Saturday, November 16, 2024
Home Blog Page 5096

ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி

0

ஸ்டாலின் வியூகத்தை இராமதாஸ் என்ற பிரம்மாஸ்திரம் மூலம் காலி செய்த எடப்பாடி

சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக மீண்டும் பழைய கம்பீரத்தோடு பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன 44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியிலிருந்து புதிதாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் வசம் படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி மிகப் பெரிய தோல்வியைத் தழுவியது இத்தோடு அதிமுக காலி என்று அனைவராலும் பேசப்பட்ட நிலையில் இந்த இடைத்தேர்தல் வெற்றி அதிமுகவை உற்சாகப்படுத்தி உள்ளது.திமுகவை கதிகலங்க வைத்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுகவிடம் இருந்து கைப்பற்றியது அதிமுக. எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று கணக்கு போட்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளதாக தெரிகிறது.

காரணம் விக்கிரவாண்டி தொகுதியில் மிகப் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஆகும். இதன் காரணமாக பாட்டாளி மக்கள் கட்சி அங்கு செல்வாக்குமிக்க கட்சியாக விளங்கி வருகிறது, ஆளும் அதிமுகவை பொறுத்தவரை அமைச்சர் சி.வி சண்முகம் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் வன்னியர்கள் அவருக்கு 100% ஆதரவளித்தனர்,

திமுக தோல்வி அடைந்ததற்கு முக்கிய காரணங்கள் நிறைய இருக்கின்றன. விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வன்னியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர், அதிமுகவை பொருத்தவரை சி.வி சண்முகம் தான் மாவட்ட செயலாளர், அவரை சில காலம் ஒதுக்கி வைத்திருந்த ஜெயலலிதா அவர்கள் லட்சுமணன் அவர்களை மாவட்ட செயலாளராக நியமித்தார், அவரும் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் தான். அரசியல் விவகாரங்களில் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரடியாக வன்னியர்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தந்திரத்தோடு செயல்பட்டார்.

திமுக நிலைப்பாடே வேறு, விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த திமுக மாவட்ட செயலாளராக பொன்முடி இருந்த காலகட்டத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் அளிக்க மாட்டார், இதனால் அவர் மீது வன்னியர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர், அவர்‌ சார்ந்த சமுதாயத்தை மட்டும் பதவியை அலங்கரிக்க வேண்டும் என்று நினைப்பவர்.

விழுப்புரம் மாவட்டத்தை கட்சி அமைப்பு ரீதியில் திமுக மூன்றாகப் பிரித்த போது வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் கூட மாவட்ட செயலாளராக நியமிக்கப் படவில்லை. இது அம்மாவட்டத்தில் உள்ள திமுக வன்னியர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது, பொன்முடி உடையார் சமுதாயம், மஸ்தான் முஸ்லிம் சமுதாயம், அங்கையற்கண்ணி யாதவர் சமுதாயம், இதனால் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று கொந்தளித்து வந்தனர்.

பாமகவின் செல்வாக்கு மிக்க தொகுதி என்பதால் அதன் முழு வாக்குகள் அதிமுகவிற்கு சென்றுவிட்டால் தாங்கள் நிச்சயம் தோல்வி அடைவோம் என்று திமுகவினருக்கு ஒரு அச்சம் இருந்தது, இதன் காரணமாகவே திமுகவில் உள்ள முக்கிய வன்னிய பிரமுகர்களை பிரதானப்படுத்தி சட்டமன்ற பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது. ஜெகத்ரட்சகன், துரைமுருகன், பன்னீர்செல்வம் போன்றவர்களை பாமக நிறுவனர் ராமதாஸுக்கு எதிராக பேசவிட்டு காடுவெட்டி குரு குடும்பத்திற்கு துரோகம் செய்துவிட்டார் என்றெல்லாம் பேசி வன்னிய இளைஞர்களை தங்கள் பக்கம் இழுக்க பார்த்தனர். ஆனால் காடுவெட்டி குருவுக்கு என்றும் தந்தையாக ராமதாஸ் தான் செயல்பட்டார் என்பதை ஆழமாக பதிந்து வைத்துள்ளனர். திமுக வன்னிய பிரமுகர்கள் ராமதாஸ் மீது சுமத்திய பழியை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, இதுவும் அவர்களின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் ராமதாஸ் அவர்களை பிரச்சாரத்தின் போது கிழவன் என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார். இது வன்னியர்களை கொந்தளிக்க வைத்தது. வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுப்பதாக அறிக்கை விட்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புள்ளி விவரங்களோடு பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் திமுக வன்னியர்களுக்கு செய்த துரோகத்தை பட்டியலாக அறிக்கை வெளியிட்டார்.

ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால்தான் மணிமண்டபம் கட்ட முடியுமா ஏன் தற்போது கட்ட முடியாதா என்று கேள்விக் கணைகளால் மு.க.ஸ்டாலினை திணற வைத்தார், நூற்றாண்டு விழாவை கண்டுகொள்ளாமல் தனது சொந்த செலவில் தான் மகன் ஏ.ஜி.சம்பத் கொண்டாடினார் என்பதை வன்னியர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார் ராமதாஸ் அவர்கள்.

திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபட்டது பாமகவிற்கு சாதகமாக மாறியது அவர் பேசிய சரக்கு மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு என்ற புகழ்மிக்க வாசகத்தை சமூக வலைதளங்களில் மூலமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் காண்பித்தது மட்டும் அல்லாமல் தொகுதி முழுவதும் பரப்பி விட்டனர். அரக்கோணம் தொகுதியில் நான் வெற்றி பெற்றது காலணி மக்கள்தான் காரணம் என்று திருமாவளவனிடம் ஜெகத்ரட்சகன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது, இதனையும் சமீபத்தில் வைரலாக பரப்பிவிட்டனர் பாமகவினர்

ஸ்டாலின், மிகவும் எதிர்பார்த்த ஜெகத்ரட்சகன் என்னதான் செலவு செய்தாலும் தொகுதியில் செல்வாக்கு இல்லை என்பதை நாம் ஏற்கனவே கொடுத்த பதிவில் தெளிவாக எழுதி இருந்தோம்,

இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது ஜாதி ரீதியாகவே கையில் எடுத்தார்கள் அதிமுகவினர், எடப்பாடியும் இதற்கு பச்சைக் கொடி காட்டினார், மாவட்ட செயலாளர் பொன்முடியை பதவியிலிருந்து நீக்கினால் ஐந்து ஓட்டுப் போடுகிறோம் என்று சிவி சண்முகம் சொல்ல பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் பேசினார், அந்த அளவுக்கு ஒற்றுமையாக இருந்து செயல்பட்டனர் அதிமுகவும் பாமகவும்,

விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பதை பிரதானப் படுத்தியது தேர்தலில் திமுக வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு பெற்றுத்தருகிறோம் என்ற ஸ்டாலின் அறிக்கை எல்லாம் எடுபடாமல் போனதற்கு முழுக்க முழுக்க பாமக நிறுவனர் ராமதாஸ் தான் காரணம், தேர்தல் வியூகத்தை சரியாக கணித்து பாமகவின் பலத்தால் அதிமுகவை கம்பீரமாக வெற்றி பெற வைத்தார்.

காடுவெட்டி குரு மரணத்திற்குப் பிறகு வன்னியர்களை பாமகவிலிருந்து பிரித்து விடலாம் என்று நினைத்த திமுக வன்னிய பிரமுகர்கள் மற்றும் லட்டர் போர்டு கட்சிகளும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவால் கதி கலங்கி போய் உள்ளனர்.

விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம்

0

விக்கிரவாண்டியில் உண்மையான வெற்றி நாயகன் சி.வி சண்முகம்

தமிழக அரசியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணியே வென்றது இருப்பினும் இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொகுதி விக்கிரவாண்டி தான்.

அதற்கு காரணம் விக்கிரவாண்டியில் மிகப்பெரிய சமூகமாக வன்னியர் சமூகம் இருந்து வருவது தான் . அந்த சமூக வாக்குகளைக் குறிவைத்து திமுக ” நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் வன்னியர்களுக்கு MBC பிரிவில் உள் ஒதுக்கீடு தருவோம் ” என அறிவித்தது. வன்னிய இளைஞர்களிடம் பெறும் எதிர்பார்ப்பை இந்த அறிவிப்பு பெற்றது என்பது மறுப்பதற்கில்லை.

ஏற்கனவே பாராளுமன்ற பொது தேர்தலுக்கு பின் தனியாக நடைபெற்ற வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலிலும் திமுக வென்ற நிலையில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பு வன்னியர்களின் கோட்டையான விக்கிரவாண்டியிலும் எதிரொலிக்கும் என்பதே பெரும்பாலான அரசியல் நோக்கர்களின் கணிப்பாக இருந்தது. 2016ல் திமுக வென்ற தொகுதி என்பதும் கூடுதல் பலம்…

மேற்கண்டவை திமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்புக்கு சாதகமாகக் கருதப்பட்டாலும் மறுபுறம் அதிமுகவின் சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தின் சமீபத்திய எழுச்சி அதற்கு சிம்ம சொப்பணமாகவே அமைந்தது . எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவி ஏற்றது முதல் சி.வி. சண்முகம் முழு சுதந்திரமாக செயல்பட்டு வருகிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.

ஏற்கனவே பல தலைமுறைகளாக இருந்து வரும் வன்னிய சமூகத்தின் கோரிக்கையான #வன்னியர்நலவாரியத்தை அமைக்க அவர் மேற்கொண்ட முயற்சிகளும் அதில் அவர் வென்று காட்டியதும், கட்சியைக் கடந்து எல்லா தரப்பு வன்னியர்களிடத்தும் பாராட்டைப்பெற்றது. வன்னியர் சமூகத்தின் மாபெரும் அரசியல் தலைவரான மறைந்த தியாகி ராமசாமி படையாட்சியின் திருவுருவ படத்தை சட்டமன்றத்தில் திறந்ததும் அந்த சமூக மக்களிடையே சி.வி. சண்முகத்தின் இமேஜை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது..

ஏற்கனவே விக்கிரவாண்டி தொகுதி திமுகவின் வெற்றி தொகுதியாக இருந்தாலும், கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் விழுப்புரம் தொகுதியை திமுக வென்றிருந்தாலும், விழுப்புரத்தை ஒத்த வேலூரிலும் கடைசியாக திமுக வென்றிருந்து திமுகவினரை முழு நம்பிக்கையில் வைத்திருந்தாலும் அமைச்சர் சி.வி சண்முகத்தின் மீது வன்னியர் சமூகம் வைத்திருக்கும் நம்பிக்கையும், பாமகவுடன் மிக நெருக்கமாக அமைந்த கூட்டணியுமே விக்கிரவாண்டியில் அதிமுக 44,000 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெல்ல உதவி இருக்கிறது.

இந்த மாபெரும் வெற்றி மூலம் அதிமுகவில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக சி.வி. சண்முகம் உருவாக வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா?

0

நடிகர் விஜய்யின் அரசியல் பேச்சால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இவ்வளவு இழப்பா?

அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பிலும் உருவாகியுள்ள “பிகில்” திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை உலகம் முழுதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில்,சமீபத்தில் நடந்த பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் ஆளும் அதிமுக கட்சியை விமர்சிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இவருடைய அரசியல் ஆர்வத்தால் தானும் கதறி தொடர்ந்து தன்னை சார்ந்தவர்களையும் கதற விட்டு கொண்டிருக்கிறார். 

படத்தின் விளம்பரத்திற்காக அரசியல் கட்சிகளை விமர்சிப்பதையும், அவர்கள் நடத்தும் போராட்டங்களினால் இந்திய அளவில் விளம்பரம் அடைந்து, தொடர்ந்து வசூலை வாரிக் குவிப்பதையும் நடிகர் விஜய்யின் படங்கள் வழக்கமாக கொண்டுள்ளது. 

இந்நிலையில் தற்போது வெளியாகவுள்ள பிகில் திரைப்படத்திற்கும் அதே யுக்தியை பயன்படுத்திய நிலையில், இதை சுதாரித்து கொண்ட அரசியல் கட்சிகளோ இம்முறை மறைமுகமாக பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதாவது விஜய், அஜித், ரஜினி போன்ற நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் மட்டுமே பல கோடி ரூபாய் வரை வசூலை அள்ளிக் குவிக்கும் என்பதை அறிந்த ஆளும் கட்சி தலைமை இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது ஒளிபரப்பும் இந்த அதிகாலை சிறப்பு காட்சிகள் அரசின் அனுமதி பெற்ற பின்னரே திரையரங்குகளில் ஒளிபரப்பப்படும். இதன் காரணமாக நடிகர் விஜயை ஆர்ப்பாட்டம், போராட்டம் இன்றி, தங்களிடம் மன்னிப்பு கோர வைக்க, இந்த சிறப்பு காட்சிகளுக்கு நாசுக்காக தடை விதித்து விட்டது ஆளும் அதிமுக அரசு. 

ஏற்கனவே நூறு கோடிக்கு அதிகமாக தமிழக விநியோகஸ்த உரிமையை பிகில் படக்குழு விற்பனை செய்துள்ளது. இந்த நிலையில், வழக்கமாக ஒளிபரப்பாகும் சிறப்பு காட்சிகள் ஒளிபரப்பப்பட வில்லை என்றால், தாங்கள் வழங்கிய தொகையில் பாதியை திருப்பி தரவேண்டும்’ என விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து பலர் தயாரிப்பு நிறுவனத்துக்கு தொடர் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் இந்த அரசியல் பேச்சின் காரணமாக சுமார் 30 கோடி வரை தயாரிப்பு நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது

கடந்த காலப் படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

0

கடந்த காலப் படிப்பினைகளுடன் எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம் என நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.

ஆளும் கட்சியின் பண பலம், அதிகாரத் துஷ்பிரயோகம், சில கட்சிகள் திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கான மக்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்பது, அண்ணாவின் கூற்று. அந்த அடிப்படையில் மக்கள் தீர்ப்பினைத் தலைவணங்கி ஏற்கிறோம்.

திமுகவைப் பொறுத்தவரையில் வெற்றி பெற்றால் களிப்பில் ஆடுவதும், தோல்வியில் துவண்டு விடுவதும் இல்லை. கருணாநிதி வழியில், அனைத்தையும் ஒன்றாகக் கருதும் பக்குவம் பெற்றவர்கள் திமுகவினர்.

வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, மேலும் தொடர்ந்து உழைப்போம்.

இந்த இரண்டு இடைத்தேர்தல்களிலும், இரவு பகல் பாராது உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், அனைவருக்கும், திமுக தலைவர் என்ற அடிப்படையில் எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் உழைப்பு வீண்போகவில்லை; வீண்போகாது!

அடுத்தடுத்த தேர்தல் களத்துக்கும் சேர்த்து நீங்கள் பணியாற்றி இருக்கிறீர்கள். எப்போதுமே தேர்தலுக்காகப் பணியாற்றுவது என்பது, தேர்தல் பணி மட்டுமல்ல, அஃது இயக்கப் பணியும் இணைந்ததுதான். திமுகவின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றினோம் என்ற உணர்வை நீங்கள் அனைவரும் பெற்று, நிறைவு பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதே காலகட்டத்தில் – மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இரண்டு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றுள்ளது.

புதிதாக அமைய இருக்கும் அரசுகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் கட்சி பெற முடியாமல் போனாலும், மரியாதைக்குரிய எண்ணிக்கையில் சட்டப்பேரவை தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது என்பது, உள்ளபடியே பாராட்டத்தக்கதாகும். அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடைபெற்ற காமராஜர் நகர் தொகுதிக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி, மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. அகில இந்திய அளவில் மதச்சார்பற்ற சக்திகள் ஊக்கம் பெற இது வழிவகுக்கும்!

கடந்த காலப் படிப்பினைகளுடன், எதிர்காலத்தை நிச்சயம் வெல்வோம், என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொய் வணிகருக்கு படுதோல்வி! மக்கள் யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது-மருத்துவர் ராமதாஸ்

0

பொய் வணிகருக்கு படுதோல்வி! மக்கள் யார் பக்கம் என்பது நிரூபனமாகியுள்ளது-மருத்துவர் ராமதாஸ்

நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியின் அதிமுக வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றுள்ளனர். வாக்களித்து வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன 44,782 வாக்குகள் வித்தியாசத்திலும், நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 32,333 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றி சாதாரணமான வெற்றி அல்ல; சிறப்பான வெற்றி. விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளுமே எதிர்க்கட்சிகள் வசம் இருந்தவையாகும். அவற்றை ஆளும் அதிமுக கைப்பற்றியிருக்கிறது. 2016-க்குப் பிறகு எதிர்க்கட்சிகள் வசமிருந்த தொகுதிகளை அதிமுக பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பெருமளவில் பா.ம.க. பங்களித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொதுவாகவே தேர்தல்கள் சாதனைகளின் அடிப்படையில் எதிர்கொள்ளப்பட வேண்டும். ஆனால், திமுக இந்த இடைத்தேர்தல்களில் அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டது. வன்னியர்களை அழிக்க வேண்டும்; அவமானப்படுத்த வேண்டும் என்பதையே அடிப்படைக் கொள்கையாகவும், செயல்பாடாகவும் கொண்டிருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வியைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக வன்னியர்கள் நலனில் அக்கறை கொண்டவரைப் போன்று நடித்தார். வன்னிய மக்களுக்கு தாங்கள் தான் இட ஒதுக்கீட்டைக் கொடுத்ததாக பொய்ப் பிரச்சாரம் செய்ததன் மூலம் வன்னியர்கள் 9 ஆண்டுகால சமூகநீதிப் போராட்டங்களையும், 21 சொந்தங்களின் உயிர்த்தியாகத்தையும் கொச்சைப்படுத்தினார். திமுக ஆட்சியில் பலமுறை நான் வலியுறுத்தியும் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க கலைஞர் மறுத்து விட்ட நிலையில், மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உள் ஒதுக்கீடு வழங்கப் படும் என்று கூறி ஏமாற்ற முயன்றார். மு.க. ஸ்டாலினின் பொய் வணிகத்தை அறிக்கைகள் மூலமாகவும், பிரச்சாரத்தின் மூலமாகவும் அம்பலப்படுத்தினேன். அதன்பயனாக, எந்த மக்களை மு.க. ஸ்டாலின் ஏமாற்ற முயன்றாரோ, அதே மக்களே அவருக்கு படுதோல்வியை பரிசாக அளித்து பாடம் புகட்டியுள்ளனர்.

திமுகவுக்காக செய்த தியாகங்களின் அடிப்படையில் ஒப்பிட்டால் ஏ.கோவிந்தசாமி அவர்களின் உயரத்தை கலைஞரால் எந்தக் காலத்திலும் எட்டிப்பிடிக்க முடியாது. ஆனால், கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைக்க மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களின் வரிப்பணத்தில் வழங்கப்பட்ட ஊதியத்தை வசூலித்து பணிகளைத் தொடங்கிய ஸ்டாலின், திமுகவுக்காக உதயசூரியன் சின்னத்தைக் கொடுத்த ஏ.ஜி. அவர்களுக்கு கடந்த 50 ஆண்டுகளாக மணிமண்டபம் கட்டாமல், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணி மண்டபம் அமைப்போம் என்று கூறினார். இதெல்லாம் தங்களை முட்டாள்கள் ஆக்கும் முயற்சி என்பதை வன்னியர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர். அதனால் தான் தோல்வியை பரிசாகக் கொடுத்துள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சியின் பக்கம் தான் தாங்கள் இருப்பதை அவர்கள் தெளிவுபடுத்தியிருக்கின்றனர்.

சுருக்கமாக கூற வேண்டுமானால், விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலினும், அவரது துதிபாடிகளும் மூட்டை, மூட்டையாக பொய்களை இறக்குமதி செய்து விற்பனை செய்ய முயன்றனர். ஆனால், விழிப்புணர்வு பெற்ற விக்கிரவாண்டி மக்களிடம் பொய் வணிகம் சிறிதும் போணியாகவில்லை. மக்களவைத் தேர்தலில் பொய்களை விதைத்து, வெற்றிகளை அறுவடை செய்த தங்களை ஏமாற்றிய திமுகவுக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இந்த இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை கற்பித்துள்ளனர். சிலரை பல நாள் ஏமாற்றலாம்; பலரை சில நாள் ஏமாற்றலாம்; ஆனால் தங்களை எல்லா நாட்களும் ஏமாற்ற முடியாது என்பதை விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி மக்கள் நிரூபித்துள்ளனர். இது அவர்களின் குரல் மட்டுமல்ல…. ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலும் இது தான்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களின் முடிவுகள் இனி வரும் கால அரசியலுக்கான நல்ல தொடக்கமாகும். இரு தொகுதிகளிலும் வெற்றிக்காக கடுமையாக உழைத்த அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கெல்லாம் மேலாக, பொன்னான வாக்குகளை வழங்கி, வெற்றிகளை பரிசாக அளித்த வாக்காளர்களுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி கூறுகிறேன் என்றும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்

0

சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர்-அமைச்சர் சி.வி.சண்முகம்

சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர் என ஆளும் அதிமுகவை சார்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றதொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளில், இரு தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது, பொய் பேசிக் கொண்டிருக்கும், ஆணவம், அகம்பாவம், சர்வாதிகாரத்துடன் நடக்கும் ஸ்டாலினுக்கு இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் சரியான பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். மக்களை முட்டாள் என நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் தெளிவான தீர்ப்பைத் தந்திருக்கின்றனர் என்றும் கூறினார்.

கடந்த வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் எங்களின் வெற்றி வாய்ப்பு பறி போனது. தமிழகத்தில் மக்களைப் பாதிக்கும் விஷயங்கள் எதுவும் இல்லை. மக்களை உணர்ச்சிகரமாகத் தூண்டுகின்ற எந்த நிகழ்ச்சியும் இல்லை. எந்த வித குழப்பமும் இல்லாமல், 2021-ல் தமிழகத்தை யார் ஆள வேண்டும் என மக்கள் தெளிவாக கூறியிருக்கின்றனர். இந்த தமிழ்நாட்டை ஆளக்கூடிய சக்தி அதிமுகவுக்குத் தான் உண்டு என மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றனர். ஜெயலலிதா வழியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் தெளிவாக தீர்ப்பளித்திருக்கின்றனர்.

இந்த வெற்றி அதிமுக தொண்டர்களின் வெற்றி, கூட்டணிக் கட்சி தொண்டர்களின் வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த அவர்களுக்கு என் பாதம் தொட்டு நன்றியைத் தெரிவிக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த வெற்றியைத் தொடர்ந்து, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிமுகவுக்கு வர வாய்ப்பிருக்கிறதா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர்,அரசியலில் எல்லாம் சாத்தியம். தலைமை தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். மக்களின் இயலாமையைப் பயன்படுத்தி ஆசையை தூண்டிவிட்டு ஏமாற்றி பெற்ற வாக்குகளால் தான் இன்று, மூன்றே மாத காலங்களில் திமுகவுக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்துள்ளனர் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்

0

வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது! பிரதமர் மோடியை விமர்சிக்கும் கமல்ஹாசன்

வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்கு அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களை கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

வருகிற 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு வழக்கமாக இல்லாத அளவிற்கு பிரபலமாக நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது நடிகர் கமல்ஹாசனின் அடுத்த அரசியல் நகர்விற்கான ஆரம்பமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.

இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கைக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் பிரதமர் மோடியையும்,அமித்ஷாவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இந்த பேட்டியில் மோடி, அமித்ஷா குறித்த கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது.

அரசியல்வாதிகள் நாகலாந்துக்கு போகும் போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்பு விட்டு விட்டு அதன்பிறகு அதை தொடவே மாட்டார்கள்.

பிரதமர் மோடி

இதெல்லாம் காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்து வருவது.இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். எல்லோருக்கும் ‘அட, இவருக்கு வேட்டி கூட கட்டத் தெரியுமா?’ என்ற ஆச்சர்யம் மட்டுமே முதலில் ஏற்படும். வேட்டி கட்டினால் மட்டுமே தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்காக அவர் செய்ய வேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும் என்றும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் பேசிய அவர் இந்தியை பொறுத்த வரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் நமக்கு வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் இன்றும் சரியாக புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். நமக்கு மற்ற மொழிகள் மீது வெறுப்பு இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோ‌ஷமாக வங்க மொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா” என்றும் கூறியுள்ளார்.

மேலும் அரசியலுக்கு வர வேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு பதில் அளித்துள்ள கமல் அவர் எனக்கு நெருங்கிய நண்பர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக் கொள்ளலாமே தவிர அதன்படி நடக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்விக்கு வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாக கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

எவன எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

0

எவன் எங்க கதற வைக்கனுமோ அவன அங்க கதறவைக்கனும்! இது எடப்பாடி ஸ்டைல்

பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் யாரை எங்க வைக்க வேண்டுமோ அவரை அங்கே வைத்தால் எல்லாம் நல்லா நடக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியை சீண்டினார். இது அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுங்கட்சியினர் விஜய்யின் இந்த கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று கொந்தளித்து வந்தனர். தமிழக அமைச்சர்களும் இவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தனர், ஒரு படம் வெளியாகும்போது அரசியல் பேசி தனது படத்தின் விளம்பரத்தை மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லவே நடிகர்கள் இதுபோல் பேசுவார்கள் என்று அமைச்சர்கள் கூறி சமாளித்தனர்,

இருந்தாலும் விக்ரவாண்டி, நாங்குநேரியில் இடைத்தேர்தலில் நடைபெற உள்ள இச்சமயத்தில் விஜய் படத்திற்கு எதிர்ப்பு நேரடியாக தெரிவித்தால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று சிறிது அடக்கி இருந்தனர் அமைச்சர்கள், ஆனால் இடைத்தேர்தல் முடிந்த பிறகு தங்களது அஸ்திரத்தை தமிழக அரசு எடுக்க ஆரம்பித்தது, முதல் கட்டமாக படத்திற்கு எவ்வளவு நெருக்கடி கொடுக்க முடியுமோ அவ்வளவு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது, சென்சாருக்கு கொண்டுசென்ற போது தணிக்கை அதிகாரிகள் வேண்டுமென்றே புறக்கணித்தது படக்குழுவினருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது,

இவற்றுக்கெல்லாம் மேல் பண்டிகை நாட்களில் திரையரங்குகளில் சிறப்பு காட்சியை திரையிடலாம் என்ற விதிமுறைக்கு அதிரடியாக தடை விதித்தது, பிகில் படத்திற்காக தான் தமிழக அரசு இது போன்று செயல்படுகிறது என்று திரையரங்கு உரிமையாளர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

திரைப்படத்திற்காக முன்பதிவை பதிவு செய்து பணத்தை வசூலித்து திரையரங்கங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவும் அரசு உத்தரவிட்டது, சிறப்பு காட்சிகள் எதுவுமே இனி இந்த படத்திற்கும் அனுமதி கிடையாது என்று அதிரடியாக தெரிவித்துள்ளது, இதனால் பிகில் படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கின்றனர்.

காரணம் சிறப்பு காட்சியில் மட்டுமே கட்டணத்தை உயர்த்தி லாபம் பார்க்க முடியும், லாபம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது தமிழக அரசு.

நடிகர் விஜய் பேசிய பேச்சுதான் அத்தனைக்கும் காரணம் என்று திரையரங்க உரிமையாளர்கள் கூட்டம் போட்டு தங்கள் கஷ்டத்தை வெளிப்படுத்தும் அளவில் ஆடிப்போயிருக்கின்றனர்.

எடப்பாடியின் அதிரடியை நடிகர் விஜய் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார், எப்படியாவது முதல்வரை சந்தித்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வாங்கித் தருமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு தயாரிப்பாளர்கள் கடும் அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர். முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் கல்பாத்தி அவர்கள் தனிப்பட்ட செல்வாக்கு பெற்ற நபர்கள் மூலம் முதல்வர் தரப்பை அணுகி வருவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.

நடிகர்கள் திரையில் மட்டும்தான் தான் மாஸ் ஹீரோ என்று கம்பீரம் காட்டிக் கொள்ளலாம், நிஜத்தில் ஆளும் தரப்பு தான் ஹீரோவாக இவ்விஷயத்தில் காட்டுகிறது என்பது நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறது.

இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக!

0

இடைத்தேர்தல் மூலம் வாழ்வா? சாவா? நிலைக்கு தள்ளப்பட்ட திமுக!

நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்று முன்பு ஆரம்பித்துள்ளது உள்ளது.இரண்டாவது சுற்று முடிவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக முன்னிலை வகிக்கிறது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி உள்ளிட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.41 சதவிகித வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 சதவிகித வாக்குகளும் பதிவாகின என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அருகேயுள்ள இ.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.

இது இடைத்தேர்தலாக இருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என கூறி வந்த திமுகவுக்கு வாழ்வா சாவா என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.ஏனென்றால் இந்த இரண்டு தொகுதிகளும் ஏற்கனவே திமுக வசம் இருந்தன. இவ்வாறு ஏற்கனவே தங்களிடம் இருந்த தொகுதிகளை காப்பாற்றி கொள்ளவே பிரச்சாரத்தில் திமுக கடும் போட்டியை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதற்காக வன்னியர்கள் அதிகமாக வசிக்கும் விக்கிரவாண்டி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் காலம் காலமாக வன்னியர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த உள் இட ஒதுக்கீடு கூட தருவதாக திமுக தரப்பு வாக்குறுதி தந்துள்ளது.இதெல்லாம் பயனளிக்குமா? என்று தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.

கடந்த மக்களவை தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.இருந்தாலும் அந்த வெற்றி உண்மையானது அல்ல என அதிமுக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. கல்வி கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி என திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதிகள் தான் வெற்றி பெற செய்தது என குற்றம் சுமத்தப்பட்டது. கடைசியாக நடந்த நிறுத்தப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் முடிவும் இதை தான் உறுதி செய்தது. திமுக வெற்றி பெற்ற எல்லா தொகுதிகளையும் விட வேலூர் தொகுதி மறு தேர்தலில் வெறும் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி என இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிப்பெற வாய்ப்புள்ளது என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக முன்னிலை வகிப்பதும் இதை உறுதி செய்கிறது.இதையும் மீறி திமுக வெற்றி பெற்றால் கூட மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் இருக்கும்.

இவ்வாறு ஏற்கனவே தங்களிடம் இருந்த தொகுதிகளை மீண்டும் கைபற்றவே திமுவிற்கு கடினமான போட்டியை உருவாக்கியுள்ளது அதிமுக தரப்பு. இந்நிலையில் இதே நிலை தொடரும் பட்சத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்று கூறி வந்த திமுகவுக்கு கடும் போட்டியை உருவாகும்.

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

0

7 கை மாறினாலும் 70 கை மாறினாலும் திருட்டு பொருள் திருட்டுப்பொருள் தான்! திமுகவை கதறவிடும் தலித் தலைவர்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலமா என்ற பிரச்சினை மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக பஞ்சமி நிலம் பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் ட்விட்டரில் ஒரு போரே நடந்தது.

அசுரன் படத்தை பார்த்துவிட்டு இது படம் அல்ல பாடம் என்ற பதிவை டிவிட் செய்ததால் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையான எதிர்வினைகளை சந்தித்து வருகிறார். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்று அதிரடியாக தெரிவித்தார் ராமதாஸ். இதற்கு பதிலாக 1985 ஆம் ஆண்டு பதியப்பட்ட பட்டவை வெளியிட்டு இது தனிநபர் பட்டாவாக பதியப்பட்டது என்று காட்டி ராமதாஸுக்கு பதிலளித்தார். இது மிகப்பெரிய பிரச்சினையாகவே திரும்பி மு.க.ஸ்டாலின் அவர்கள் மூலப்பத்திரத்தை காட்டாமல் யாரிடமிருந்து இடம் வாங்கப்பட்டது என்று தெரிவிக்காமல் ஏதோ ஒரு பட்டவை காட்டிவிட்டு சவால் விடுகிறார் என்று எதிர்க்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா அவர்கள் அப்பாவி மக்களின் நிலத்தை பிடுங்குகின்ற படுபாதக கட்சி என்று திமுக என்று கடுமையாக விமர்சித்தார்,. பாஜக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் அவர்களும் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் தான் கட்டப்பட்டது என்றும் இதற்கான ஆதாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோவே வெளியிட்டார் என்று பேசினார். இடத்தை தலித் மக்களிடம் ஒப்படைக்காவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடக்கும் என்று அதிரடியாக தெரிவித்தார்.

இதற்கு ஒரு படி மேல் போய் பாஜக தமிழக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்ற மக்களால் பேசப்படுகிறது இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று புகார் மனு அளித்தார். இதனை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்ட ஆணையம் முரசொலி அலுவலகம் இருந்த இடம் பஞ்சமி நிலமா என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி தமிழக தலைமை செயலாளருக்கு அறிவிக்கை அனுப்பி உள்ளது. இதனால் திமுக கடும் அதிர்ச்சியில் உள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்களும் எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று தெரியாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் அவர்களும் பாமக நிறுவனர் ராமதாஸ் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், பஞ்சமி நிலத்தில் தான் முரசொலி மாறன் அலுவலகம் கட்டப்பட்டது என்றும் இதில் உண்மை உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். ஏழு கை மாறினாலும் எழுபது கை மாறினாலும் திருட்டுப் பொருள் திருட்டுப் பொருள் தான் திமுகவினருக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பேசினார், இப்படி அடுத்தடுத்து தாக்குதலால் திமுக தலைமை என்ன அறிக்கை வெளியிட போகிறது என்று திமுகவினரே எதிர்பார்க்கும் அளவில் நிகழ்வுகள் நடைபெறுகிறது.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்களும் முரசொலி மாறன் அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டது என்றால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அதிரடியாக தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் 29ம் தேதிக்குள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் திமுகவிற்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.