தல என்றால் அனைவரும் அறிந்ததே. அஜித் என்ற ஒற்றை மனிதரை தமிழ் திரையுலகம் மற்றும் ரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள். அவருக்கே தனி ஒரு குணம் உண்டு அவர் பல தோல்வி வெற்றி படங்களை கொடுத்தாலும் அவருடைய தன்னம்பிக்கை அவரை விட்டுகொடுத்தது இல்லை என்பதே உண்மை.
தல அஜித்தின் நடிப்பில் முன்னதாக வெளிவந்த விஸ்வாசம் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மெகா வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ள நிலையில் அஜித் தனது ரசிகர்களுடன் இன்று செல்பி எடுத்துகொண்டுள்ளார்.
இதுவரை ரசிகர்களே அஜித்தை பொதுவெளியிலோ அல்லது நிகழ்ச்சிகளிலோ புகைப்படம் எடுத்துவந்த நிலையில் முதன்முறையாக ரசிகர்கள் அனைவரையும் க்ரூப்பாக நிற்க வைத்து செல்பி எடுத்து கொண்டுள்ளார் நமது தல.
ஆனால் இதிலும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது அஜித்திடம் பேஸிக் மொபைல் தான் உள்ளதாக அவரது ரசிகர்கள் இந்நாள் வரை கூறி வருகின்றனர். அப்படியென்றால் இந்த மொபைல் எப்படி வந்தது? என மற்ற ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இது லக்கி ரசிகன் சந்தோஷ்ராஜ் என்பவரின் மொபைல் போனாம்.
எது என்னவோ தலையே நம்மை வைத்து ஒரு செல்ஃபி எடுத்து விட்டார் என்பதில் பெரும் சந்தோசத்தில் உள்ளன அவரது ரசிகர்கள். முந்தைய படம் விஸ்வாசம் போலவே வினோத் இயக்கத்தில் அடுத்த மாதம் வெளிவரவிருக்கும் நேர்கொண்ட பார்வையும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தோனிக்கு ஓய்வு! ராணுவ பணிகளில் கவனம் செலுத்த போவதாக அறிவிப்பு
சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை 2019 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து தொடரைவிட்டு இந்திய அணி வெளியேறியது.
உலகக்கோப்பை போட்டியில் அடைந்த தோல்விக்குப் பிறகு தோனியின் ஓய்வு குறித்து தான் கிரிக்கெட் வீரர்களிடையேயும், ரசிகர்களிடையேயும் பெரும் விவாதமாக இருந்து வருகிறது. தினமும் இவரது ஓய்வு குறித்த செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. ஆனால், தோனி தரப்பில் இந்த விவாதம் மற்றும் வதந்திகள் குறித்த எந்தப் பதிலும் இதுவரை வரவில்லை.
அதேநேரம் இந்திய அணி அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்தத் தொடரில், இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் பும்ராவுக்கு ஓய்வு வழங்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இந்த தொடரில் தோனி தேர்வு செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்த வந்த நிலையில், இனி வரும் காலங்களில் தோனி விக்கெட் கீப்பருக்கான சாய்ஸில் முதலில் இருக்க மாட்டார்.
விக்கெட் கீப்பிங்கில் ஃபர்ஸ்ட் சாய்ஸாக பன்ட்தான் இருப்பார். அவர் தன்னுடைய திறமைகளை வளர்த்துக்கொள்ள நேரம் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் தோனி 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் இருப்பார். ஆனால், ப்ளேயிங் லெவனில் கொஞ்சம் கஷ்டம்தான். இந்திய அணிக்கு தொடர்ந்து அவரின் வழிக்காட்டுதல் நிச்சயம் தேவை. அவர் அணியிலிருந்து விலகுவது என்பது ஆரோக்கியமானதாக இருக்காது” எனவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்திய அணி அடுத்தடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் தோனி ஓய்வை அறிவிப்பார் எனவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடக்கவுள்ள தொடரில் இருந்து தோனி விலகியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “தோனி மேற்கிந்தியத் தொடரிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
அவர் சிறிது காலம் ஓய்வு எடுக்க விருப்புவதாக தெரிவித்தவர், அடுத்ததாக இந்திய ராணுவத்தில் தனது பணியை முழுநேரமாக தொடர உள்ளதாக தெரிவித்துள்ளார்” என கூறினார். மேலும் ஏற்கனவே கூறிய படி தோனிக்கு பதிலாக பந்த் இந்த தொடரில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தோனி இந்திய ராணுவத்தில் கவுரவ லெஃப்டினென்ட் கர்னலாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராணுவ வீரர்களுடன் உரையாடுவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல் தோனி விளையாடும் வீடியோ கேம்ஸ் கூட ஆர்மி சம்பந்தமானதாகத் தான் இருக்கும் என விராட் கோலியே ஒருமுறை கூறியிருக்கிறார். அதன் படி தான் இந்தமுறையும் ராணுவ வீரர்களை அவர் சந்திக்கவுள்ளார். இந்நிலையில் இந்திய அணி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தோனிக்குப் பதிலாக பந்த் முழுநேர கீப்பராக செயல்படப்போவது உறுதியாகியுள்ளது.
விடுதலை வீரர் அர்த்தநாரீச வர்மாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும்! மருத்துவர் இராமதாசு
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கிய அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபம் அமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் நிறுவனருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் தமிழக சட்டப்பேரவை மண்டபத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப் பேரவைத் தலைவர் தனபால் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த விழாவில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.
பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றியதுடன், வன்னிய மக்களுக்கு இட ஒதுக்கீடு கோரி குரல் கொடுத்தவரான இராமசாமி படையாட்சியாருக்கு சட்டப்பேரவையில் உருவப்படம் திறந்திருப்பது மிகவும் பொருத்தமான அங்கீகாரம் ஆகும். அதற்கு முன்பாக அவரது பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும்; கடலூரில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அவற்றை செயல்படுத்தி வரும் தமிழக அரசு, இப்போது இராமசாமி படையாட்சியாரின் உருவப்படத்தையும் திறந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இராமசாமி படையாட்சியார், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா. ஆதித்தனார், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, இரட்டைமலை சீனிவாசன், ஏ.டி.பன்னீர்செல்வம், ஒண்டிவீரன், வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், காலிங்கராயன், ம.பொ.சிவஞானம் உள்ளிட்ட தலைவர்களுக்கு இந்த ஆட்சியில் சிறப்பு செய்யப்பட்டிருக்கிறது. இது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
தமிழக அரசால் சிறப்பிக்கப்பட்ட இந்த வரிசையில் விடுதலைப்போராட்ட வீரரும், இராஜரிஷி என்று போற்றப்பட்டவருமான அர்த்தநாரீச வர்மாவுக்கு இடமளிக்கப்படாதது தான் மிகுந்த வருத்தமளிக்கிறது. சேலம் மாநகர எல்லைக்குட்பட்ட சுகவனபுரியில் 1874-ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி பிறந்த அர்த்தநாரீச வர்மா அவர்கள், தனது வாழ்நாள் முழுவதும் கதராடை அணிவதையே கொள்கையாகக் கொண்டிருந்தார். தேச விடுதலை, தமிழ்நாட்டின் எல்லைக்காப்பு, மதுஒழிப்பு, கல்வி, சமூக முன்னேற்றம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி ஏராளமான கவிதைகளை அவர் எழுதியுள்ளார். மகாகவி பாரதியாரின் சமகாலத்தவரான அர்த்தநாரீச வர்மாவின் கவிதைகள் பாரதியாரின் கவிதைகளுக்கு இணையான வீரியம் கொண்டவை. பல பத்திரிகைகளை தொடர்ந்து நடத்தி விடுதலை உணர்வை ஊட்டிய வர்மா ஏராளமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். அவரது கவிதைகள் விடுதலைப் போருக்கு உரமூட்டின.
வெள்ளையரின் அடக்குமுறை உச்சத்தில் இருந்த காலத்தில் கூட, அவற்றைக் கண்டு அஞ்சாதவராக விளங்கியவர் அர்த்தநாரீச வர்மா ஆவார். மகாகவி பாரதியார் இறந்தபோது, ஆங்கிலேயருக்கு அஞ்சி அவரது இறுதி ஊர்வலத்துக்கு கூட யாரும் வராத போது, பாரதியாருக்காக துணிச்சலாக இரங்கல் பாடிய ஒரே கவிஞர் அர்த்தநாரீச வர்மா மட்டுமே. அவரது இரங்கற்பா சுதேசமித்திரனில் வெளியானது. இந்திய விடுதலைக்காக வீரபாரதி எனும் பத்திரிகையை நடத்தினார். ஆனால், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பத்திரிகை நடத்துவதை தடுக்கக் கொண்டுவரப்பட்ட அச்சக சட்டத்தால் அர்த்தநாரீச வர்மா பாதிக்கப்பட்டார். வாரத்தில் 3 நாட்கள் வெளிவந்த இப்பத்திரிகை, அரச அடக்குமுறையால் நிறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு வித்திட்டதில் அர்த்தநாரீச வர்மாவின் பங்கு மகத்தானது. மதுவிலக்கை வலியுறுத்தி நாடு முழுவதும் சென்று பரப்புரை மேற்கொண்டார். நாட்டுக்காகவே வாழ்ந்த, உழைத்த அர்த்தநாரீச வர்மாவுக்கு இந்த நாடும், சமூகமும் பரிசாக வழங்கியது வறுமையைத் தான். சேலத்தில் பிறந்து தமது வாழ்வின் இறுதிக்காலத்தை திருவண்ணாமலையில் கழித்த அர்த்தநாரீச வர்மா தமது 90-ஆவது வயதில் 07.12.1964 அன்று காலமானார். அவரது சேவை இன்றுவரை அங்கீகரிக்கப்படவில்லை.
கவிச்சிங்கம் அர்த்தநாரீச வர்மாவின் பணிகளுக்கும், சேவைகளுக்கும் உரிய அங்கீகாரம் வழங்காமல் இனியும் புறக்கணிக்கக் கூடாது. தமிழகத்திற்கு புகழ் சேர்த்த தலைவர்களை பெருமைப்படுத்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் பிறந்தநாளினை அரசு விழாவாக கொண்டாடுவதுடன், திருவண்ணாமலையில் அர்த்தநாரீச வர்மாவுக்கு மணிமண்டபமும், சேலத்தில் திருவுருவச்சிலையும் அமைக்க வேண்டும்.
அர்த்தநாரீச வர்மா அவர்களின் வரலாறு மற்றும் பாடல்களை பாடநூல்களில் சேர்ப்பது; தமிழ் மொழியில் சிறந்த கவிஞர்களுக்கு அர்த்தநாரீச வர்மா பெயரில் விருது வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசும் அதன் பங்குக்கு விடுதலைப் போராட்ட வீரரை கவுரவிக்கும் வகையில் சேலம் விமான நிலையத்துக்கு அர்த்தநாரீச வர்மா பெயரை சூட்டி, அவரது அஞ்சல் தலையை வெளியிட வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
Ardhanarishvara Varma Freedom Fighter,Ardhanarishvara Varma,சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா, மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர் அர்த்தநாரீச வர்மா,மறைக்கப்பட்ட சுதந்திர போராட்ட போராளி அர்த்தநாரீச வர்மா
கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்படும் நபர் நடிகர் சூர்யா. இவர் முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது மத்திய அரசின் சில திட்டங்களை எதிர்த்து பேசினார். அதாவது மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை, நீட் தேர்வு போன்ற திட்டங்களை விமர்சித்து பேசினார்.
அதாவது புதிய கல்வி கொள்கை மாணவர்களை பெரிதும் பாதிக்கும். நீட் தேர்வு காரணமாக ஏழை மாணவர்கள் பாதிப்படைகின்றன. நீட் கோச்சிங் என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் 5000 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடத்துகின்றனர். ஒரு ஏழை மாணவர் அவ்வளவு தொகையில் எவ்வாறு படிக்க முடியும்.
மேலும் மும்மொழி கொள்கை என்ற பெயரில் ஒரு மொழியை திணிப்பது தவறாகும். அவரவர் தாய் மொழியில் படித்தால் தான் சிரிப்பாக படிக்க முடியும் என்று கூறினார்.
இவரின் பேச்சுக்கு பலரும் ஆதரவாகவும் தெரிவித்தனர். குறிப்பாக நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளிப்படையாகவே சூரியாவுக்கு ஆதரவு தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான திரு அன்புமணி ராமதாஸ் அவர்கள் சூர்யாவின் கருத்து சரியானது, கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் சூரியா மீது பாஜக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். அமைச்சர் கடம்பூர் ராஜூ, சூரியாவுக்கு என்ன தெரியும்? என்று கேட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் சூரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது என்று கூறியுள்ளார்.
மேலும், பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.
இவ்வாறு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழகத்தில் வெடிக்கும் போராட்டம், ஏன் எதற்கு இந்த போராட்டம். எங்களுக்கு தனி மாவட்டம் வேண்டும் என மயிலாடுதுறை மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
மக்களின் கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும். அதாவது மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில், ஆகியவை சேர்த்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் என குத்தாலம், தாரங்கப்பாடி, மணல்மேடு மக்கள் இரண்டு நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர்.
அதாவது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரகள் செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் புதிய மாவட்டங்கள் ஆகும். என சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தென்காசி நெல்லையில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், இரண்டு புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் எங்களது கோரிக்கையும் நிறைவேற்றவேண்டும் என மயிலாடுதுறை மக்கள் போராடுகின்றனர்.
மயிலாடுதுறை, சீர்காழி, மணல்மேடு, தரங்கம்பாடி, குத்தாலம், செம்பனார் கோவில், வைதீஸ்வரன் கோவில் ஆகிய ஊர் மக்களின் போராட்டங்களை ஏற்று அரசு செவிசாய்க்குமா? அல்லது முடியாது என்று கூறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆஹா, இது சூப்பர்! தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் பெருமை! முதல்வர் அறிவிப்பு
ஆஹா, என்ன ஒரு மகிழ்ச்சியான செய்தி. இது தமிழகத்திற்கும் தமிழுக்கும் தமிழருக்கும் பெருமையான விஷயம் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை சிறப்பிக்கும் நாளாக விளங்குகிறது. அது போல் இனிமேல் தமிழ்நாடு நாள் என ஒன்றை நம் தமிழ் மக்கள் கொண்டாடவிருக்கிறோம்.
ஆம், இனி நவம்பர் 1-ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். ஏற்கனவே 110 விதியின் கீழ் தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு என இரண்டு மாவட்டங்கள் உருவாகும் என முதல்வர் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இன்றும் 110 விதியின் படி தமிழ்நாடு நாள் என தமிழகத்தில் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும் அவ்விதியின் படி நிறைய அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஒன்று , தமிழறிஞர்களுக்கு புதிய விருதுகளையும், வரலாற்றில் இல்லாத அளவிற்கு நிதியுதவிகளையும் வழங்கி வந்த மறைந்த செல்வி ஜெயலலிதா, மேலும் அதை தொடர்ந்து அவர்கள் வழியில் செயல்படும் இந்த அரசும், இது வரை 149 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்கி, அவர்தம் மரபுரிமையாளர்களுக்கு பரிசு தொகை வழங்கியுள்ளது.
அவற்றின் அடிப்படையில் பரிசு பெறுவோர் விவரம்;
பண்டித ம. கோபால கிருட்டிணன்
புலவர் இறைக்குருவனார்
தமிழறிஞர் அடிகளாசிரியர்
முனைவர் இரா.இளவரசு
உளுந்தூர் பேட்டை திரு. சண்முகம்
பாபநாசம் குறள்பித்தன்
கவிஞர் நா. காமராசு
இவர்களின் படைப்புகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வகையில் நாட்டுடைமையாக்கப்படும். இதற்கென 35 லட்சம்
ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும்,முதல்வர் கூறியதாவது தனி தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நவம்பர் 1, 1956-ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் நவம்பர்-1ஆம் நாள் ‘தமிழ்நாடு தினம்’ என்ற பெயரில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார்.
தமிழ் மொழிக்கு ஒரு இருக்கையும் ஆசிரியரும் வாரணாசி இந்து பல்கலைக் கழகம், கவுகாத்தி பல்கலைக் கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இயங்கிவரும் தென்னிந்திய மொழிகள் துறையில் தலா ஒரு தமிழ் உதவிப் பேராசிரியர் பணியிடம், 36 லட்சம் ரூபாய் தொடர் செலவினத்தில் தோற்றுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
உலகபொது மறை என அழைக்கப்படும் திருக்குறளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒரு ஒரு ஆண்டும் ஒரு இந்திய மொழி ஒரு உலக மொழிகளில் மொழி பெயர்ப்பு செய்து திருக்குறளை பெருமை படுத்தபடும். இதற்கென 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இந்த ஆண்டு இந்திய மொழிகளான அசாமி மற்றும் சிந்தி மொழிகளிலும், உலக மொழியான டஃப்ரு மொழியிலும் திருக்குறள் மொழிபெயர்ப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்தார்
டாக்டர். ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிகளின் தலைவர் என அனைவராலும் அறியப்படும். அவரின் தமிழ்ப் பணியினைப் போற்றி சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் தமிழ் பல்கலைகழகத்தில் கால்டுவெல் பெயரில் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இதற்கென ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
மேலும் ‘ஒருங்கிணைந்த உயர்கல்வி வளர்ச்சித் திட்ட”த்தின் கீழ், தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழை சிறப்பிக்கும் வகையில் 20 கோடி ரூபாய் நிதியில் புதிய கட்டுமான வசதிகள், மேம்பாடு மற்றும் வளர்ச்சிப் பணிகள், புதிய கருவிகள் வாங்குதல் மற்றும் ஏனைய வசதிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
அண்டை மாநிலம் கர்நாடகா, கர்நாடகா நாள் என கொண்டாடுவது போல நாமும் தமிழ்நாடு நாள் என கொண்டாடுவோம்.
சட்ட பேரவையில் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார்! வாக்குறுதியை நிறைவேற்றிய டாக்டர் ராமதாஸ்!
நாட்டில் நிறைய தலைவர்கள் சுதந்திரத்திற்காகவும், மண்ணிற்காகவும், பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், போராடி தன் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அப்படி இருக்க நாம் அனைவரும் அறிந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையச்சியார் அவர்கள் மக்களுக்காகவும், நாட்டிற்காகவும், போராடியவர் ஆகும்.
அவருக்கு நமது மாநில முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த வருடம் சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதாவது, எஸ் எஸ் ராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு சட்ட சபையில் அவரை போற்றும் வகையில் திரு உருவ படம் வைக்கப்படும் எனவும், அவரின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார்.
அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவிற்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. கலந்து கொள்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் பங்குகொள்ளவில்லை.
ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள்.அந்த வாக்குறுதியை இன்று மீறுவாரா? என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி இருந்தனர்.
திமுக உள்ளிட்ட கட்சியின் இணையதள உறுப்பினர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி கலந்து கொண்டார்கள்.
டாக்டர் ராமதாஸின் கடிதத்தில் தெரிவித்தது என்னவென்றால், “அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!
உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி!
வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த மக்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால் அனைத்து எதிர்கச்சிகளும் டாக்டர் ராமதாஸ் சட்ட சபையில் கால் பதிப்பரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. எஸ் எஸ் ராமசாமி படையாட்ச்சியார் அனைவரும் போற்றகூடிய மாபெரும் தலைவர் ஆவார். உழைப்பாளர் மக்களின் முன்னேற்றம் அடைய பாடுபட்டவர்.
தமிழக
சட்டப்பேரவையில் எஸ்.எஸ்.
ராமசாமி படையாட்சியார் உருவப்படத்தை எடப்பாடி
பழனிசாமி திறந்து வைத்தார்
தமிழக சட்டப்பேரவையில்
ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து
வைத்தார். மேலும் ராமசாமி படையாச்சியார்
மணி மண்டபம் விரைவில் திறப்பப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
வன்னிய சமூகத்தின் பெரும்
தலைவர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் கடலூர் மாவட்டத்தில் உள்ள
மஞ்சகுப்பத்தில் பிறந்தவர், பள்ளிப்
படிப்பை முடித்த காலத்திலேயே இவர் சுதந்திர போராட்டத்தில் மிகுந்த தீவிரத்தோடு
ஈடுபட்டவர்.
ஆரம்பத்தில்
சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட இவர் நாட்டின் விடுதலைக்கு
பின்னர் வன்னிய சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டார், மேலும் தமது நோக்கத்தை நிறைவேற்ற 1951-ஆம் ஆண்டு தமிழ்நாடு
உழைப்பாளர் கட்சியை தொடங்கினார்.
1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில்
அவரது கட்சி வேட்பாளர்கள் 19 சட்டமன்ற தொகுதிகளிலும், 4 மக்களவை தொகுதிகளிலும்
வெற்றி கண்டனர். 1954-ஆம் ஆண்டு காமராஜர் தமிழக முதலமைச்சராக பொறுப்பு ஏற்ற போது, அவருக்கு ஆதரவை
தெரிவித்த ராமசாமி படையாச்சியார், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை காங்கிரசில் இணைத்தார்.
இதனையடுத்து தமிழக
உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் பொறுப்பு ஏற்றார். 1980, 1984 ஆம் ஆண்டுகளில்
நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக திண்டிவனம் தொகுதியில்
போட்டியிட்டு இருமுறையும் வெற்றி கண்ட ராமசாமி படையாச்சியார், 1992-ஆம் ஆண்டு காலமானார்.
சுதந்திர
போராட்ட தியாகியும், தமிழக
முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான ராமசாமி படையாச்சியாரின் உருவப்படத்தை
சட்டமன்றத்தில் திறந்து வைக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு முடிவு
எடுத்தது.
ஏற்கனவே தமிழக சட்டப்பேரவையில், மகாத்மா காந்தியடிகள்,ராஜாஜி, திருவள்ளுவர், அறிஞர் அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர்.
முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கர், காயிதே மில்லத், ஜெயலலிதா ஆகிய 11 பேரின் படங்கள் உள்ளன.
இந்நிலையில் 12 வது படமாக ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் எடப்பாடி
பழனிசாமி திறந்து வைத்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், வாழும்போதே வரலாறாக
வாழ்ந்த மரியாதைக்குரியவர் ராமசாமி படையாச்சியார் என்றார். நாட்டுக்காகவும், சமுதாயத்திற்காகவும்
உழைத்த நல்லவர்களை சிறப்பிப்பதில், அரசும் முன்மாதிரியாக
திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
ராமசாமி படையாச்சியாருக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர், கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் 2 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1.5 ஏக்கர் அரசு நிலத்தில் ராமசாமி படையாச்சியாருக்காக கட்டப்பட்டு வரும் மணி மண்டபம் விரைவில் திறக்கப்படும் என்றும் கூறினார். படத்திறப்பு விழாவிற்கு பிறகு அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுமார் 15 நிமிடங்க்ள ஆலோசனை நடத்தினார்.
TNPL 2019 டி.என்.பி.எல் 2019 முதல் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்திய திண்டுக்கல் டிராகான்ஸ்!
TNPL 2019 டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகளுக்கும் இடையேயான முதலாவது லீக் ஆட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். இதில் ஹரி நிஷாந்த் 1 ரன்னிலும், ஜெகதீசன் 17 ரன்னிலும் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தனர்.
பின்னர் சற்று அதிரடி காட்டிய ஆர்.அஸ்வின் 37 ரன்களில் எம்.அஸ்வின் பந்தில் கேட்ச் ஆனார். அதற்கு பின் விவேக் 4 ரன்னிலும், சதுர்வேத் 21 ரன்னிலும், சுமந்த் ஜெயின் 10 ரன்னிலும், முகமது 3 ரன்னிலும், அபினவ் 8 ரன்னிலும், எம்.சிலம்பரசன் 2 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
இறுதியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்தது. கடைசியில் ரோஹித் 8 ரன்னுடனும், கவுசிக் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அலெக்சாண்டர் 3 விக்கெட்டுகளும், எம்.அஸ்வின் 2 விக்கெட்டுகளும், ஜி.பெரியசாமி, சித்தார்த், டி.ராகுல் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கவுசிக் காந்தி மற்றும் கங்கா ஸ்ரீதர் ராஜூ ரன் எதுவும் எடுக்காமலும், கோபிநாத் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அடுத்து வந்த ஆரிப் 16 ரன்னிலும், சசிதேவ் 13 ரன்னிலும், எம்.அஸ்வின் 16 ரன்னிலும், சித்தார்த் 12 ரன்னிலும், டி.ராகுல் 4 ரன்னிலும், ஹரிஸ் குமார் 15 ரன்னிலும் என அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது. கடைசியில் ஜி.பெரியசாமி 7 ரன்னுடனும், அலெக்சாண்டர் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிலம்பரசன் 4 விக்கெட்டுகளும், கவுசிக் மற்றும் முகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் , அபினவ் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனிப்பாதை வகுத்து அதில் பயணித்துவருபவர் கார்த்தி. அவரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கைதி’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இவர் தற்போது, அடுத்த சில வருடங்களுக்கு எந்த அறிமுக இயக்குநரின் கதையிலும் நடிக்கப்போவதில்லை என முடிவெடுத்திருக்கிறாராம். கார்த்தியின் முந்தைய படமான ‘தேவ்’, ரஜத் ரவிச்சங்கர் என்ற அறிமுக இயக்குநரால் உருவானது. அந்தப் படத்தின் படுதோல்வி காரணமாகவே, கார்த்தி இந்த முடிவை எட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே 2012-ல் வெளியான ‘சகுனி’ படத்தின் தோல்விக்குப் பிறகு சில வருடங்களாக உதவி இயக்குநர்களிடம் கதைக் கேட்பதைத் தவிர்த்துவந்த கார்த்தி, சமீபத்தில்தான் ‘தேவ்’ படத்தின்மூலம் மீண்டும் ஒரு உதவி இயக்குநருக்கு வாய்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில் மீண்டும் இந்த முடிவை அவர் எடுத்திருப்பது கோலிவுட் உதவி இயக்குநர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏற்கெனவே கார்த்திக்காக உதவி இயக்குநர்களிடம் கதை கேட்டு ஒப்பந்தம் செய்திருந்த தயாரிப்பாளர்களும் அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே கார்த்தியின் சகோதரர் சூர்யா, கடந்த 15 வருடங்களாகவே புதுமுக இயக்குநர்களின் கதைகளில் நடிப்பதில்லை என்பதை ஒரு அறிவிக்கப்படாத கொள்கையாகவே பின்பற்றிவருகிறார் என்பது ஒரு கூடுதல் தகவல்.