Tuesday, November 19, 2024
Home Blog Page 5064

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

0

ஸ்மிருதி இரானி டிவீட்க்கு! கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்?

கடந்த ஒரு சில மாதகாலமாக வெங்காயத்தின் விலை படு உச்சத்தில் உள்ளன. விளைச்சல் குறைவாழும் அதிக மழை காரணமாகவும் வெங்காயத்தின் வரத்து கணிசமாக உயர்ந்துள்ளது.அதனால் அதன் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டே செல்கின்றது.

கடந்த சில நாட்களாக நூறைத் தொட்ட வெங்காயத்தின் விலை நேற்று முன்தினம் 150 தொட்டது மத்திய அரசும் வெங்காயத்தின் விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது.

வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டும் வெங்காயத்தின் விலை குறைந்தபாடில்லை வெங்காயத்தின் விலை குறைய ஏறக்குறைய இரண்டு மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே மக்கள் கண்ணில் தண்ணீர் வருகின்றது.

இது ஒருபுறமிருக்க கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இப்போது மத்திய அமைச்சராக உள்ள ஸ்மிருதி இரானி போட்ட ஒரு ட்வீட் இப்போது ட்ரெண்டாகி வருகிறது 2010ஆம் ஆண்டு வெங்காயத்தின் விலை 85 ஆக இருந்தது அதுவரை அந்த விலைதான் அப்போது உச்சப்பட்ச விலையாகக்கருதப்பட்டது.

அந்த சமயத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்து இருந்த ஸ்மிருதி இரானி ஒரு ட்வீட் செய்திருந்தார் அதில் வெங்காயம் வாங்குபவர்களை வருமானவரித்துறை உற்றுநோக்கி இருக்கிறது அதனால் யாரும் வெங்காயத்தை வாங்க வேண்டாம்.என்று ட்வீட் செய்து இருந்தார்.

85 ரூபாய்க்கே வருமானத்துறை உற்று நோக்குகிறது என்றால். இப்போது விற்கும் விலைக்கு வருமானத்துறை என்ன செய்யும் என்று நெட்டிசன்கள் அந்த ட்வீட்டை சுட்டிக்காட்டி கிண்டலடித்து வருகின்றனர்.

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

0

அமேசான் காட்டுக்கு தீ வைக்க சொன்னவர் பிரபல நடிகரா? அதிபரின் குற்றச்சாட்டால் பரபரப்பு

‘டைட்டானிக் படத்தின் ஹீரோ லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் காட்டிற்கு தீவைக்க பணம் கொடுத்தார் என பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ என்பவர் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலகம் முழுவதற்கும் 30% ஆக்சிஜனை கொடுக்கும் காடு என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் கடந்த ஆகஸ்டு மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ தற்செயலானது அல்ல என்றும் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருஇறது

இந்த நிலையில் ‘டைட்டானிக்’ பட நாயகன் லியாண்டோ டிகாப்ரியோ இந்த காட்டுத்தீ குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கவலை தெரிவித்ததோடு காட்டுத்தீயை அணைக்க 5 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ டைட்டானிக் நடிகர் லியாண்டோ டிகாப்ரியோதான் அமேசான் மழைக்காடுகளுக்கு தீவைக்க பணம் கொடுத்ததாக கூறினார்.. ஆனால் இந்த குற்றச்சாட்டை லியாண்டோ டிகாப்ரியோ மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘அமேசான் பகுதியில் பிரச்சினை ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், தங்களது இயற்கை வளத்தையும் பாரம்பரிய கலாசாரத்தையும் பாதுகாக்க போராடும் பிரேசில் மக்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஆதரவு தெரிவிக்கும் நேரத்தில், அமைப்புகளுக்கு நாங்கள் பண உதவி செய்வது கிடையாது. பிரேசில் மக்களின் எதிர்காலத்திற்காக அமேசானை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், கல்வியாளர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்’’ என தெரிவித்துள்ளார்.

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

0

எதிர்பார்த்தபடியே இன்னிங்ஸ் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா: பரிதாபத்தில் பாகிஸ்தான்

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே அடிலெய்டில் நடைபெற்று வந்த இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் வார்னர் 335 ரன்கள் குவித்த போதே ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருதப்பட்டது. எதிர்பார்த்தபடியே இந்த டெஸ்ட் போட்டி இன்று முடிவுக்கு வந்து ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது

இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து 589 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சில் 302 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான் அணி, ஃபாலோ ஆன் ஆகி, இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் மளமளவென விக்கெட்டுக்களை இழந்த ஆந்த அணி 239 ரன்களுக்கு அந்த அணி ஆட்டம் இழந்தது. இதை அடுத்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் மிக அபாரமாக விளையாடி முச்சதம் அடித்த டேவிட் வார்னர் ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றுள்ளது

பாகிஸ்தான் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து பரிதாபமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் லியான் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றிக்கு காரணமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி!

0

அடிலெய்டு டெஸ்ட் ஆஸ்திரேலியா வெற்றி!

ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் பகல்-இரவு டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வார்னர் முச்சதம் 335ரன்கள் , மார்கஸ் லபுஸ்சேன் சதமும்162ரன்களும் அடித்தனர். பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 302 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் நிலையை சந்தித்தது.

8-வது வீரராக களம் இறங்கிய பந்து வீச்சாளர் யாசிர்ஷா முதல் முறையாக சதம் அடித்தார். அவர் 113 ரன்னும், பாபர் ஆசம் 97 ரன்னும் எடுத்தனர். ஸ்டார்க் 6 விக்கெட்டும் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

387 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 3 விக்கெட் இழப்புக்கு 39 ரன் என்ற பரிதாபத்தில் இருந்தது.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 248 ரன் தேவை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் பாகிஸ்தான் தொடர்ந்து ஆடியது.

தொடக்க வீரர் ஷான் மசூத்தும், ஆசாத் சபீக்கும் 4-வது விக்கெட்டுக்கு கடுமையாக போராடினார்கள். பாகிஸ்தான் 32.1 ஓவர்களில் 100 ரன்னை தொட்டது. 82 ஆம் ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 239 க்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி பாகிஸ்தானை வென்றது. ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் லயன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

0

பரபரப்பான இறுதிப்போட்டி: ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வி

சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் அஸ்வின் கடைசி வரை களத்தில் இருந்தும் அந்த அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் கர்நாடக அணி சாம்பியன் பட்டம் பெற்றது

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த சையது முஸ்டாக் அலி அகமது கோப்பையின் இறுதியாட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக அணி நேற்று மோதியது. இதில் டாஸ் வென்ற தமிழக அணி முதலில் பந்துவீசியதை அடுத்து கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்து 180 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 181 என்ற இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது

தமிழக அணி கடைசி ஓவரில் 12 ரன்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில் அஸ்வின் மற்றும் ஷங்கர் களத்தில் இருந்தனர். முதல் இரு பந்துகளை அஸ்வின், பவுண்டிரிக்கு விரட்டியதால் 4 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை இருந்தது. இந்த நிலையில் 4வது பந்தில் அஸ்வின் ஒரு ரன் எடுக்க, 5வது பந்தில் ஷங்கர் அவுட் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின் ஒரே ஒரு பந்தில் 3 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் கடைசி பந்தில் அஸ்வின் ஒரு ரன் மட்டுமே எடுத்ததால் தமிழக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கோப்பையை நழுவ விட்டது

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

0

நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறையை நடைமுறைப் படுத்தப்படும் வகையில் கடந்த ஜூலை 2017 ஆம் ஆண்டு இரண்டு மாதம் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது பல்வேறு நேரடி மற்றும் மறைமுக வரிகளை ஒன்றாக இணைத்து இந்த ஜிஎஸ்டி முறை உருவாக்கப்பட்டது.

மாதம்தோறும் சேகரிக்கப்படும் இந்த வரியில் மொத்த தொகையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது அந்த வகையில் கடந்த நவம்பர் மாதம் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வரி தொகையின் விவரங்களை நேற்று மத்திய அரசு வெளியிட்டது.


ஜிஎஸ்டி வசூல் தொகை ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 492 கோடியாகவும் இதில் மத்திய ஜிஎஸ்டி தொகை 19192 கோடியாகவும் மாநில ஜிஎஸ்டி 27 ஆயிரத்து 144 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி தொகை 49 ஆயிரத்து 8 கோடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்து இருப்பது இது 8-வது முறையாகும் அதேநேரம் மூன்றாவது மிகப்பெரிய மாதாந்திரவசூல் எனவும் மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

0

மத்திய பல்கலை கழகத்தில் மாணவி தூக்குபோட்டு தற்கொலை!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் அருகேயுள்ள நீலக்குடி தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் மைதிலி வயது 19 ஒருங்கிணைந்து பிஎஸ்சி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் இரவில் உணவு சாப்பிட வரவில்லை என தெரிகிறது இதையடுத்து சக மாணவிகள் அறைக்குச் சென்று பார்த்தனர் அப்போது மைதிலி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைக் கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதன்பேரில் போலீசார் பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மாணவி தொடர்பாக அவரது நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்களிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து ஊரில் வசிக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர்.

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

0

நீட் நுழைவுத்தேர்வு எப்போது?

இளநிலை மருத்துவ படிப்புக்கு சேருவதற்கான நீட் (National Eligibility cum Entrance Test)எனப்படும் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் இன்று மாலை4மணியிலிருந்து விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை https://ntaneet.nic.in என்ற இணைய முகவரியில் பெற்றுக்கொள்ளலாம்.
இளநிலை மருத்துவ படிப்பு களான எம்பிபிஎஸ் பிடிஎஸ் பி ஹெச் எம் எஸ் ஆயுர்வேதா சித்தா போன்ற மருத்துவ படிப்புகளுக்கு சேர்வதற்கான நீட் என்னும் நுழைவுத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது அதற்கான விண்ணப்பங்கள் இன்று மாலை 4 மணிமுதல் விநியோகிக்கப்படுகின்றன.

விண்ணப்பத்திற்கான கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் ஓ. பி. சி. பிரிவினர்களுக்கு ஆயிரத்து 400 ரூபாயாகவும் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிட பிரிவினர்களுக்கு 750 என்ற விலையில் விநியோகிக்கப்படுகின்றன Gst கட்டணம் தனி.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கொடுக்கப்பட வேண்டிய கடைசி நாள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி ஆகும்.

மார்ச் 27-ஆம் தேதி மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் வழங்கப்படும் மே 3ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும். மத்திய மருத்துவ உயர் கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ் மற்றும் ஜிப்மரில் மருத்துவ படிப்பிற்க்கு நீட் நுழைவுத் தேர்வு வழியாக தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

0

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பில் தமிழக அரசின் தந்திரம்: அதிர்ச்சியில் கூட்டணி கட்சிகள்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தயக்கம் காட்டி வந்தன என்பது தெரிந்ததே. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரித்துக் கொடுப்பதில் தர்மசங்கடம் ஏற்படும் என்பதால், கூட்டணியும் பிளவு ஏற்படும் என்றும் இதனால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாதிப்பு ஏற்படும் என்பதால் இரண்டு பெரிய கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன

இந்த நிலையில் இன்று சற்று முன்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த தேர்தல் தேதிகள் தந்திரமாக நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல் தேதி மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் மூலம் உள்ளாட்சி தேர்தலை நடத்திய மாதிரியும் ஆயிற்று, கூட்டணி கட்சிகளை சமாளித்தது மாதிரியும் ஆயிற்று என்பதுதான் தமிழக அரசின் தந்திரமாக உள்ளது. நகராட்சி மற்றும் மாநகராட்சி தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிரச்சனை வரும் என்பதால் அந்த தொகுதிகளுக்கான தேர்தலில் தேதி மட்டும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நடவடிக்கையால் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே நிம்மதி அடைந்துள்ளதாக அக்கட்சிகளின் வட்டாரங்கள் கூறுகின்றன

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் விபரங்கள் இதோ:

வேட்புமனு தாக்கல்: டிசம்பர் 6 முதல் டிசம்பர் 13 வரை
வேட்புமனு பரிசீலனை: டிசம்பர் 16
வேட்புமனு வாபஸ் பெற கடைசி தினம்: டிசம்பர் 18
வாக்குப்பதிவு: டிசம்பர் 27 மற்றும் 30
வாக்கு எண்ணிக்கை: ஜனவரி 2

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

0

சிம்புவிடம் 80 நாட்கள் தொடர்ச்சியாக கால்ஷீட் வாங்கிய தயாரிப்பாளர்!

நடிகர் சிம்புவுடன் தொடர்ச்சியாக பத்து நாட்கள் கால்சீட் வாங்குவதே பெரிய விஷயம் என்றும், அந்த பத்து நாட்களிலும் அவர் படப்பிடிப்பிற்கு வருவது அதைவிட பெரிய விஷயம் என்றும் கோலிவுட்டில் கூறப்படுவது உண்டு

இந்த நிலையில் ’மாநாடு’ படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவிடம் தொடர்ச்சியாக 80 நாட்கள் கால்ஷீட் வாங்கி உள்ளாராம். வரும் ஜனவரி 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை தொடர்ச்சியாக ’மாநாடு’ படத்திற்காக சிம்பு கால்ஷீட் கொடுத்து இருப்பதாகவும், இந்த 80 நாட்களில் இந்த படத்தில் தனது பகுதிக்கான படப்பிடிப்பு மொத்தத்தையும் முடித்துக் கொடுத்து விடுவதாக என்று சிம்பு வாக்குறுதி கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

மேலும் இந்த படத்தில் முதன்முதலாக சரியாக படப்பிடிப்புக்கு வருவேன் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருப்பதாகவும், எனவே இந்த படம் இனிமேல் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடக்கும் என்றும் படக்குழுவினர் கூறிவருகின்றனர்

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், சிம்பு நடிக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் இரண்டு பேர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது