Saturday, November 16, 2024
Home Blog Page 5098

புதிய பழமொழிகளை உருவாக்கி தமிழுக்கு தொண்டாற்றும் ஸ்டாலின்

0

தமிழகத்தின் எதிர்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அவர்கள் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அண்மைய தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் சொல்வதை தான் சொல்வோம், செய்வதைத் தான் செய்வோம் என்று உளறிக்கொண்டு இருந்தார்.

இதை பார்த்த வேட்பாளர் செய்வதறியாது திகைத்து கொண்டிருந்தார். ஒவ்வொரு பேச்சிலும் இப்படி உளறி தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றி கொண்டு இருக்கிறார் எதிர்கட்சி தலைவர்.

முன்னதாக நடந்த இடைத்தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எண்பத்தி ஏழும் ஒன்பதும் நூற்றி ஏழு என புதுக்கணக்கை போட்டு காண்பித்தார். இம்மாதிரியான நிகழ்வுகள் திமுக தொண்டர்களிடைய ஸ்டாலினின் ஆளுமையை கேள்வி குறியாக்கி உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- ஐந்து பேர் பலி

0

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.4 அலகாக பதிவாகியுள்ளது.

வடக்கு கோட்டாபடோ மாநிலத்தில் துலுனா நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் பூகம்பத்தால் வீடு இடிந்து விழுந்து ஏழு வயது சிறுமி உயிரிழந்தார். அருகிலுள்ள நகரமான கிடாபவனில், நிலநடுக்கத்தின் போது ஒருவர் மாரடைப்பால் இறந்தார்.

அதே நகரில், இரண்டு வயது சிறுமி வீடு இடிந்து விழுந்து இறந்ததாகவும், டாவோ டெல் சுர் மாகாணத்தின் மாக்சேசே நகரில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக இரண்டு பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தை தொடர்ந்து நீண்ட நேரம் நில அதிர்வும் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். ஏராளமான வீடுகளும் மற்றும் வணிக கட்டிடங்களும் சேதமடைந்தன.

மாக்சேசேயில், “பெரும்பாலான வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது மற்றும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று செய்தித் தொடர்பாளர் அந்தோனி அல்லடா கூறினார்.

ஜெனரல் சாண்டோஸில், டவாவோ டெல் சுரில், பூகம்பத்திற்குப் பிறகு ஒரு ஷாப்பிங் சென்டர் தீப்பிடித்தது, இருப்பினும் அதிகாரப்பூர்வ விபத்து எண்ணிக்கை வெளியிடப்படவில்லை.

குர்திஷ் மக்கள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்

0

துருக்கி இராணுவம் சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது நடத்திய தாக்குதலில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

வடக்கு சிரியாவில் உள்ள மக்களை குர்திஷ் பாதுகாப்பு படை எனும் போராளிகள் அமைப்பு அந்த எல்லையை பாதுகாத்து வருகிறது.

தனிநாடு வேண்டி போராடி வரும் இந்த அமைப்பு, துருக்கி எல்லையில் அடிக்கடி தாக்குதலில் ஈடுப்பட்டு வந்தது. இந்த தனிநாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அரசு, தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் உள்ள குர்திஷ் போராளிகளை ஒழிக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் கடுமையான தாக்குதல் இப்பிரிவினரிடையே நடந்து வருகிறது. இதுவரை 600 குர்திஷ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

குப்பை தொட்டியில் டிரம்ப் எழுதிய கடிதம்! துணிச்சல் காட்டிய துருக்கி

0

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அனுப்பிய கடிதத்தை துருக்கி அதிபர் குப்பைத் தொட்டியில் வீசி எறிந்ததாக வெளியான தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கிறது.

சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள் வெளியேறுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனாலும், குர்து இன போராளிகள் மீது துருக்கி ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வந்தது. அதில் கணக்கில் அடங்காதோர் பலியாகினர்.

தாக்குதலை அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கண்டித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், நாட்டின் பொருளாதாரத்தை  அழித்து விடப்போவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் பயப்பட போவதில்லை துருக்கி அரசு கூறியிருந்தது.

இந் நிலையில் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்,  துருக்கி பிரதமர் எர்டோகனுக்கு கடிதம் எழுதினார். கடந்த 9ம் தேதி இந்த கடிதம் எழுதப்பட்டது. அந்த கடிதத்தை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அந்த கடிதத்தில் டிரம்ப் கூறியிருப்பதாவது: முட்டாள்தனமாகவும் செயல்பட வேண்டாம். பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்புக்கு பொறுப்பாக வேண்டாம். துருக்கி நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு நானும் காரணமாக இருக்க விரும்ப வில்லை.

எனவே, நேர்மையாக, மனித நேயத்துடன் செயல்பட்டால் வரலாறு உங்களை உயர்த்தும். தீமையை செய்தால், கொடுங்கோலனாக பார்க்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால் சற்றும் எதிர்பாராத வண்ணம், டிரம்ப்பின் கடிதம் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைதான்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

0

டெல்லி:தமிழகத்தில் வரும் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று அகில இந்திய வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து தற்போது, வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியிருக்கிறது. இந்த காலம் தான் தமிழகத்துக்கு அதிக மழை கொடுக்கும் காலமாகும்.

தற்போது, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  தென்மேற்கு வங்கக் கடல், தென் தமிழகத்தை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. அதனால், தமிழகத்தில் அடுத்த  5 நாட்களுக்கு பரவலாக கனமழை நீடிக்கும்.

புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

காங்கிரசின் தேசபக்தி எது என்பது எங்களுக்கு தெரியும்! தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பேச்சு

0

ஜல்னா: காந்தி என்கிற ஒரு குடும்பத்தை போற்றுவது தான் காங்கிரசின் தேசப்பக்தி என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருக்கிறார்.

மகாராஷ்டிர சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி இருக்கின்றன. இரு கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் குதித்துள்ளனர்.

அங்கு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடியும் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருக்கிறார். ஜல்னா, அகோலா மாவட்டங்களில் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தேசத்துக்கு வழிகாட்டிய துணிச்சல் மிக்கவர்களை கொண்ட மாநிலம் மகாராஷ்டிரா. தேசியம், தேசப்பற்று என்பது அந்த மாநிலத்தில் அதிகம் உண்டு.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு இந்த உணர்வுகள் இல்லை. தேசியவாதம் பற்றி காங்கிரஸ் பேசுபவதை நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது. நாட்டின் விடுதலைக்காக போராடிய காலத்தில் இருந்த காங்கிரஸ் தற்போது இல்லை.

காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தை போற்றுவதையே தேசபக்தியாக அது பார்க்கிறது.  காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, தேச நலனுக்கானது. காங்கிரசின் இளம் தலைவர்களும் அதைத் தான் சொல்லியிருக்கின்றனர்.

அந்த கட்சிகளின் தொண்டர்கள் கூட காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப் பட்டதை வரவேற்றுள்ளனர். அனைத்து தரப்பினரும் வரவேற்றாலும், எதிர்க் கட்சிகள் அதை ஏற்கவில்லை.

மக்களுக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். காஷ்மீர் மக்களும் இந்திய தாயின் மக்கள் என்பதே. எல்லை தாண்டிய தீவிரவாதம் மற்றும் மரணத்தோடு போரிட்டு வருகின்றனர் என்றார்.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

இறுதிக்கட்டத்தை எட்டிய அயோத்தி விவகாரம்! தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு

0

டெல்லி: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் அயோத்தியில், 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடம் ராமர் பிறந்த இடம் என்றும், எனவே ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று வலதுசாரி அமைப்புகள் கோரி வருகின்றன.

மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலம் தொடர்பாக, 28 ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. அது தொடர்பான வழக்கில், முதலில் விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகள் நிலத்தை சமமாக பகிர்ந்து கொள்ளுமாறு தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.

ஆனால் அந்த தீர்ப்பை 3 அமைப்புகளும் ஏற்கவில்லை.  உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. மொத்தம் 14 அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டன.

சமரச பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, ஸ்ரீ ஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர்  ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய பேச்சுவார்த்தையில் வெற்றி கிடைக்கவில்லை. அயோத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்டு 6ம் தேதி முதல் நாள்தோறும் வழக்கை விசாரித்து வருகிறது.

40 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் இன்று மாலை 4 மணியுடன் நிறைவு அடைந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

ஈரான் அமெரிக்கா மீது கடும் குற்றச்சாட்டு

0

எங்களின் மீதான தடை மனிதநேயமற்றது என ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அமெரிக்காவை சாடியுள்ளார்.

முன்னதாக அமெரிக்கா ஈரானின் அணு ஆயுத சோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

வேறு எந்த காரணமும் இல்லாமல் முழுக்க சவுதி அரேபியாவின் அழுத்தம் காரணமாகவே அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் 66-வது மாநாட்டில் கலந்துகொண்ட ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறினார்.

பதவியேற்றதில் இருந்தே டொனால்ட் ட்ரம்ப் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் முட்டாள்தனமானது என கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் சவுதியில் நடந்த எண்ணெய் கிணறு தாக்குதல் பின்னணியில் ஈரான் தான் இருக்கிறது எனவும் அமெரிக்கா நம்புகிறது.

இந்நிலையில், ஈரானுடனான ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்க விலகியது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த அண்டை நாடுகள் ஈரானுக்கே தங்களது ஆதரவினை தெரிவித்துள்ளது.

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

0

21 வன்னியர்கள் பலியானதற்கு திமுக தான் காரணம்-ராமதாஸ் குற்றச்சாட்டு

விக்கிரவாண்டி சட்டமண்ட தொகுதி அதிமுகவின் இடைத்தேர்தல் வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனுக்கு ஆதரவாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நேற்று விக்கிரவாண்டியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இன்னும் 5 நாட்களில் விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த இரு தொகுதிகளிலும் போட்டியிடும் அரசியல் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடைத்தேர்தல் அடுத்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான ஒத்திகை போல கருதுவதால் இதற்கான முக்கியத்துவம் கூடியுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் ஆளும் அதிமுக சார்பில் முத்தமிழ் செல்வனும், திமுக சார்பாக புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டியில் பாமக சார்பில் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.அதில் பாமக நிறுவனர் ராமதாஸ், சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ராமதாஸ், “1995ஆம் ஆண்டு பாமக மாநாடு நடந்த போது கலைஞருக்கு மஞ்சள் துண்டு அணிவித்தேன். அதன் பிறகு கடைசி வரை அவர் மஞ்சள் துண்டு அணிந்திருந்தார். ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில் எங்களை கழட்டிவிட்டு விட்டு ஜி.கே.மூப்பனாருடன் கூட்டணி வைத்துக்கொண்டார். அது அவருக்கு கைவந்த கலை. இதற்காகத் தான் கலைஞர் என்றால் கலைப்பவர் என்று நான் வேடிக்கையாகக் கூறுவேன்” என்று விமர்சித்தார்.

விக்கிரவாண்டி தொகுதியில் ஸ்டாலினின் பொய் மூட்டையும், புளுகும் எடுபடாது என்று குறிப்பிட்ட ராமதாஸ், “இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 வன்னியர்கள் சாவுக்கு காரணமாக இருந்தது திமுக தான். ஏனெனில் அன்றைக்குத் தான் திமுகவின் முப்பெரும் விழா நடந்தது. நான் 6 மாதங்களுக்கு முன்பே இடஒதுக்கீடு போராட்டம் குறித்து கலைஞருக்கு கடிதம் எழுதினேன். 7 நாள் சாலை மறியல் போராட்டத்தின் போது எம்.ஜி.ஆர் உடல்நலமில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் திரும்பி வந்த பிறகு போராட்டம் குறித்து கேள்விப்பட்டு என்னை அழைத்தார். பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களிடமும் இதுதொடர்பாக கோபப்பட்டார். 13 சதவிகித இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு அளிக்க வேண்டும் என்று ஆவணத்தில் எழுதிவைத்தார். ஆனால், ஒரு மாதத்தில் அவர் இறந்துவிட்டார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த ஆவணம் ஒரு மூத்த அமைச்சரால் மறைக்கப்பட்டுவிட்டது” என்றும் தெரிவித்தார்.

மேலும் 108 ஆம்புலன்ஸை கொண்டு வந்தது அன்புமணி ராமதாஸ் தான், ஆனால் தாங்கள் தான் கொண்டு வந்தோம் என திமுக பொய் கூறுவதாகவும் விமர்சித்தார்.

முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்

0

முதல் அமைச்சர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்-மு.க.ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஊழல் வழக்கு முடியும் வரை அவர் தமிழக முதல் அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நடைபெறவுள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அந்த தொகுதிக்குட்பட்ட அம்பலம் என்ற கிராமத்தில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் வழக்கம் போல பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதனையடுத்து அவர் பருத்திப்பாடு எந்த கிராமத்தில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்று திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்- மு.க.ஸ்டாலின்

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் குடிநீர் வசதி, சாலை வசதி வேண்டும் என கேட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தான். தி.மு.க. ஆட்சி வந்தததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். கடந்த தி.மு.க. ஆட்சியில் மகளிர் சுயஉதவிகுழுக்களுக்கு ஏராளமான கடன்கள் கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது கடன் கேட்டு மகளிர் வங்கிக்கு சென்றால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். அ.தி.மு.க. அமைச்சர்கள் எந்த பகுதிக்கும் சென்று மக்களின் குறைகளை தீர்ப்பதில்லை. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவேண்டும் என அறிஞர் அண்ணா கூறியது போல தி.மு.க. மக்கள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது. 

திண்ணை பிரசாரத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்.

மக்களிடம் வாங்கிய கோரிக்கை மனுக்களை நிறைவேற்ற சட்டமன்றத்திலும், பாராளுமன்றத்திலும் குரல் கொடுக்கிறோம். அப்படியும் இந்த அரசு மக்களுக்கு எதுவும் செய்யாவிட்டால் மக்களுக்காக வீதியில் இறங்கி போராடுவோம். அ.தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 1½ ஆண்டுகளே உள்ளது. அதற்குள் அனைத்து துறைகளிலும் அவர்கள் அடிப்பதை அடிப்போம் என ஊழல் செய்து வருகிறார்கள். நெடுஞ்சாலைதுறை ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என ஐகோர்ட்டே உத்தவிட்டுள்ளது.

இதற்கு முதல்-அமைச்சர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். அவர் நியாயமானவராக இருந்தால் இந்த பிரச்சனை தீரும் வரை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து விலகவேண்டும். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் செய்த அனைத்து அமைச்சர்களும் சிறைக்கு செல்வார்கள். எனவே காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள் என்றும் அவர் கூறினார்.

அப்போது வேட்பாளர் ரூபி மனோகரன், தி.மு.க. துணைபொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் மற்றும் வி.பி.துரை உள்ளிட்ட பலர் அவருடன் இருந்தனர்.