துள்ளனர்.

இதை செய்தால் திமுகவில் பூகம்பம் வெடிக்கும்..? அதிமுக அமைச்சரின் பரபரப்பு பேச்சு!

இதை செய்தால் திமுகவில் பூகம்பம் வெடிக்கும்..? அதிமுக அமைச்சரின் பரபரப்பு பேச்சு!

திமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு யாரை நியமித்தாலும் அக்கட்சியில் பூகம்பம் வெடிக்கும் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.

திமுக கட்சியின் மூத்த தலைவர் க.அன்பழகன் நெடுங்காலமாக திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்துவந்த நிலையில் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இதையடுத்து அவரது பூதவுடல் மீது திமுக கட்சி கொடி போர்த்தப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இவரது மறைவிற்கு பிறகு திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்று பேச்சு எழுந்துள்ள நிலையில், அதிமுகவின் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் பேட்டி பகீர் தகவலை வெளிக்காட்டியுள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு அமைச்சர் பேசியதாவது;

திமுகவில் யாரை நியமித்தாலும் அந்த கட்சியில் பூகம்பம் வெடிக்கும். கிட்டத்தட்ட 47 வருடத்திற்கும் மேலாக திராவிட இயக்க அரசியலின் மூத்த தலைவராகவும், திமுகவின் பொதுச் செயலாளராகவும் அன்பழகன் இருந்தார். அவர் வகித்த பதவியை பற்றி யாரும் எதுவும் கூறுவதில்லை, ஆனால் அவரை முனைவர் என்றும் இனமான பேராசிரியர் என்று அக்கட்சியினர் சொல்வதுண்டு.

அன்பழகன் எப்போது இனமான பேராசிரியராக இருந்தார்.? பச்சையப்பன் கல்லூரியில் துணை பேராசிரியராக தானே இருந்தார். என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறுவார் என்று அமைச்சர் உதயகுமார் தனது பேட்டியில் கூறியுள்ளார். தற்போது திமுகவின் பொதுச் செயலாளராக யாரை நியமிக்கப் போகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.

திமுக புதிய பொதுச் செயலாளராக திமுக பொருளாளர் துரைமுருகனை நியமிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.