Saturday, November 16, 2024
Home Blog Page 5101

அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்

0

அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்

தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்வதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு நடந்த அரசியல் கலாட்டாவில் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. அதற்கு மருது அழகுராஜ் என்பவர் ஆசிரியராக உள்ளார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கருத்துக்களை கவிதை நடையாகவும் , தலையங்கம் வழியாகவும் நமது அம்மா நாளிதழ் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும் ;என்ற தலைப்பில் நமது அம்மாவில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளிவிடுவது, ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அடகுவைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாளர் துண்டுச்சீட்டு இட ஒதுக்கீடு என்ற புதிய வலையை விரிக்க பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைமைகள் கட்சி நாளேடு வாயிலாக எதிர்க்கட்சிகள் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்

0

புள்ளிங்கோ கெட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட புதிய படம்

நடிகை ரம்யா பாண்டியன் புள்ளிங்கோ கெட்-அப்பில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாக பரவி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் ரம்யா பாண்டியன். அந்த படத்தை அடுத்து தொடர்ந்து ஆண் தேவதை என்ற படத்தில் நடித்தார்.  அதன்பிறகு சரியான பட வாய்ப்புகள் வாய்ப்புகள் அமையாவில்லை என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்களை பரபரப்பாகி வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் புள்ளிங்கோ கெட்-அப்பில், கிராப் வைத்து கொண்டு போட்டோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார் நடிகை ரம்யா பாண்டியன்.

இந்த புள்ளிங்கோ கெட்-அப்பிற்காக அவர் முடியை கிராப் ஸ்டைலில் வெட்டி விட்டார் என எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், அதெல்லாம் இல்லை, புள்ளிங்கோ கெட்-அப்பில் புகைப்படம் எடுப்பதற்காக, விக் மட்டுமே வைத்துக் கொண்டேன் என்று சொல்லி இருக்கிறார். நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

0

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி இங்கு நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி பங்கேற்கிறது.

இந்நிலையில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே நடந்த முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க பெண்கள் அணியின் கேப்டன் லூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனையடுத்து அந்த அணியின் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய லிஸ்லி லீ ரன் எதுவும் எடுக்காமலும் (0), லாரா 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் இந்திய அணியினரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

அடுத்து சற்று நிலைத்து நின்று ஆடிய அந்த அணியின் மரிஷனி கப் அதிகபட்சமாக 54 ரன்கள் எடுத்தார். இறுதியில் தென் ஆப்பிரிக்க பெண்கள் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா தரப்பில் கோஸ்வாமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ப்ரியா மற்றும் ஜேமிமா தென் ஆப்பிரக்காவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஜேமிமா 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், இந்திய அணி 41.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்க அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 75 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்ற தொடக்க வீராங்கனை பிரியாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தற்போது முன்னிலை வகிக்கிறது.

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

0

தர்மபுரி மரக்காணம் கலவரங்களை வன்னியர்கள் தான் செய்தார்கள் என்று கூறிய கருணாநிதி எதிராக கம்பீரம் காட்டிய! MRK பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் இராமதாஸுக்கு எதிராக அறிக்கை

தர்மபுரி கலவரத்தில் அப்பாவி வன்னியர்களை கலவரக்காரர்கள் போல் சித்தரித்து அறிக்கை விட்ட கலைஞருக்கு எதிராக வாய் திறக்காத, மரக்காணம் கலவரத்தில் பொய் வழக்கு போட்டு ஆயிரக்கணக்கான வன்னியர்களை சிறையில் ‌அடைத்த போது வாய்த்திறக்காத, வன்னியர்கள்‌ நாவை அடைத்து பேச வேண்டும் என்று காடுவெட்டி குருவை தேசிய தேசிய பாதுகாப்பு சட்டத்தில் திமுக ஆட்சிக்காலத்தில் கைது செய்தபோது வாய்திறக்காத,

நாடக காதல் மூலம் அப்பாவி இளம் பெண்களை சீரழிக்கும் கூடாரத்தின் தலைமையே கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. வன்னியர்களை மிக கீழ் தரமாக மரவெட்டிகள், இழிவாக ஆண்மை இல்லை என்று கூறிய திருமாவளவனுக்கு இரவு பகலாக உழைத்து வெற்றி பெற வைத்த, தனது மகனுக்கு கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாய்ப்பு அளிக்காத இன்றளவும் ஒதுக்கி வைக்கும் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக அறிக்கை விட்டுள்ளது மிகப் பெரிய நகைச்சுவை என பாமகவினர் கலாய்த்து வருகின்றனர்.

வன்னியர்களை தாழ்த்தப்பட்டவர்கள், மரவெட்டிகள் என்று மேடை போட்டு பேசிய கிழட்டு சிறுத்தை எஸ்.ஆர்.சற்குணம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்துக்கிருஷ்ணன் போன்றவர்களுக்கு எதிராக வாய் திறக்காத, இவர்களைக் கண்டித்து எச்சரிக்கை அறிக்கை விட்ட மருத்துவர் ராமதாஸுக்கு எதிராக மு.க ஸ்டாலின் உடனடியாக பதில் அறிக்கை விடுகிறார், இது வன்னியர் எதிர்ப்பு இல்லையா, கூட்டத்தில் பேசியவர்களை கண்டிக்காமல், அவர்கள் பேசியதை ஆதரித்தை எதிர்க்க வக்கில்லாத எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் போன்றவர்கள், இதுபோன்ற மானம் ஈனம் இல்லாமல் அறிக்கை எப்படி விடுகிறார்கள் என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம் என்பது போல வன்னியர்கள் ஆங்காங்கே பேசிய வண்ணம் இருக்கின்றனர்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மூலமாக மு.க.ஸ்டாலின் பதிலடி என்ற பெயரில் அறிக்கை விட்டுள்ளார்.

*அறிக்கையின்‌ முழ விபரம்

“தன்னையும், தனது மகனையும் சிறையில் அடைத்து, வன்னியர் சமுதாயத்தை கேலியும் கிண்டலும் பேசிய அ.தி.மு.கவிற்கு வக்காலத்து வாங்கி, எங்கள் கழகத் தலைவரை விமர்சித்துள்ள மருத்துவர் அய்யா ராமதாஸுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவரய்யாவுக்கு தி.மு.க.வின் மீது வந்த திடீர் கோபம் என்ன?

“நமக்கு அடிமையாகக் கிடந்த வன்னியர் பெருமக்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து கலெக்டர்களாகவும், எஸ்.பி.களாகவும், க்ரூப்-1 அதிகாரிகளாகவும், டாக்டர்கள், எஞ்சினியர்களாகவும் ஆக்கி விட்டாரே முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்” என்ற கோபமா? “காடுவெட்டி குருவை ஒரு முறைக்கு பல முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிடலைத்த அ.தி.மு.கவிற்குப் பதில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக வன்னியர் சமுதாயத்தினர் மீது பதிவு செய்த வழக்குகளை எல்லாம் தி.மு.க ஆட்சி ரத்து செய்து விட்டதே” என்ற கோபமா?

“வன்னியர் சமுதாயத்தின் தன்னிகரில்லாத் தலைவர்கள் எஸ்.எஸ். ராமசாமி படையாச்சியாருக்கு முழு உருவச் சிலை வைத்து, இப்போது ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று அறிவித்து, தான் மட்டுமே வன்னியர் சமுதாயத் தலைவர் என்று உருவாக்கிய தோற்றத்தை உடைத்து விட்டார்களே” என்ற கோபமா? “இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த வன்னிய சமுதாய இளைஞர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாக அறிவித்ததில் கோபமா? என்று கேட்க விரும்புகிறேன்.

மருத்துவரய்யா கோபப்படும் அளவிற்கு எங்கள் கழகத் தலைவர் என்ன சொல்லிவிட்டார்? தி.மு.க. ஆட்சியில் வன்னியர் சமுதாய மக்களுக்கு செய்த சாதனைகளை விளக்கினார். போராட்டமே செய்யாமல் ஆலிவர் ரோட்டிற்கு டாக்டர் அய்யாவை அழைத்துப் பேசி இட ஒதுக்கீடு வழங்கியதைச் சொன்னார். வன்னியர் சமுதாய அதிகாரிகளை கல்வித்துறையிலும், காவல்துறையிலும் உயர் பதவியில் வைத்து அழகு பார்த்ததைச் சொன்னார். வன்னியர் சமுதாயப் பெருமைகளை பேசியதற்காக மருத்துவய்யா இப்படி கோபித்து- கொந்தளிப்பது ஏன்?

தன்னை ஜெயிலில் போட்டவர்களுக்கும்- உடல்நிலை குன்றிப் போன நிலையிலும் காடுவெட்டி குருவை அங்கும் இங்கும் பழுதான போலிஸ் வேனில் இழுத்தடித்தாரே – அந்த அ.தி.மு.கவிற்கு ஆதரவு திரட்டவா? “ஒவ்வொரு நீதிமன்றமாக அலைக்கழிப்பதற்கு பதில் என்னை ஒரே விஷ ஊசி போட்டு கொன்று விடுங்கள்” என்று ராயப்பேட்டை மருத்துவமனை வாசலில் கதறினாரே காடுவெட்டி குரு; அந்த அ.தி.மு.க ஆட்சிக்கு ஆதரவு திரட்டவா? அல்லது, உங்களையும், குருவையும் கொடுமைப்படுத்திய அ.தி.மு.கவுடன் வைத்துள்ள கூட்டணி பாசமும், தைலாபுர விருந்தின் “மகத்துவமும்தான்” இந்த கொந்தளிப்பிற்கு காரணம் என்றால் அதற்கு எங்கள் கழகத் தலைவர் பொறுப்பாக முடியாது.

அ.தி.மு.க-விற்கு விருந்து வையுங்கள். அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அப்படி விருந்து வைத்ததற்காக வன்னியர் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல்வேறு அரிய திட்டங்களை நிறைவேற்றிய தி.மு.க.வை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களை மட்டுமின்றி – பா.ம.க நிர்வாகிகள் பலர் மீதும் பொய் வழக்குப் போட்டு நீதிமன்றங்களின் படிக்கட்டுக்களில் இன்றைக்கும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் நிலையை ஏற்படுத்திய அ.தி.மு.கவிற்கு சாமரம் வீசுங்கள். ஆனால் உங்கள் மகனுக்கு மத்திய மந்திரி பதவி வாங்கிக் கொடுத்த தி.மு.க.வை வம்புக்கு இழுக்காதீர்கள். ஆனால், சமூக நீதிக்காக போராடிய மருத்துவரய்யா இன்றைக்கு யார் யாருக்கு எல்லாம் காவடி தூக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார் என்பதைப் பார்க்கும்போது என்னைப் போன்றோருக்கு வேதனையாகத்தான் இருக்கிறது.

“உங்களின் சொந்த லாபத்திற்காக எங்களை அடகு வைத்தது போதும்” என்று வன்னியர் சமுதாய மக்கள் என்றைக்கோ உங்களிடமிருந்து பிரிந்து சென்று விட்டார்கள். தி.மு.க கூட்டணியை விட்டு சென்றதில் இருந்து தோல்வி மேல் தோல்வியை பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். தங்களின் அருமைப் புதல்வரை தருமபுரியில் தோற்கடிக்கப்பட்டபோதே பாராளுமன்றத் தேர்தலில் தங்களது பொருந்தாக் கூட்டணிக்கு வன்னியர் சமுதாயம் தக்க பதிலடி தந்துவிட்டது. இன்னொரு பதிலடி விக்ரவாண்டி தொகுதியில் கிடைக்கப் போகிறது. அதனால்தான் இப்போது தி.மு.கவின் மீது வன்னியர் சமுதாயத்திற்கு இருக்கும் பற்றுதலை உடைக்க ஏதோ பழங்கதைகளை கட்டவிழ்த்து விடுகிறீர்கள்.

எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் “போராட்டங்கள்” ஏதுமின்றி பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர். மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு தனி ஒதுக்கீடு அளித்தவர். வன்னியர் சமுதாயத்தின் சமூக கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக தினம் தினம் யோசித்து ஆட்சியிலிருந்த போதெல்லாம் அடுக்கடுக்கான திட்டங்களை நிறைவேற்றியவர். அதை வேண்டுமென்றால்- ஒரு தனி மேடையில் நான் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். ஒரு வேளை நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை. உங்கள் அருமைப் புதல்வரை அனுப்பி வையுங்கள். வன்னியர் சமுதாயத்திற்கு நன்மை செய்தது அ.தி.மு.கவா அல்லது தி.மு.க.வா என்று ஒரு விவாதத்தை நடத்திப் பார்ப்போம்.

என்னைப் போன்று எத்தனையோ வன்னிய சமுதாயத்தினரை சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, மாநில அமைச்சராக – ஏன் மத்திய அமைச்சராக உயர்பதவியில் பார்த்து அழகு பார்த்தவர் எங்கள் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர். ஏ.ஜி. அவர்கள் உங்களுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தவர். அவருக்கு பெருமை சேர்க்க எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் அது பற்றி இதுவரை தி.மு.கவுடன் கூட்டணியில் இருந்த காலத்திலாவது நீங்கள் வாய் திறந்து கேட்டதுண்டா? ஏனென்றால் இந்த சமுதாயத்தில் வேறு யாருக்கும் சிறப்பு சேர்ப்பது தங்களுக்குப் பிடிக்காது. அதற்காக தி.மு.க பொறுப்பாக முடியாது.

கட்சி துவங்கியதில் இருந்து தாங்கள் தனது குடும்பத்திற்காக மட்டுமே கூட்டணி வைத்ததை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். தனது குடும்பத்திற்காகவே ராஜ்யசபா பதவி கேட்டுப் பெற்றதை நினைவில் வைத்துள்ளார்கள். பாராளுமன்ற தேர்தலில் தனது மகன் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவே வைத்த கூட்டணிகளை இந்த சமுதாயம் ஞாபகத்தில் வைத்திருக்கிறது. தங்களைப் பற்றியும் – தாங்கள் இந்த வன்னியர் சமுதாயத்தைப் பயன்படுத்தியது பற்றியும் வெளிவந்த புத்தகங்கள் இன்னும் என் அலமாரியில்தான் இருக்கின்றன.

உங்கள் அருமைப் புதல்வரை 2016-ல் முதல்வராக்க முயற்சித்து தோற்று நிற்கின்ற விரக்தியில் தங்களுக்குப் பொருந்திய பழமொழியை எங்கள் கழகத் தலைவர் பக்கம் தயவு செய்து திருப்பி விடாதீர்கள். அதை நான் திருப்பிச் சொன்னால் கலைஞர் எங்களுக்கு கற்றுத் தந்த பண்பாட்டிலிருந்து தவறுவதாகும். அதற்கு மாறாக வேறு பழமொழியை உங்களுக்கு நான் சொன்னாலும் எங்கள் கழகத் தலைவர் கற்றுத் தந்துள்ள நாகரீகத்திற்கு புறம்பானதாகும்.

ஆகவே எங்கள் கழகத் தலைவர் அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் போவது நிச்சயம். அது கனவல்ல- நிஜம். அப்போது கலைஞர் எப்படி வன்னியர் சமுதாயத்திற்காக பல்வேறு அரிய சாதனைகளை செய்தாரோ, அதேபோல் பல சாதனைகளை மட்டுமின்றி, அறிக்கை வாயிலாக கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி, வன்னியர் சமுதாயத்திற்கு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமை சேர்ப்பார். அந்தக் காட்சிகளை நீங்களும் காண்பீர்கள்! அப்போது நீங்கள் உணர மறுத்தாலும், வன்னியர் சமுதாயப் பெருமக்கள் நன்கு உணருவார்கள் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.”

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

0

வன்னியர்களுக்கு எதிராக கலைஞரும் மு.க.ஸ்டாலினும் செய்த துரோகங்கள் இதோ தெறிக்கும் மருத்துவர் இராமதாஸின் அறிக்கை

“தேர்தலின் போது திமுக கொண்டாடவும், தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியவும் வன்னியர்கள் என்ன கறிவேப்பிலையா?” – மருத்துவர் இராமதாசு அய்யா அறிக்கை

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபமும் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வெற்று வாக்குறுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அள்ளி வீசியிருக்கிறார்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தோல்வியடைவது மட்டுமின்றி, வைப்புத் தொகை கூட வாங்க முடியாதோ என்ற அச்சம் தான் அவரை இந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. மக்களவைத் தேர்தலில் நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என்பது உள்ளிட்ட புரட்டான வாக்குறுதிகளை வழங்கி, ஏழை மக்களை ஏமாற்றி கடனாளிகள் ஆக்கிய ஸ்டாலின், இப்போது விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களின் வாக்குகளை சுரண்டும் நோக்குடன் பொய் வாக்குறுதிகளை வீசியுள்ளார்.

ஆனால் பாவம்…. அத்தைக்கு மீசை முளைத்தால் என்ன நடக்கும்? என்று கற்பனையாக எழுதப் பட்ட கட்டுரையைப் படித்தால் எத்தகைய உணர்வு ஏற்படுமோ, அதேபோன்ற உணர்வு தான் ஸ்டாலின் அவர்களின் அறிக்கையை படிக்கும் போதும் ஏற்படுகிறது. வேலூர் தொகுதி தேர்தலின் போதே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுவிட்டது என்பதைக் கூட உணராமல் கற்பனையில் மிதக்கிறார் மு.க.ஸ்டாலின்.

வன்னியர்கள் என்றாலே எட்டிக்காயாக கசக்கும் ஸ்டாலின் அவர்களுக்கு இப்போது வன்னியர்கள் வெல்லக்கட்டியாக இனிக்கிறார்கள் போலிருக்கிறது. வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 20% இட ஒதுக்கீட்டை திமுக தான் வழங்கியதாகவும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அதில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப் போவதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு திமுக அரசு இடஒதுக்கீட்டை எளிதாக தூக்கிக் கொடுத்துவிடவில்லை.

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள வன்னியர்களுக்கு 17% தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 13.11.1969 அன்று அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த பரிந்துரையை செயல்படுத்தாமல், மொத்த இடஒதுக்கீட்டின் அளவை 41 விழுக்காட்டிலிருந்து 49% ஆக உயர்த்தியதுடன் நிறுத்திக் கொண்டு வன்னியர்களுக்கு துரோகம் செய்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன்பின் 1980-ஆம் ஆண்டில் வன்னியர் சங்கங்களை ஒருங்கிணைத்து 9 ஆண்டுகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி, தொடர் சாலைமறியல் போராட்டத்தின் போது 21 சொந்தங்களின் இன்னுயிரை தியாகம் செய்து பெற்றது தான் 20% இட ஒதுக்கீடு ஆகும்.

அப்போதும் அந்த இட ஒதுக்கீட்டை கலைஞர் மனமுவந்து தரவில்லை. வன்னியர்களுக்கு இன்னும் கூடுதலான இட ஒதுக்கீடு கிடைத்து விடக்கூடாது என்ற கெட்ட நோக்கத்திலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற கட்டாயத்தின் பேரிலும் தான் இடஒதுக்கீட்டை கலைஞர் வழங்கினார். வன்னியர்களின் தொடர்சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு 25.11.1987 அன்று என்னையும், பிற சமுதாயத் தலைவர்களையும் அழைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொண்டார். ஆனால், அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாக அவர் மறைந்து விட்ட நிலையில், அடுத்து வந்த ஆளுனர் ஆட்சியில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக 12.12.1988 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அடுத்த ஒரு மாதத்தில் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்தப்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், ஆளுனர் ஆட்சியில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் வன்னியர்களுக்கு மட்டும் 20%-க்கும் கூடுதலாக இட ஒதுக்கீடு கிடைத்திருக்கும். அவ்வாறு கூடுதல் இட ஒதுக்கீடு கிடைப்பதைத் தடுப்பதற்காகத் தான் 1989&ஆம் ஆண்டில் கலைஞர் அவசரம், அவசரமாக இடஒதுக்கீடு வழங்கினார். இதுதொடர்பாக என்னை அழைத்துப் பேசிய கலைஞரிடம் வன்னியர்களுக்கு 20% தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதற்கு வாய்ப்பில்லை என்று கலைஞர் கூறிய போது, இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கலாம் என்று வலியுறுத்தினேன்.

ஆனால், அதற்கும் ஒப்புக்கொள்ளாத கலைஞர், ‘‘இடஒதுக்கீட்டில் கூட உங்களுடன் என்னையும் சேர்த்துக் கொள்ள மறுக்கிறீர்களே? வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ள எங்களின் இசை வேளாளர் சமூகத்தையும் இந்தப் பிரிவில் சேர்த்துக் கொள்ளுங்களேன்’’ என்று கூறி வன்னியருக்கு மட்டும் கிடைக்க வேண்டிய 20% இட ஒதுக்கீட்டை தமது இசைவேளாளர் சமுதாயம் உள்ளிட்ட 108 சமூகங்கள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு வழங்கி துரோகம் இழைத்தவர் கலைஞர். ஸ்டாலினின் சமூகத்திற்கு தான் வன்னியர்களின் போராட்டத்தால் இட ஒதுக்கீடு கிடைத்ததே தவிர, வன்னியர்களுக்கு திமுக இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இந்த சமூக நீதி வரலாறு எல்லாம் அப்போது வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த, அப்போதைய இளைஞரணித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

1989-ஆம் ஆண்டு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு ஏற்படுத்தப்பட்ட பிறகு தனி ஒதுக்கீடு கேட்டு பா.ம.க. போராடி வந்தது. 30 ஆண்டுகளாக அந்தப் போராட்டம் தொடருகிறது. அதன்பின் 12 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இருந்தது. அப்போதெல்லாம் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க திமுகவுக்கு மனம் வரவில்லை. 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்கலாம் என்று ஆணையிட்டது.

அதன்படி தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துமாறு 28.10.2010 அன்று அப்போதைய முதலமைச்சர் கலைஞரை 27 சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து வலியுறுத்தினேன். ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை அவர் நடத்தவில்லை. காரணம்….. அத்தகைய கணக்கெடுப்பை நடத்தினால் வன்னியர்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டியிருக்கும் என்ற எண்ணம் தான்.

அதுமட்டுமின்றி, 30.07.2010 அன்று முரசொலியில் எழுதிய கடிதத்தில், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று வெளிப்படையாகவே கலைஞர் அறிவித்தார். அப்படிப்பட்ட திமுக, இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தனி ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறுவது ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுவதற்கு இணையானது தான்.

1996-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் பொற்கோ சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், ராஜ்மோகன் என்ற இ.கா.ப அதிகாரி தமிழக காவல்துறை தலைமை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

இதன்மூலம் 1967 முதல் 1996 வரை திமுக ஆட்சியில் இருந்த காலத்தில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த எவரையும் துணைவேந்தராகவோ, காவல்துறை தலைமை இயக்குனராகவோ நியமிக்கவில்லை என்பதை ஸ்டாலின் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஸ்டாலினால் குறிப்பிடப்பட்ட இவர்களின் நியமனமும், பின்னாளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக திரு.காசி விஸ்வநாதன் நியமிக்கப் பட்டதும் எனது வலியுறுத்தலின் பெயரில் தான் நடந்தது என்பதும் மு.க.ஸ்டாலின் அறியாத உண்மை.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் கூட வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவத்தைப் போராடித் தான் பெற வேண்டியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வன்னியர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததை சுட்டிக்காட்டி, வன்னியர் ஒருவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும் என்று கலைஞரிடம் வலியுறுத்தி வந்தேன். 2000-ஆவது ஆண்டில் 8 நீதிபதிகள் நியமிக்கப்பட்டபோது, வன்னியர்களுக்கு வாய்ப்ப்பளிக்க மறுத்து விட்ட கலைஞர், அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவரும், உறவினருமான ரவிராஜ பாண்டியன் என்பவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமித்தார். அதன்பின் இப்படி துரோகம் செய்து விட்டீர்களே? என கலைஞரிடம் சண்டையிட்ட பிறகு தான் 2001-ஆம் ஆண்டில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த குலசேகரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவ்வாறாக திமுக ஆட்சிக்காலத்தில் வன்னியர்களுக்கான உரிமைகள் அனைத்தையும் கலைஞரிடம் சண்டையிட்டு தான் பெற்றுத் தந்தேன்.

இவற்றையெல்லாம் விட கொடுமை திமுகவில் வன்னியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி தான். வன்னியர் ஒருவரை -திண்டிவனம் வெங்கட்ராமன் – முதன்முதலில் மத்திய அமைச்சராக்கியது திமுக தான் என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். அவருக்குப் பிறகு திமுக மொத்தம் 15 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தது. அப்போது வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரையாவது கேபினட் அமைச்சராக்கியது உண்டா?

1989 முதல் 2013 வரை மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த திமுக மொத்தம் 22 அமைச்சர் பதவிகளைப் பெற்றது. அவற்றில் வெறும் 2 பதவிகள் மட்டுமே 20% மக்கள் தொகை கொண்ட வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திண்டிவனம் வெங்கட்ராமன், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ஆனால், மக்கள்தொகையில் 0.01% கூட இல்லாத ஸ்டாலினின் சமுதாயத்திற்கு 6 அமைச்சர் பதவிகள், அதுவும் கேபினட் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. திமுகவுக்கு உயிர் கொடுத்த வன்னியர்களுக்கு திமுகவில் இவ்வளவு தான் மரியாதை.

திமுக மாவட்ட செயலாளர்கள் நியமனத்திலாவது வன்னியர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டுள்ளதா? என்றால் அதுவும் இல்லை. வன்னியர்கள் அதிகம் வாழும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 வருவாய் மாவட்டங்களில், திமுகவுக்கு அமைப்பு ரீதியாக மாநகர மாவட்டங்கள் உள்ளிட்ட 29 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 11 மாவட்ட செயலாளர் பதவி மட்டுமே வன்னியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் அமைப்புரீதியாக 3 மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றில் கூட வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மாவட்டச் செயலாளர்களாக ஸ்டாலின் நியமிக்கவில்லை.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ என்று அழைக்கப்பட்ட ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதை விட கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம் எதுவும் இருக்க முடியாது. ஏ.கோவிந்தசாமி அவர்கள் இன்றளவும் நான் மதிக்கும் தலைவர். அவரது குடும்பத்தினர் இன்றளவும் என்னுடன் தொடர்பில் உள்ளனர்.

விக்கிரவாண்டியில் ஓட்டுப் பொறுக்க வேண்டும் என்பதற்காக ‘ஏ.ஜி’ அவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதாகக் கூறும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இரு ஆண்டுகளுக்கு முன் ‘ஏ.ஜி’ அவர்களின் நூற்றாண்டு வந்த போது, திமுக சார்பில் பிரமாண்டமாக விழா எடுத்துக் கொண்டாடியிருக்கலாமே? அவ்வாறு செய்வதை யார் தடுத்தது? ‘ஏ.ஜி’யின் நூற்றாண்டு விழாவை அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத் மட்டும் தானே அவரது சொந்த ஏற்பாட்டில் நடத்தினார். குறைந்தபட்சம் அந்த விழாவுக்கு திமுக தலைமைக் கழக நிர்வாகிகள் யாரையாவது ஸ்டாலின் அனுப்பியிருக்கலாமே… அதைக் கூட செய்யாதது ஏன்?

திமுக ஆட்சிக்கு வந்தால் ‘ஏ.ஜி’ அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட சில மணி நேரங்களில் அவரது புதல்வர் ஏ.ஜி.சம்பத்தை குடும்பத்துடன் சென்னைக்கு அழைத்து வந்து நன்றி கூற வைத்த மு.க.ஸ்டாலின் அவர்கள், இரு வாரத்திற்கு முன் அதே சம்பத் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்த போது அவருக்கு வாய்ப்பு வழங்கி ‘ஏ.ஜி’ அவர்கள் மீதான விசுவாசத்தை நிரூபித்து இருக்கலாமே?

1952-ஆம் ஆண்டு முதல் பொதுத்தேர்தலில் இதே விக்கிரவாண்டி தொகுதியில் தானே ‘ஏ.ஜி’ அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் கொடுத்த உதயசூரியன் சின்னத்தில் தானே மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் ஆனார். அந்த நன்றிக் கடனுக்காகவாவது ‘ஏ.ஜி’ அவர்களின் புதல்வருக்கு ஸ்டாலின் வாய்ப்பளித்திருக்க வேண்டாமா? மாறாக 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 23 ஆண்டுகளாக ‘ஏ.ஜி’ அவர்களின் குடும்பத்திற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பே தராமல் ஒதுக்கி வைத்திருந்ததற்கு காரணம் வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்புணர்வு என்பதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?

அதுமட்டுமின்றி, திமுகவின் தளகர்த்தர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் அவர்களின் கடைசி காலத்தில் திமுக தலைமையால் எப்படியெல்லாம் உதாசீனப் படுத்தப்பட்டார்கள்; எப்படியெல்லாம் அவமானப் படுத்தப்பட்டார்கள்; அதனால் அவர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்து மறைந்தார்கள் என்பதை வன்னியர்கள் நன்கு அறிவர். அவற்றை எல்லாம் மறைத்து விட்டு வன்னியர் நண்பர் வேஷம் போட மு.க. ஸ்டாலின் முயன்றால் அது எடுபடாது.

ஒரு கட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் திமுகவை வழிநடத்தும் பொறுப்பை வன்னியரான ‘ஏ.ஜி’ அவர்களிடம் பேரறிஞர் அண்ணா ஒப்படைத்தார். ஆனால், 1969-ஆம் ஆண்டில் திமுக தலைவராக கலைஞர் பொறுப்பேற்ற பிறகு இன்று வரையிலான 50 ஆண்டுகளில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் எத்தனை வன்னியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இப்போது தான் வேறு வழியின்றி திமுகவின் பொருளாளராக துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. பெயரளவில் மட்டும் அவர் பொருளாளராக பதவி வகிக்க, அந்த பதவிக்கு உரிய அதிகாரங்கள் அனைத்தையும் மு.க.ஸ்டாலினை சுற்றியுள்ள அவரது துதிபாடிகள் தான் அனுபவிக்கின்றனர் என்பதை மறுக்க முடியுமா?

வன்னியர்கள் மீது பாசம் வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைமை தான் தருமபுரி நிகழ்வின் போது வன்னியர்களை ஆதிக்க சாதி என்று விமர்சித்தது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுவை அனுப்பி வைத்து வன்னியர்கள் மீது அபாண்டமான பழிகளை சுமத்தியது. தருமபுரிக்கு உண்மை கண்டறியும் குழுமை அனுப்பிய திமுக, மரக்காணம் கலவரத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் இரு வன்னியர்கள் கொடூரமான வெட்டிக் கொல்லப்பட்ட போதும், கடலூர் மாவட்டம் குச்சிப்பாளையம் கிராமத்தின் வன்னியர்கள் தாக்கப்பட்ட போதும் உண்மை கண்டறியும் குழுக்களை திமுக தலைமை அனுப்பாதது ஏன்? வன்னியர்கள் மீதான ஸ்டாலினின் வெறுப்பு தானே?

பொன்பரப்பி வன்முறையைத் தொடர்ந்து தம்மை கிழட்டு சிறுத்தை என்று அழைத்துக் கொண்ட போலி மதபோதகர் எஸ்ரா சற்குணம் வன்னியர்களை தாழ்த்தப்பட்டவர்கள் என்று விமர்சித்த போதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வன்னியர்களை மரம் வெட்டிகள் என்று கொச்சைப் படுத்திய போதும், ‘வன்னியர்கள் மீது பாசம் கொண்டவரான’ திமுக தலைவர் ஸ்டாலின் சீறி எழாதது ஏன்? அவ்வாறு பொங்கி எழாமல் அவரைக் கட்டுப்படுத்தியது யார்?

முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஸ்டாலின் அவர்கள், இப்போது திடீரென தம்மை வன்னியர்களின் தோழன் என்று கூறிக் கொண்டால் அதை நம்பி ஏமாற வன்னியர்கள் ஒன்றும் அப்பாவி திமுக தொண்டர்கள் அல்ல. தேர்தலின் போது கொண்டாடவும், தேர்தல் முடிந்தவுடன் தூக்கி எறிவதற்கு வன்னியர்கள் கறிவேப்பிலையும் அல்ல என்பதை காலமும், மக்கள் தீர்ப்பும் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உணர்த்தும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தச் செய்வதன் மூலம் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை 2021 தேர்தலுக்கு முன்பாகவே வென்றெடுக்கும் சக்தி பா.ம.க.வுக்கு உண்டு. மற்றபடி, 2021 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று மு.க.ஸ்டாலின் கனவு கண்டு கொண்டிருந்தால் அவருக்கு நான் கூற விரும்புவது, அவருக்கு மிகவும் பிடித்த, அவரால் பலமுறை கூறப்பட்ட ‘‘சீனி சக்கரை சித்தப்பா… சீட்டில் எழுதி நக்கப்பா’’ என்ற பழமொழியைத் தான்.

என்று விவரமான அறிக்கையை தந்து மு.க.ஸ்டாலினை கதறவிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு!அதிர்ச்சியில் பொன்முடி

0

விழுப்புரத்தில் ஒரு மாவட்டச் செயலாளர் பதவியை கூட வன்னியர்களுக்கு தராத மு.க.ஸ்டாலின்!‌‌‌‌ டுபாக்கூர் அறிக்கை என கொந்தளிப்பு! அதிர்ச்சியில் பொன்முடி

திமுக தலைவர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டார். அதில் வன்னியர் சமுதாயத்தின் பிறந்தவரான ஏ.கோவிந்தசாமி மற்றும் வன்னிய இடஒதுக்கீட்டு போராளிகளுக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் எனவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் 20 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சட்ட வழிமுறையை பின்பற்றி உள்ஒதுக்கீடு வன்னியர்களுக்கு வழங்கப்படுமென தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கைக்கு இருக்கும் பின்னால் இருப்பதை விவரமாக பார்க்கலாம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிமுகவிற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது, மறைந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி அவர்கள் புற்றுநோயின் காரணமாக உயிரிழந்ததால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது, அவர் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வன்னியர்கள் மற்றும் பெரும்பான்மையாக வசிக்கும் கூடிய மாவட்டம் ஆகும். ஒரு சில தொகுதிகளில் தலித் சமுதாயம் பெரும்பான்மையாக இருக்கின்றனர். விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரையில் வன்னியர்களின் அதிகம் வசிக்க கூடிய தொகுதியாகும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீட்டு கோரி போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் பெரும்பாலானோர் விழுப்புரம் மாவட்டம் தான்.

விக்கிரவாண்டியை அடுத்த பனையபுரம் கிராமத்தில் இடஒதுக்கீடு போராட்டத்தில் தியாகிகள் நான்கு பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாகவே ஆண்டுதோறும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பாக இட ஒதுக்கீட்டு போராளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தவறாமல் நிகழ்ச்சி நடைபெறும்.

இதில் ஏராளமான வன்னியர் சங்கத்தினர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துவார்கள். வன்னியர் சங்கம் மட்டுமல்லாமல் வன்னியர் சமூகத்திற்கு ஆதரவாக இருக்கும் அனைத்து அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருவார்கள். இதனால் பாட்டாளி மக்கள் கட்சிக்கு என தனி செல்வாக்கு பெற்ற தொகுதியாக இத்தொகுதி விளங்குகிறது, இத்தொகுதியில் வன்னியர்களை தவிர வேறு யாரும் போட்டியிட்டாலும் தோல்வியைத் தழுவுவார்கள் என்று தொகுதி மக்களிடம் கேட்டாலே தெரிந்துவிடும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இரவிக்குமார் அவர்கள் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றார், அவர் முன்னிலை பெறுவதற்கு திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமானது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தொகுதி முழுவதும் விவசாய பெருமக்களை சார்ந்த தொகுதி என்பதால் விவசாய கடன் தள்ளுபடி,கல்விக்கடன் தள்ளுபடி போன்ற கவர்ச்சி மிக்க தேர்தல் வாக்குறுதிகள் காரணமாகவே திமுகவிற்கு வாக்குகளை அளித்தனர், ஆனால் தேர்தல் முடிவு மோடிக்கு ஆதரவாக மாறியதால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

மாவட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அச்சமுதாயத்தின் வாக்குகள் அவருக்கு நம்பிக்கை அளிக்கின்றன. மேலும் திமுக மாவட்டச் செயலாளர் கா.பொன்முடி அவர்கள் எப்பொழுதும் வன்னியர் எதிர்ப்பு ஆயுதத்தை கையில் எடுப்பவர்.

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட திமுகவை மூன்றாகப் பிரித்த திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒருவரைக்கூட வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவரை மாவட்ட செயலாளராக நியமிக்கப்படவில்லை. இது அக்கட்சியில் உள்ள வன்னியர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. இதற்கு முழு காரணம் பொன்முடியின் செல்வாக்கு தான். மு.க. ஸ்டாலின் வன்னியர் எதிர்ப்பை அவரும் பின்பற்றுகிறார் என்ற தோற்றம் பரவலாகவே வன்னியர்களிடையே எழும்பும். ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டம் இருந்தபோதும் மாவட்ட அவைத்தலைவராக மஸ்தானும் மாவட்டச் செயலாளராக பொன்முடியும் இருந்தனர்.

முழுக்க முழுக்க வன்னியர்களுக்கு பதவியை அளிக்காமல் பொன்முடியின் சொந்த சமுதாயமான உடையார் சமுதாயத்திற்கு மட்டும் பதவி சுகத்தை கொடுத்து அழகு பார்த்து வருகிறார், இதனாலேயே விழுப்புரம் தொகுதி பொன்முடியின் கோட்டை என்ற பிம்பத்தை நொறுக்கினார்கள வன்னியர்கள். அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் சிவி சண்முகம் அவர்களை ஜாதி ரீதியான வாக்குகளை அளித்து வெற்றி பெற வைத்தனர் வன்னியர்கள் தான் என்பது அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு தெளிவாக தெரியும், இதன் காரணமாக மீண்டும் இரண்டாவது முறையாக சீ.வி.சண்முகத்திற்கு விழுப்புரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்.

வன்னியர்களை நம்மை எதிர்க்கின்றனர் என்பதை தெரிந்து கொண்ட பொன்முடி அச் சமுதாயம் அதிகம் வசிக்கக்கூடிய திருக்கோவிலூர் தொகுதிக்கு சென்றார். அவர் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் நிச்சயம் தோல்வி உறுதி செய்யப்பட்டிருக்கும், அவர் தொகுதியில் போட்டியிட்டாலும் விழுப்புரம் தொகுதியில் தன்னைத்தவிர வேறு யாரும் போட்டியிடக் கூடாது என்பதற்காக பெரும்பான்மையாக வசிய கூடிய வன்னியர்களுக்கு வாய்ப்பளிக்காமல் சம்பந்தமே இல்லாம இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என்ற கட்சிக்கு தொகுதியை ஒதுக்கினார். இதனால் வன்னியர்கள் கடும் எரிச்சல் அடைந்தனர்.

விக்கிரவாண்டியில் தொகுதியில் மு.க. ஸ்டாலின் அறிக்கை 100% தோல்வி பயம் காரணமாக வெளியிட்டார் என்பது வன்னியர்களுக்கு தெரியும்.

காரணம் பொன்முடிக்கு ஆதரவாக இருப்பது, மாவட்டத்தை பிரிக்கப்பட்ட பிறகு வன்னியர் ஒருவருக்கூட மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.

விக்கிரவாண்டி தொகுதியில் முழுக்க முழுக்க பாமக ஆதிக்கம் மிக்க தொகுதி என்பதால் சாதிரீதியான வாக்குகளை இதைச் சொல்லியே நடுநிலையான வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். இது ஸ்டாலின் காதுக்கு சென்றவுடனேயே என்ன செய்வது என்று தெரியாமல் இந்த அறிக்கையை திடிரென வெளியீட்டு திசைதிருப்பும் முயற்ச்சியில் இறங்கியுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் செல்வாக்கு இல்லை என்பதை தெள்ளத்தெளிவாக ஸ்டாலினுக்கு தெரிந்துள்ளது, இதனால் ஜெகத்ரட்சகனின் ஆட்டம் இங்கு செல்லுபடியாகவில்லை, கடலூர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களும் விக்கிரவாண்டியில் முகாமிட்டுள்ளார் இவரை வன்னியர்கள் கண்டுகொள்ளவில்லை, கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தனது மகனுக்கு வாய்ப்பு கேட்ட பொது மறுத்துவிட்டார் ஸ்டாலின், இது வன்னியர் எதிர்ப்பு இல்லையா, பொன்முடி மகனுக்கு சீட், துரைமுருகன் மகனுக்கு சீட், ஆற்காடு வீராசாமி மகனுக்கு சீட், தங்கம் தென்னரசு தங்கைக்கு சீட், ஆனால் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மகனுக்கு சீட் இல்லை என்று அல்வா கொடுத்து விட்டார்.

மேலும் திமுக ‌முன்னோடி சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட இதுவரையும் வாய் திறக்கவில்லை. அவருடைய மகன் வீரபாண்டி ராஜா கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்துவிட்டார்,

பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பை தோலுரித்து அதிமுக மற்றும் பாமகவினர் காட்டுவதால் கலக்கத்தில் உள்ளனர் திமுகவினர், தொகுதியில் திருமாவளவன் பிரச்சாரம் செய்தாலே வாக்குகள் சிதறும் என்பதை அங்குள்ள திமுகவினரை அறிவார்கள் அப்படி, இருந்தும் செயல்வீரர்கள் கூட்டத்தில் திருமாவளவனை அழைத்து பேச வைத்துள்ளார் மு.ஸ்டாலின். இது திமுகவிற்கு பின்னடைவு விளைவிக்கும் என்பது கள உண்மை,

வன்னியர்களை எதாவது ஒரு வகையில் சமாதானபடுத்த வேண்டும் என்பது தான் இந்த அறிக்கை என்பது ஊரறிந்த உண்மை.

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை

0

வன்னியர்களுக்கு தனி‌‌யாக உள்ஒதுக்கீடு கொடுக்கப்படும்! மு.க. ஸ்டாலின் அதிரடி அறிக்கை

அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு,

திராவிட முன்னேற்றக் கழகம், வன்னியர் சமுதாய மக்களுக்கு பல சாதனைகளையும், எண்ணற்ற திட்டங்களையும் தீட்டி- அவர்களின் சமூக, கல்வி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டிருக்கிறது. ஆனால், “கல்வி, வேலைவாய்ப்பில் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று நடத்திய போராட்டங்களை எள்ளி நகையாடியதோடு மட்டுமின்றி, அந்தப் போராட்டங்களை கைது நடவடிக்கைகள் மூலம்- துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கிட நினைத்தவர்கள் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் என்பதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.

போராட்டக்களத்தில் நின்றவர்களின் உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்துப் போற்றிடும் வகையில், மூன்றாவது முறையாக முதலமைச்சரானவுடன் 28.3.1989 அன்று வன்னிய சமுதாயத்திற்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு அளித்து அரசு ஆணை வெளியிட்டதோடு மட்டுமின்றி- அவர்களை, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் கலைஞர் தான்.

மேலும், இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளையும் ரத்து செய்தார்.

முதன் முதலில் ராஜ்மோகன் என்ற, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ், அதிகாரியை, தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை இயக்குனராக நியமித்தார்.

1996ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார்.

அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை, இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’அறிவித்தார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியாருக்கு, சென்னை – கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முதன் முதலில் வன்னியர் ஒருவரை- திண்டிவனம் வெங்கட்ராமனை கேபினட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கியவர் கலைஞர் தான் என்பதை நாடறியும்.

திமுக ஆட்சியில் தான், முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள், முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டு – பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.

புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக,
வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ நியமிக்கப்பட்டார்.

வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க கழக ஆட்சியில்தான், “வன்னியர் நல வாரியம்” அமைக்கப்பட்டு- அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் அவர்கள் முதல் தலைவராகவும், பிறகு ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ், இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள்.

சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ்., மாநிலத் தேர்தல் ஆணையராக கழக ஆட்சியில் நியமிக்கப்பட்டார்.

கலைஞர் ஆட்சியில், வன்னியர் சமுதாயத்திற்கான இன்னும் எத்தனையோ சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போக முடியும்.

ஆனால், இந்த எட்டாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், அப்படி, வன்னியர் சமுதாயத்தின் நலனுக்காகச் செய்த சாதனை என, ஒரு சாதனையையாவது விரல் விட்டுச் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியாது.

அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த அந்தத் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த அரசு செவி கொடுத்தேனும் கேட்டதா? இல்லவே இல்லை.

ஆனால் இன்றைக்கு ஒரு உறுதிமொழியை நான் இந்த அறிக்கை வாயிலாக அளிக்க விரும்புகிறேன்.

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைந்தவுடன், வன்னியர் சமுதாயத்திற்காக இட ஒதுக்கீடு கோரி, போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு, விழுப்புரம் மாவட்டத்திலேயே மணி மண்டபமும், வன்னியர் சமுதாயத்தின் தனிப்பெருந் தலைவராகவும், அண்ணா அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராகவும், கலைஞர் அமைச்சரவையில் உணவு மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சராகவும் பணியாற்றி மறைந்த, “ஏஜி”என அண்ணாவால் அன்புடன் அழைக்கப்பட்ட, ஏ.கோவிந்தசாமி படையாச்சியாருக்கு மணி மண்டபமும் அமைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே, கலைஞர் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து திமுக அரசு அமைந்ததும் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இந்த நேரத்தில் உறுதியளிக்க விரும்புகிறேன்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காகவா இந்த அறிக்கை என்றுதெரியவில்லை!

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

0

ஆசிரியர்களின் பிள்ளைகள் தனியார் பள்ளிகளில் பயில்கின்றார்களா இல்லை அரசு பள்ளிகளில் பயில்கின்றார்களா? பதிவேட்டில் பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் (இ.எம்.ஐ.எஸ்.) செயல்பட்டு வருகிறது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் அவற்றில் படிக்கும் மாணவ- மாணவிகளின் சுயவிவரங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதைப்போல பணி பதிவேட்டில் ஆசிரியர்களின் சொத்து விவரங்களை பதிவு செய்யவும் சமீபத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது ஆசிரியர்களின் பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள்? அரசு பள்ளியிலா அல்லது தனியார் பள்ளியிலா? போன்ற விவரங்களை அனைத்து ஆசிரியர்களும் பதிவு செய்ய அறிவுறுத்துமாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக்கல்வி துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதற்காக கல்வியியல் மேலாண்மை தகவல் மைய இணையதளத்தில் ‘ஆசிரியர்களின் பிள்ளைகள் விவரங்கள்’ என்ற தனிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் சென்று ஆசிரியர்கள் தங்களுடைய பிள்ளைகளின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அந்த பிரிவில், பிள்ளைகள் அரசு பள்ளியில் பயில்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்ற பதிலை பதிவு செய்ய வேண்டும். அரசு பள்ளியில் படிக்கவில்லை என்றால், எந்த தனியார் பள்ளியில் படிக்கிறாரோ? அந்த விவரங்களை அதன் கீழே கொடுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆசிரியர்களின் பிள்ளைகள் திருமணம் ஆகாதவராகவோ அல்லது கல்லூரியில் படிப்பவராகவோ இருந்தால் அவர்கள் ‘பொருந்தாது’ (நாட் அப்ளிகேபில்) என்பதை ‘கிளிக்’ செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பதிவு, ஆசிரியர்களின் பிள்ளைகளில் எத்தனை பேர் அரசு பள்ளிகளில் பயில்கிறார்கள்? என்பதை அறிந்து கொள்வதற்காக கேட்கப்பட்டு இருக்கின்றன என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த அறிவிப்பு அரசு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைப்பது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்

0

திமுகவில் யார்‌ உழைத்தது யார்‌ பிழைத்தது! பொன்முடிக்கு எதிராக கொந்தளிப்பை வெளிப்படுத்திய வன்னியர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது, திமுகவிற்கும் அதிமுகவிற்கும் நேரடி மோதல் உச்சத்தில் இருக்கிறது, இரண்டு கட்சிகளுமே உள்ளாட்சி தேர்தலில் தைரியமாக களம் இறங்குவதற்கு உந்துசக்தியாக இடைதேர்தல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பொருத்தவரை பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு தர முடியாது, ஏனென்றால் வட மாவட்டங்களில் பாமகவின் செல்வாக்குமிக்க தொகுதிகளில் விக்கிரவாண்டியம் ஒன்று, அதற்கு முக்கிய காரணம் வன்னியர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால்தான், இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தான் திமுகவினர் பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிராக கடும் விமர்சனங்களை பரப்பி வருவதாக அக்கட்சியினர் பரவலாகப் பேசி வருகின்றனர்,

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட விக்கிரவாண்டி பேரூராட்சியை சார்ந்த ராஜா என்பவர் அமைப்பு செயலாளராக இருந்தார் அவர் இத்தேர்தலில் பாமகவிற்கு சார்பில் வேட்புமனு செய்கிறேன் என்று கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் திமுகவின் தூண்டுதலில் பெயரில் தான் செயல்பட்டதாக பாமகவினர் தெரிவிக்கின்றனர்,

பாமக தலைவர் ஜி.கே.மணி, சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என விளக்கம் கொடுத்தார். இது ஒருபுறமிருக்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக மற்றும் தேமுதிக தொண்டர்களை உற்சாக படுத்தும் நோக்கில் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள் தேமுதிக சார்பில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி பெருமையாக பேசி அக்கட்சியினரை பெருமைப்படுத்தி பேசினார். இதனால் சுறுசுறுப்பாக அக்கட்சியினர் அதிமுகவிற்கு ஆதரவாக ஓட்டுகளை சேகரித்து வருகின்றனர்.

முக்கியமாக, திமுக மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடிக்கு எதிராக கண்டன போஸ்டர்களை வன்னியர்கள் ஒட்டியுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள வாசகம் வன்னியர்களின் உணர்ச்சியை தூண்டும் நோக்கில் இடம்பெற்றுள்ளது.

பொன்முடியின் இல்லத்தில் அக்கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளருமான புகழேந்தி அவர்கள் பொன்முடி முன்னால் தரையில் அமர்ந்து கொண்டு இருப்பதுபோல் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. திமுகவினர் மத்தியில் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இடைத்தேர்தல் வேட்பாளர் அமரக்கூட கூட நாற்காலி போடாமல் தரையில் அமர வைத்து அவமானப்படுத்தியதாகவே அனைவரும் கருதுகின்ற வகையில் அப்புகைப்படம் இருக்கிறது.

அவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவமானப்படுத்தி விட்டார்கள் என்று கொந்தளிப்பில் உள்ளனர்,

வீதி எங்கும் “யார் உழைத்தது! யார் பிழைப்பது!” போஸ்டர்களை ஒட்டி கடுமையான கண்டனத்தை பொன்முடிக்கு எதிராக தெரிவித்துள்ளனர், அதில் இடம் பெற்றுள்ள வாசகம் என்னவென்றால்

*திமுகவில் உழைக்கும் சமுதாயம் ஒன்று பிறக்கும் சமுதாயம் ஒன்று இதில் யார் வைத்தது யார் பிழைத்தது மக்கள் பார்வைக்கே!

*விழுப்புரம் மாவட்டத்தில் திமுகவில் மூன்று மாவட்ட செயலாளர்கள் இதில் ஒருவர் கூட வன்னியர் இல்லை உழைத்தவர்கள் கீழேயும் பிழைத்தவர்கள் மேலேயும் இருக்க துரோகிகள் பட்டம் வேறு.

*வன்னியர்கள் துரோகம் செய்ய துணிந்து இருந்தால் நீங்கள் எவரும் எம்பி ஆகி இருக்க மாட்டீர்கள் எம்டி ஆகி இருப்பீர்கள்.

*அன்று ஒரு வன்னியன் உன் தலைமையிடம் தலைவணங்கி நடந்திருந்தால் இன்று விழுப்புரம் மாவட்டத்தின் திமுக அந்த வன்னியனின் தலைமையின் கீழ்தான் இங்கு இருக்கும்.

*சூரியனால் வன்னியர் சமுதாயம் வாழவில்லை உங்கள் சமூகம் மட்டுமே வாழ்வாங்கு வாழ்ந்து வருகிறது.

*சூரியனைக் கொடுத்த சமுதாயம் அந்த சின்னத்தில் போட்டியிட இன்று எவரையோ எதிர்பார்த்து ஏங்கி நிற்கிறது.

“இதுதான் இன்றைய வன்னியர்களின் நிலை” என்று சுயமரியாதை இயக்கத்தில் சுயமரியாதையை இழந்து நிற்கும் வன்னியர்கள், காகுப்பம், விழுப்புரம் மாவட்டம்.

என்று பொன்முடிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளனர் பொன்முடி உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்னியர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விரும்பமாட்டார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட வன்னியர்கள் பெரும்பான்மை சமுதாய இருப்பதனால்தான் புகழேந்திக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார், வன்னியர்களுக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு கொடுப்பதற்கு பதிலாக ஒன்றிய பொறுப்பாளர் என்ற பதவியை கொடுத்து முக்கியத்துவம் இல்லாத பதவியை தான் வன்னியர்களுக்கு அலங்கரிப்பார். அவர் சார்ந்த உடையார் சமுதாயத்திற்கு மட்டும் ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்ப்பார், மற்ற கட்சிகளில் உள்ள முக்கிய பொறுப்பாளர்கள் உடையார் சமுதாயமாக இருந்தால் அவர்களின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருக்கும்போது உறுதுணையாக இருந்தார் என்பது உறுதியாக கூறமுடியும்.

விழுப்புரம் மாவட்டம் ஒருங்கிணைந்த திமுகவில் 3 மாவட்டமாக பிரிக்கப்பட்டது. இதில் ஒருவர் கூட வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்படவில்லை. பொன்முடி, மஸ்தான், அங்கையற்கண்ணி இவர்களில் ஒருவர் கூட வன்னியர்கள் இல்லை.

பெரும்பான்மை சமுதாயமாக இருக்கக்கூடிய வன்னியர்களை துளியளவும் கண்டு கொள்ளாமல் தன் வளர்ச்சிக்கு வித்திட்ட ஒரு சில நிர்வாகிகளுக்கு மட்டும் பெயரளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் செயலளவில் புண்ணியம் இல்லாத பதவியும் கொடுத்து வருகிறார். மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைகுரிய தளபதி என்பதாலும் மேலும் வன்னியர்களின் எதிர்ப்பு ஆயுதத்தை ஸ்டாலினும் கையாள்வதால் இந்த நிலைமை மாறுவது மிகக் கடினம்.

இதன் காரணமாகவே வன்னியர்கள் பொன்முடிக்கு எதிராக கடும் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
எப்படி இருந்தாலும் அம்மாவட்டத்தில் அமைச்சர் சிவி சண்முகம் வன்னியர்களை அரவணைத்து செல்வதால் ஜாதி ரீதியான ஓட்டுகள் அதிமுகவிற்கு எளிதாக கிடைக்கும். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியும் துணை நிற்பதால் தேர்தலில் பொன்முடியின் வன்னியர் எதிர்ப்பு அரசியலை வெளி உலகிற்கு தெளிவாக காட்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

0

தேசிய அளவில் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என தெறிக்கவிட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர்

நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசியலில் மகாத்மா காந்தியின் முதன்மையான கொள்கையான மதுவிலக்கை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து தன்னுடைய கொள்கையாக கடைபிடித்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் கூட தங்களுடைய கட்சியின் சார்பாக நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் தடை உத்தரவை பெற்றார்.

தமிழக அளவிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் வாக்குகளுக்காக மது விலக்கை பற்றி பேச தயங்கிய சூழ்நிலையிலேயே அரசியலில் வெற்றி பெறவில்லை என்றாலும் பரவாயில்லை,மக்கள் நலன் தான் முக்கியம் என தொடர்ந்து மது ஒழிப்பை வலியுறுத்தி போராடி வருகிறார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் அன்புமணி ராமதாஸ் அவர்களை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாமக தனித்து போட்டியிட்ட போதும் ஆட்சிக்கு வந்தால் தங்களுடைய முதல் கையெழுத்து மது விலக்கு கொண்டு வருவதற்காக தான் இருக்கும் என வாக்குறுதியளித்தனர்.

இதனையடுத்து தான் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவதாக தேர்தல் வாக்குறுதியளித்திருந்தார்.அவரையடுத்து திமுகவும் ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை கொண்டு வருவதாக உறுத்தியளித்தது.இவ்வாறு மது ஒழிப்பை பற்றி பேச தயங்கியவர்களையும்,மது உற்பத்தியை தொழிலாக கொண்டவர்களையும் மது ஒழிப்பை பற்றி பேச வைத்தவர் பாமக நிறுவனர் ராமதாஸ்.

இந்நிலையில் இவ்வளவு பெருமைமிக்க தமிழக அரசியல் தலைவர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை சிறப்பிக்கும் வகையில் மது ஒழிப்பிற்கான அவரது கடந்த கால போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை சமூக வலைத்தளங்களில் பாமகவினர் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சிறப்புகள் மற்றும் செயல்பாடுகள் பற்றியும் #மதுஒழிப்புப்போராளி #DrAyya என்ற ஹேஷ் டேக்குகளை பயன்படுத்தி அவர்கள் பதிவிட்டது ட்விட்டரில் தேசிய அளவில் தொடர்ந்து ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் மது ஒழிப்பு போராட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி அக்கட்சியினர் பதிவிட்டவைகளில் சில உங்களின் பார்வைக்காக