Thursday, November 14, 2024
Home Blog Page 5113

அப்பாடி! நேர்கொண்டபார்வை படம் இப்படி இருக்கா? பார்த்தவர்கள் கருத்து இதோ!

H.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் ஆகஸ்ட் 8ம் தேதி வெளிவர இருக்கும் படம் நேர்கொண்ட பார்வை பிரமாண்டமாக வரவுள்ளது. இப்படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது. ஏனெனில் தல அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நாளை மறுநாள் ரிலீஸ் ஆகும் இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சி தற்போது சென்னையில் திரையிட்டு வருகின்றனர்.

இந்த படத்தை பார்த்து பிறகு பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒரு சில விமர்சனம் உங்களுக்காக!

பார்த்தீர்களா? நேர்கொண்ட பார்வை படத்தின் பத்திரிக்கையாளர் கட்சியின் கருத்துக்கள். இந்த முறை தல திருவிழா உண்டு என்பதை இந்த பதிவுகள் கூறுகிறது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

கூட்டணி கட்சியை கிழித்து தொங்கவிட்ட வைகோ? காங்கிரஸ் தான் குற்றவாளி! துரோகி!

0

கஷ்மீர் பிரச்சனைக்கு நேற்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். நேற்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ டெல்லியில் செய்தியாளரை சந்தித்து கூறியதாவது.,

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் கஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்தது, காங்கிரஸ் முதல் குற்றவாளி என்றும், பாஜக அடுத்த குற்றவாளி என்றும் டெல்லியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்துள்ளது.

திரு வைகோ காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி உதவி உடன் தான் மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பை மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான வைகோ பதிவு செய்தார்.

செய்தியாளர்களிடம் கூறியதாவது, காஷ்மீர் பிரச்சினையில் காங்கிரஸ் முதல் துரோகம் செய்தது. பாஜக அடித்த தவறைச் செய்துவிட்டது. இந்த மசோதாவை முழுமையாக தூக்கி எறிய வேண்டும். இதனால் ஏற்படப்போகும் விபரீதங்களை எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.

மேலும் பேசிய அவர், ஷேக் அப்துல்லாவை அன்று கைது செய்து தமிழகத்தில் சிறையிலடைத்தது காங்கிரஸ். கார்கில் யுத்தத்தில் காஷ்மீரை பாதுகாக்க தமிழக இளைஞர்கள் பங்கெடுத்து ரத்தம் சிந்தினர். ஆனால் மத்திய அரசோ காஷ்மீருக்கான அனைத்து அதிகாரங்களையும் நீக்கிவிட்டது.

மேலும் 370வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்ததை கூட காங்கிரஸ் பெரிதாக எதிர்க்கவில்லை என்பதும், ரத்து செய்த விதத்தைத்தான் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கின்றது என்பதும் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள்!

0

தினகரன் போட்ட அதிரடி உத்தரவு! அதிர்ச்சியில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள்!

அமமுக கட்சியின் வளர்ச்சிக்காகவும்,கட்சியில் மீதியிருக்கும் கொஞ்ச நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தக்க வைத்து கொள்ளவும் அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவால் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் அக்கட்சியிலிருந்த முன்னணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்.குறிப்பாக இந்த முறை வேறு கட்சிக்கு செல்லாமல் மீண்டும் தங்களது தாய்க் கழகமான அதிமுகவிலேயே பெரும்பாலோனோர் இணைந்து வருகின்றனர்.

குறிப்பாக செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, சசிரேகா மற்றும் சிலர் அமமுக கட்சியிலிருந்து வெளியேறியது தினகரனுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில்,அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா தினகரன் தலைமையில் சென்னை வானகரத்தில் நடந்தது. 

இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் பொது செயலாளர் தினகரன் பேசும் போது,  அமமுகவினர் அதிமுகவினருடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்றும், அவர்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்கக்கூடாது என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். திமுக எப்படி நமக்கு எதிரியோ அதுபோல் அதிமுக நமக்கு துரோகி. அம்மாவுடன் 30 வருடம் அரசியலில் ஒன்றாக பயணம் செய்தவன் நான் என்றும் அவர் மேலும் கூறினார். அதிமுகவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கூட கலந்து கொள்ளக்கூடாது என்று தினகரன் கூறியது அமமுக கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி விசாரித்த போது, உறவினர்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்கள் அதற்காக அவர்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு கூட போகக் கூடாது என்று சொல்வது சற்று அதிர்ச்சியாக உள்ளது,மேலும் இது கட்சி தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்றும் அக்கட்சி தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.   

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

எதையும் நல்லா செய்யனும் அது தான் என் பாலிஸி! நித்யா மேனன் ஓப்பன் டாக்

0

எதையும் நல்லா செய்யனும் அது தான் என் பாலிஸி! நித்யா மேனன் ஓப்பன் டாக்

பொதுவாக ஒரு பிரபலம் மறையும்போது அவரது பெயரில் பயோபிக் எடுக்கப்போவதாக பல அறிவிப்புகள் வருவது இயல்பு. அப்படித்தான் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை இரண்டு மூன்று இயக்குநர்கள் ஒரே நேரத்தில் திரைப்படமாக்குகின்றனர்.

ஏ.எல்.விஜய் ‘தலைவி’ என்ற பெயரில் தனது படத்தை ஆரம்பித்துவிட்டார். இயக்குநர் கவுதம் மேனனும் ஜெயலலிதா பற்றிய வெப் சீரிஸ் தயாரித்து வருவதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அது எந்த ஆண்டு வெளியாகும் என்பது ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

இந்நிலையில் இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினியும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை ‘தி அயர்ன் லேடி’ என்ற தலைப்பில் படமாக எடுக்கிறார். இதில் ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட படங்களில் நடித்த நித்யா மேனன் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆனால் அறிவிப்பு வந்த பல மாதங்கள் ஆகியும் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை. இத்தனைக்கும் மற்றவர்களைக் காட்டிலும் வேகமாக ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது இந்தப் படக்குழுதான்.

இந்நிலையில் சமீபத்தில் இதுகுறித்து நித்யா மேனனிடம் கேட்கபட்டபோது, “படக்குழு நிறைய முயற்சிகள் செய்து வருகிறது. இந்தப் பெயரை மட்டுமே வைத்து லாபம் பார்ப்பதை இயக்குநர் பிரியதர்ஷினி விரும்பவில்லை. செய்வதை நியாயமாக செய்ய விரும்புகிறோம். அதனால் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று எதிலும் சமரசம் செய்ய விரும்பவில்லை. முன் தயாரிப்பு வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

அதனாலேயே படப்பிடிப்பைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்குவோம்” என்று கூறியுள்ளார்.
தற்போது நித்யா மேனன் மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் இவரது முதல் படமான ‘மிஷன் மங்கள்’, ஆகஸ்ட் 15 அன்று வெளியாகவுள்ளது.
எது எப்படியோ பார்த்து செய்யுங்க, புரட்சித்தலைவி பேரைக் கெடுத்துடாதீங்க மேடம்..

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

தேர்தலுக்கு பின் கருத்து கணிப்பு! திமுகவா? அதிமுகவா? அல்லது புதிய கட்சியா?

0

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 நேற்று நடைபெற்றது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு கடும் போட்டி ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது பிறகு அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் அதிமுகவை விமர்சனம் செய்தார்.

இதைத்தொடர்ந்து பிரச்சாரம் முடிந்து தொகுதியில் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். முதல் கட்டமாக 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 9 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளன.

இந்நிலையில் தந்தி டிவி எப்பொழுதும் கருத்து கணிப்பு நடத்தி வரும் அது போல இந்த தேர்தலிலும் தேர்தல் முடிந்த பிறகு கருத்து கணிப்பு நடந்தது. அதை தொடர்ந்து, தொலைக்காட்சியில் வேலூரில் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நிகழ்ச்சி நேற்று இரவு ஒளிபரப்பானது. இந்தக் கருத்துக்கணிப்பில் திமுகவின் கதிர் ஆனந்த் 46 – 52 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 41 – 47 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ள தீபலட்சுமி 4 – 7 சதவீத வாக்குகளைப் பெறுவார் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முந்தைய கருத்து கணிப்பு படி திமுக 48-52 எனவும் அதிமுக 43-48 எனவும் தந்தி டிவி கூறியது. தேர்தல் வெற்றி யாருக்கு என்பது பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

சோயா பீன்ஸ் – இல் போதை பொருளா? மக்களே உஷார்!

உலகத்தில் எவ்வளவோ பகுத்தறிவு வளர்ந்தாலும் இந்த போதை பொருள் தவறு என்பதை மக்கள் உணரவில்லை. ஒரு ஆய்வின் படி உலக இறப்பு விகிதத்தில் 40% இறப்பு போதை பொருள் உபயோகிப்பதால் என அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது.

போதை பொருளை தடை செய்தாலும் அதை கடத்தி விற்பனை செய்வதில் கை தேர்ந்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி இருக்க ஜெர்மனியில் உள்ள ஹாம்பர்க் துறைமுகத்தில் சரக்குப் பெட்டியில் கடத்தப்பட இருந்த 7600 கோடி ரூபாய் மதிப்புடைய கோகெய்ன் போதைப் பொருளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோயா பீன்ஸ் என்று குறிப்பிடப்பட்ட பார்சலை அதிகாரிகள் சந்தேகம் கொண்டு சோதனையிட்டதில் உள்ளே 200 பைகளில் கோகெய்ன் பதுக்கப்பட்டதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பார்சலை அனுப்பியது யார் என விசாரணை மேற்கொண்டனர்.

இதன் மொத்த மதிப்பு 7600 கோடி ரூபாய்க்கும் மேல் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்தப் போதைப் பொருள் பைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு அழிக்கப்பட்டன.

திரையில் போதை பொருள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என விளம்பரம் செய்தாலும் அதை பார்த்துக்கொண்டே புகை பிடிக்கும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இதுதான் புதிய இந்தியாவின் வரைபடமா? மோடியின் ஒன் நேசன் திட்டம் நிறைவேறியதா?

0

புதிய இந்தியா என ஒரு வரைபடம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

கஷ்மீர் பிரச்சனைக்கு இன்று நாடாளுமன்றத்தில் தீர்வு எட்டபட்டதாக பிஜேபி தரப்பில் தெரிவித்தனர். இன்று மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.

காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து கஷ்மீர் இனி தனி மாநிலம் அல்ல யூனியன் பிரதேசங்கள் என அறிவிக்கப்பட்டது. 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது. இதனால் புதிய இந்தியா என்ற வரைபடம் ஊடகங்களில் மக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

இனி கஷ்மீர் இல்லையா? கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ஏன் ரத்து? நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது?

0

தீவிரவாதி ஊடுருவல் என கஷ்மீர் மக்கள் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் அதிகரித்து வரும் பதற்ற நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநரை சந்தித்த முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு & காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ தனக்கு எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என்று தெரிவித்து இருந்தார்.

இதை தொடர்ந்து நாடாளுமன்றம் இன்று கூடியது திரு அமித்ஷா தலைமையில். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370, 35ஏ ஆகியவை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை அடுத்து 29 மாநிலமாக இருந்ததை 28 ஆக அறிவித்துள்ளது. 7 யூனியன் பிரதேசங்கள் தற்போது 9 யூனியன் பிரதேசங்கள் ஆக அதிகரித்துள்ளது.

மத்திய காவல் படைகள் கூடுதலாக காஷ்மீருக்கு அனுப்பப்படும் என்ற இந்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணை பரவத் தொடங்கியதில் இருந்து காஷ்மீர் மக்களிடையே கடந்த சில நாட்களாக அச்ச உணர்வு நிலவுகிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தலைவர்கள் முதல் மக்கள் வரை வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக ஜம்மு & காஷ்மீர் மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக்கை நேற்று சந்தித்தார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு மற்றும் 35ஏ-வது பிரிவுகள் பற்றியோ அல்லது ஜம்மு காஷ்மீரை மூன்றாக பிரிப்பது பற்றியோ எந்த அறிவிப்புகளும் அறிவிக்கப்படப் போவது கிடையாது என்று ஆளுநர் உத்தரவாதம் அளித்ததாக தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அமித்ஷா தலைமையில் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்றது. இதில் கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ய படுவதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். இதனால் கஷ்மீர் மக்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து உள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

0

திமுகவா? அதிமுகவா? வேலூர் கோட்டை யாருக்கு? கடந்து வந்த பாதை ஒரு அலசல்!

வேலூர் தேர்தல் ஆகஸ்ட் 5 இன்று நடைபெற உள்ளது. இத்தேர்தல் அதிமுக மற்றும் திமுகவிற்கு ஒரு அக்னி பரிட்சை ஆகும். ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து அதிமுக அமைச்சர்கள் திமுக பொய்யான வாக்குறுதியை வழங்கி வெற்றி பெற்றது என சராமாரியாக விமர்சனம் செய்தனர்..

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி உறுப்பினர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். ஸ்டாலின் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி,துணை முதல்வர் O பன்னீர்செல்வம்  என அனைவரும் இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தனர்.

பிரச்சாரத்தின் போது திமுகவை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி நாட்டிலேயே ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி தி.மு.க ஆட்சிதான். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதைப் போல் எங்களை ஊழல் கட்சி என்று சொல்கிறார் ஸ்டாலின் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

வாரிசு அரசியல் செய்யும் அவருக்கு என்ன தெரியும். கட்சிக்குத் தலைவராக வருவதைத் தான் நாங்கள் வாரிசு அரசியல் என்று சொல்கிறோம். கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின்.அவருக்குப் பிறகு உதயநிதி. இவர்களை விட்டால் நாட்டில் வேறு ஆளே இல்லையா?

உதயநிதியை நான்கு படத்தில் விளம்பரத்துக்காக நடிக்கவைத்து கட்சிக்குள் நுழைத்திருக்கிறார். ஸ்டாலினை நம்பி எங்களிடமிருந்து வெளியே சென்ற 18 எம்.எல்.ஏ-க்களும் நடுத் தெருவில் நிற்கிறார்கள். 

தி.மு.க-வினர் எல்லோரும் குண்டு குண்டாக இருக்கிறார்கள். அதற்குக் காரணம் பிரியாணி, பரோட்டா எல்லாம் காசு கொடுக்காமல் ஓசியில் சாப்பிடுகிறார்கள். பணம் கேட்டால், ஹோட்டல் உரிமையாளரை குத்து குத்துனு குத்துகிறார்கள். இவர்கள் எங்களை விமர்சனம் செய்வதா?

இதை தொடர்ந்து திமுகவும் அதிமுகவை விமர்சித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் பேசும் போது நாங்கள் பொய் அறிக்கை குடுத்து வெற்றி பெற்றோம். ஆனால் நீங்க மிட்டாய் கொடுத்தா வெற்றி பெற்று இருக்கிறீர்கள். முத்தலாக் சட்டத்திற்கு ஆதரவு கோரியது அதிமுக அரசுதான் என்றும், ஆதிமுக பிஜேபியின் கை கூலி என்றும் விமர்சனம் செய்தார்.

இதை தொடர்ந்து இன்று வேலூர் தொகுதியில் தேர்தல் காலை தொடங்க உள்ளது. வெற்றி பெறுவது அதிமுகவா? திமுகவா? என்பது பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்

ஹிந்தியிலும் வெல்லப்போகும் விஜய் சேதுபதி! வெற்றி படத்தின் வெற்றி தொடருமா?

கடந்த ஆண்டு வெளி வந்து மிகவும் வெற்றிகரமாக அனைவரையும் கவர்ந்து அதிக வசூலை ஈட்டி வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இது புஷ்கர் -காயத்ரி இயக்கத்தில் மாதவன் போலீஸ் அதிகாரியாகவும் , விஜய்சேதுபதி கேங்க்ஸ்டராகவும் நடித்திருந்த படம். இந்தப் படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதையாலும் , விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பும், மாதவனின் நேர்த்தியான நடிப்பாலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

வெற்றி படம் என்றாலே மற்ற மொழிகளில் படத்தை இயக்க தோன்றும். அப்படி இருக்க விக்ரம் வேதா படத்தை மற்ற மொழிகளில் இயக்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி பதிப்பில் அமீர்கான் மற்றும் சைஃப் அலிகான் நடிக்க உள்ளனர்.

தமிழில் விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ஹிந்தியிலும் இயக்க உள்ளனர். மாதவன் நடித்த போலீஸ் கதாபாத்திரத்தில் சைஃப் அலிகானும் விஜய்சேதுபதி நடித்த தாதா கதாபாத்திரத்தில் அமீர்கானும் நடிக்க உள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. தமிழ் தலைப்பான விக்ரம் வேதா தலைப்பே ஹிந்தியிலும் தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. படம் தமிழ் வெற்றி அடைந்தது போல ஹிந்தியிலும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.