திமுக உதவியுடன் அத்திவரதரை தரிசித்த பிரபல ரவுடி மக்கள் அதிர்ச்சி!
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் திமுக பிரமுகர் மூலம் அனுமதி சீட்டு இல்லாமல் சிறப்பு தரிசனத்தில் , அத்திவரதரை தரிசித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதியிலிருந்து நம் அனைவராலும் அறியப்பட்ட விசயம் அத்திவரதர் திருக்கோயில். ஆம் தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு எனும் இடத்தில் மிகவும் பிரசித்திபெற்ற அத்திவரதர் கோவில் உள்ளது.
இந்த அத்திவரதரை காண்பது என்பது அவ்வளவு எளிதல்ல. அதாவது 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் காண இயலும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆம் அத்திவரதர் 40 வருடங்கள் அந்த கோவிலில் உள்ள குளத்தில் முழுவதுமாக மூழ்கிய நிலையில் இருக்கும். 40 வருடம் முடிந்த பிறகு 48 நாட்களுக்கு குளத்தை விட்டு எடுத்து மக்கள் தரிசனத்திற்காக வைக்கப்படும். இந்த 48 நாட்கள் காஞ்சிபுரம் மாவட்டமே திருவிழா போல் காணப்படும். இதற்காக லட்சம் கணக்கில் மக்கள் கூட்டம் அத்திவரதரை காண அலைமோதும்
ஜூலை 1 ,2019 அன்று அத்திவரதறை தரிசிக்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அத்திவரதரை காண பெரும் மக்கள் கூட்டங்களுடன் அலைமோதுகிறது. தரிசனம் செய்ய குறைந்தது 6 முதல் 7 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
இவ்வளவு சிறப்பு மிக்க அத்திவரதரை நமது தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பெரும்பாலோனோர் தரிசித்தனர். இவற்றில் குறிப்பாக மூட நம்பிக்கைகளை எதிர்த்த பெரியார் கொள்கையை பின் பற்றுவதாக கூறி அரசியல் செய்யும் திமுக தலைவரின் ஸ்டாலினின் மனைவி துர்கா,பாஜக தலைவர் H. ராஜா,பாமகவின் அன்புமணி ராமதாஸ் மற்றும் தமிழக ஆளுநர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தார்கள். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு இது பொல் அத்திவரதர் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது அறிந்ததே. மீண்டு 2059 லில் தான் தரிசிக்க முடியும் என்பதை அறிந்து மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அத்திவரதரை தரிசிக்க மக்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கும் இந்நிலையில் மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு தரிசன டிக்கெட் இல்லாமல் எப்படி தரிசித்தார் என்பது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அத்திவரதரை காண வந்த பக்தர்கள் பெரும் கோபமடைந்தனர்.
இதை விசாரித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது. வரிச்சியூர் செல்வத்திற்கு விஐபி தரிசனம் செய்ய அனுமதி கிடைத்தது எப்படி?,அவரை யார் கூட்டிக்கொண்டு வந்தது என்பதை சிசிடிவி கேமராவில் கண்டோம். மதுரையை சேர்ந்த வரிச்சியூர் செல்வம் திமுக பிரமுகர் ஒருவருடன் விஐபி தரிசனம் செய்தார் என்பது இதில் தெரிய வந்துள்ளது.
இதை பற்றி மேலும் விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மக்கள் கூட்டத்தில் கஷ்ட பட்டு தரிசிக்கும் பொழுது பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்தது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு திமுக அரசியல் கட்சியை சேர்ந்த ஒருவரே உதவி செய்ததால் மக்கள் உச்ச கட்ட கோபத்தில் உள்ளனர்.