22 வயதில் ஊராட்சி தலைவர் பதவி! திருப்பூரை கலக்கும் விவசாயி மகள்..!!
கல்லூரி படிக்கும்போதே ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றது அனைவரையும் வியப்பில் அசத்தியுள்ளது.
திருப்பூர் குண்டடம் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயி மணிவேல் என்பவரின் மகள் முத்துப்ரியா, பொள்ளாட்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ பொறியியல் படிப்பை படித்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை அரசியலில் ஈடுபட்டு வந்த காரணத்தால் நவனாரி ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு, மற்றவர்களை விட 320 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றிக்கனியை பறித்துள்ளார். இதனால் நவனாரி கிராமத்தின் ஊராட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இவரது தந்தை மணிவேல் கூறுகையில்; விவசாய குடும்பத்தில் பிறந்து சிறுவயது முதலே முத்துப்ரியா சமூகசேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு வளர்ந்தவர் என்கிறார். மேலும், கல்லூரி படிக்கும்போதே சமூக சேவையில் முத்துப்ரியா ஈடுபட்டு வந்துள்ளார். தனது சொந்த கிராமத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் ஊராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
கிராமத்தில் அடிப்படை தேவையில் உள்ள குறைகளை முன்னின்று முடித்து வைப்பதும், தேவையான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த இளம் வயதில் ஒரு கிராமத்தின் முக்கிய பொறுப்பை தனது மகள் வகிப்பது தந்தை மணிவேலுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
உலகத்தின் பல்வேறு துறைகளில் பெண்கள் சாதித்து வந்தாலும் அதிகார பலம் கொண்ட அரசியல் மற்றும் தேர்தல்களிலும் குறிப்பாக இளம்பெண்கள் சாதிக்க முடியும் என்பதை முத்துப்ரியா நிரூபித்துள்ளார். 22 வயதில் ஊராட்சி தலைவராக ஒரு இளம்பெண் வெற்றி பெற்றிருப்பது இக்கால இளம் தலைமுறையினரிடம் பெரிய நம்பிக்கை ஏற்படுத்துகிறது.