Thursday, November 14, 2024
Home Blog Page 5129

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

0

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது:

ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைப் பற்றி, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட தமிழகத்தின் உறுப்பினர்கள் ஒரு கேள்வியை எழுப்பியிருக்கின்றார்கள். அதற்கு, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘தமிழகத்தில் மீத்தேன் திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

7 ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றது. தமிழ்நாட்டிற்கு மேலும் 23 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் மைனிங் லைசென்ஸ் தமிழக அரசிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது’’ என்று கூறியிருக்கின்றார்.

ஏற்கனவே இதே அவையில் நான் ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தேன். அப்பொழுது பதிலளித்துப் பேசிய தொழிற்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு உறுதியாக அனுமதி அளிக்காது விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை’’ என்று இந்த பேசி அது பதிவாகியிருக்கின்றது. அதுமட்டுமல்ல, திமுக உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜாவும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து இதனைப் பற்றி பேசியுள்ளார்.

அப்பொழுது பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர், ‘‘தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியே கிடையாது. ஓ.என்.ஜி.சி அனுமதி கோரியும் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை. இதுதான் உண்மை’’ என்று உறுதியாக பதில் தந்திருக்கிறார். எனவே, நான் கேட்க விரும்புவது ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்பதை தமிழக அரசு ஒரு கொள்கை முடிவாக எடுத்து இந்த அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அறிவிப்பது மட்டுமல்ல அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்தால்தான் அங்கு இருக்கக்கூடிய விவசாயிகள் நிம்மதிப் பெருமூச்சு அடைய முடியும். எனவே ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என்ற ஒரே கொள்கை முடிவினை இந்த அரசு எடுக்க வேண்டும். அதுவும் இந்தக் கூட்டத்தொடரில் எடுத்திட வேண்டும்.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தந்திருக்கக்கூடிய பதிலின் அடிப்படையில்தான், நான் மீண்டும் – மீண்டும் கேட்கின்றேன். டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு ஒரு நிம்மதி வரவேண்டும் என்று சொன்னால் உடனடியாக ஒரு கொள்கை முடிவு எடுத்து அதை நீங்கள் அறிவித்து, இந்த அவையில், இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் பேசினார்.

புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

0

புதிய கல்வி கொள்கை கருத்தில் நடிகர் சூர்யாவை ஆதரிக்கும் அன்புமணி ராமதாஸ்

புதிய கல்வி கொள்கை கருத்து இந்தியாவில் யார் வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம் என நடிகர் சூர்யாவை சுட்டிக்காட்டி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். 

பாமகவின் 31வது ஆண்டு விழாவை முன்னிட்டு தியாகராய நகரில் உள்ள பாமகவின் கட்சி அலுவலகத்தில் பாமக கொடியை அன்புமணி ராமதாஸ் ஏற்றி வைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாமகவால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே மாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மக்களுக்காக பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றும் அவர் அப்போது கூறினார். அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் எனவும், தமிழை தவிர்த்துவிட்டு நடத்தப்பட்ட இந்த தேர்வு மீண்டும் நடத்த மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.  

புதிய கல்விக்கொள்கை வரைவு தொடர்பாக ஆய்வு செய்ய பாமக குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும், அந்த குழுவின் அறிக்கையை மத்திய, மாநில அரசுகளிடம் அளிப்போம் எனவும் அவர் கூறினார். மேலும் நீட், எக்சிட் போன்ற தேர்வுகள் எல்லாம் தனியார் பயிற்சி மையம் உருவாகவே வழிவகுக்கும் என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

0

நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

பாஜக தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்த துடிக்கும் புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என நான் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் நடந்த சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 40வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா பேசினார். அந்த விழாவின் போது அவர் பேசுகையில் மூன்று வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது என்றும் முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிக்கப் போகிறார்கள் என்றும் பேசியிருந்தார்.

மேலும் அவர் பேசுகையில் எல்லோரும் அமைதியாக இருந்தால் இது நிச்சயம் திணிக்கப்படும். எனவே புதிய கல்வி கொள்கை மீதான ஆலோசனைகளை மாற்றங்களை ஆசிரியர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து உரக்கச் சொல்லுங்கள் என்றும் பேசினார்.ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து அடங்கிய நிலையில் மீண்டும் இது குறித்து நடிகர் சூர்யா பேசியது பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்களின் கருத்து

நடிகர் சூர்யாவின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது கருத்தை எச் ராஜா, தமிழிசை, அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் ஆகியோர் கண்டித்தனர்.

புதிய கல்விக் கொள்கை சூர்யா பேச்சு பற்றி சீமான் கருத்து

இந்த நிலையில் இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நடிகரும் இயக்குனருமான சீமான் கூறுகையில் புதிய கல்விக் கொள்கையில் சூர்யா பேசியதில் அரசியல் பார்க்கக் கூடாது. இது அடிப்படை உரிமையாகும். நான் பல ஆண்டுகளாக பேசுவதைத்தான் தற்போது சூர்யா பேசியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதில் மகிழ்ச்சியும் பெருமையும்தான் அடைய வேண்டும். சினிமா துறை சார்ந்த பெரிய நடிகர்கள் எல்லாரும் பயந்து கொண்டு இருக்கும் போது சூர்யா தன் மனதில் பட்டதை தைரியமாக கூறியுள்ளார் என்றும் மறைமுகமாக பெரிய நடிகர்களை சீமான் சீண்டியுள்ளார்.

சமச்சீர் கல்வி பற்றி சீமான்

கல்வி என்பது மானுட உரிமை. அதை நியாயமாக கொடுக்க வேண்டியது அரசின் கடமையாகும். சூர்யா கேட்கும் கேள்விகளில் எத்தனை நியாயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சி செய்த கருணாநிதி ஆட்சியில் சமச்சீர் கல்வி கொண்டு வந்தார்கள். ஆனால் அப்போது சமச்சீர் கல்வி முறை என்பது இல்லை.

கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்களும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் ஒரே தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது வாய்ப்பில்லை. இது எவ்வாறு சமவாய்ப்பாக அமையும். இதைத்தான் சூர்யா சொல்கிறார். எனவே புதிய கல்விக் கொள்கை என்பதை ஏற்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட இந்த விவகாரத்தில் நடிகர் சூர்யா பேச்சுக்கு ஆதரவளித்து அவருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இணைந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்கலாம்: அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

மத்தியில் ஆள்வது தங்களுடைய பாஜக என்றாலும் மாநிலத்தில் அரசியல் செய்ய வேண்டுமென்றால் மாநில நலன்களை குறித்தும் பேச வேண்டும் என்பதை தமிழக பாஜக தலைவர்கள் என்று புரிந்து கொள்வார்களோ?

அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

0

அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தவுள்ள நாடு எது தெரியுமா?

பரபரப்பு மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இங்கிலாந்தில் நடைபெற்று வந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் நேற்று நடந்து முடிந்த 2019 ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் முதல் முறையாக உலக கோப்பையை வென்று இங்கிலாந்து ஒரு புதிய சாம்பியனாக மாறியுள்ளது , கிரிக்கெட் விளையாட்டை அறிமுகம் செய்த இங்கிலாந்து அணி உலகக்கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது, இதற்கு முன்னர் நடந்த 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.

அப்போது ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது அதற்கு முன்னர் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்றபோது இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. 2023 ஆண்டு நடைபெறும் அந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த உலகக்கோப்பையை இந்தியா தான் நடத்த உள்ளது. இந்த முடிவு கடந்த 2013 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே அல்லது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாம்: நடிகர் சூர்யாவுடன் இணைந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்! கலக்கத்தில் அரசியல் கட்சி தலைவர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 முறை உலகக்கோப்பை தொடரை நடத்தும் அணியே வெற்றிபெறும் சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அடுத்த உலக்கோப்பையை நடத்தவுள்ள இந்தியாவிற்கு சாதகமான சூழல் உருவாகுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது

ஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்! பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி

0

ஸ்டாலினுக்காக திமுகவினர் செய்த பொய் விளம்பரத்தை கண்டித்த ஐநா துணைப் பொதுச்செயலாளர்! பட்டியலிட்டு விமர்சிக்கும் பாமக நிர்வாகி

ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர். ஆனால் அது உண்மையல்ல என்பதை அறிந்த மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விவகாரத்தை சம்பந்தபட்டவருக்கு தெரிவிக்க அவரும் இது முற்றிலும் தவறான தகவல் என்று கூறி கண்டித்துள்ளார். இது குறித்து பாமக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரான பசுமை தாயகம் அருள் ரத்தினம் முகநூலில் இதுவரை திமுகவினர் செய்த பொய் விளம்பரங்களை பட்டியலிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

“திமுகவின் வெட்கம் கெட்ட விளம்பரங்கள்: ஐநா சபை கண்டனம்!” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ள அந்த பதிவில் கூறியுள்ளதாவது.

மு.க. ஸ்டாலின் பொய் சொல்வதாக ஐநா அவை முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் கண்டித்துள்ளார். இப்படி ஒரு அவலம் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. இது தமிழக மக்களுக்கு நேர்ந்த அவமானம் ஆகும்.

பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். ‘திமுக தலைவர் கலைஞருக்கு ஆஸ்திரியா நாடு அஞ்சல் தலை வெளியிட்டது’ என்றும், மு.க. ஸ்டாலினுக்கு அமெரிக்காவின் தலைசிறந்த ‘கென்டக்கி கர்னல்’ விருது வழங்கப்பட்டது என்றும் கட்டுக்கதைகள் வெளியிடப்பட்ட போதெல்லாம் அதனை தொடர்புடைய அமைப்புகள் மறுக்கவில்லை. ஆனால், இப்போது சமூக ஊடகங்களின் உதவியுடன் திமுகவினரின் முகத்திரை ஐநா அவையால் கிழிக்கப்பட்டுள்ளது.

“ஐநா முன்னாள் துணைப் பொதுச்செயலாலர் கண்டனம்: நடந்தது என்ன?”

ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் என்பவர் அவர் எழுதிய ஒரு புத்தகத்தில் மு.க .ஸ்டாலினை புகழந்துள்ளதாக ரூ.200 திமுகவினர் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பி வந்தனர்

“நான் வியந்த உலகத் தலைவர்கள்” என்ற புத்தகத்தின் 372-வது பக்கத்தில் ஸ்டாலின் குறித்து ஐநா முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் குறிப்பிட்டு இருந்ததாகவும், அதில் “நான் வியந்த அரசியல் ஆளுமைகளில் தளபதியும் ஒருவர், தொடர்ந்து ஒரு மணி நேரம் என்னிடம் மக்கள் பிரச்சினைகள் குறித்து பேசினார் என்றும், அவரின் நீண்ட கால அரசியல் திட்டங்கள் குறித்த அவரின் பேச்சுக்களை நானே தனிப்பட்ட முறையில் குறிப்பு எடுத்து அதனை இன்று வரை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறேன்” என்றும், “இப்படிப்பட்ட ஒரு தலைவர் மற்ற நாடுகளில் இருந்தால் அவரை உலகமே தூக்கிக் கொண்டு இருக்கும்” என்றும் ஜான் எலியாசன் தனது புத்தகத்தின் 372வது பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாக திமுகவினர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருந்தனர்.

இது குறித்து ஒரு சிலர் டுவிட்டரில் ஜான் எலியாசன் அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு இவ்வாறு நீங்கள் உங்களுடைய புத்தகத்தில் கூறியது உண்மைதானா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலாக: ‘ஸ்டாலின் யார் என்றே எனக்கு தெரியாது. இது வெட்கம் கெட்ட பொய்ச்செய்தி ‘ என்று ஜான் எலியாசன் டுவிட் செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல், மு.க. ஸ்டாலின் தன்னுடன் நிற்கும் படம் குறித்து தனக்கு நினைவு இல்லை என்றும், அது தனது அலுவலகம் போல இல்லை என்றும் கூட குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, மு.க. ஸ்டாலினை மாபெரும் ஆளுமையாக ‘போலியாக கட்டமைக்கும்’ திமுகவின் முயற்சிக்கு – ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் நேரடியாக மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் விநோதமானது (strange), வெட்கம் கெட்டது (brazen), பொய்ப்பித்தலாட்டம் என்பதாகவெல்லாம் அவர் திமுகவினரை விமர்சித்துள்ளார்.

கடந்த கால ‘வெட்கம் கெட்ட விளம்பரங்கள்’

பொய்யான கட்டுக்கதைகள் மூலம் அப்பட்டமாக புளுகுவது, திமுகவினருக்கு இது முதல் முறை அல்ல. ஆஸ்திரியா ஸ்டாம்பு என்றும் கென்டக்கி கர்னல் என்றும் மாபெரும் பொய்களை வெட்கமே இல்லாமல் அள்ளி விட்டவர்கள் தான் திமுகவினர்!

கருணாநிதி: ஆஸ்திரியா ஸ்டாம்பு”

“தலைவர் கலைஞரின் தமிழ்ப் பணி – சமுதாயப் பணியைப் பாராட்டி “கலைஞர் 90″ அஞ்சல் தலை. ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்டு கௌரவித்துள்ளது! உலகத் தமிழர்கள் மகிழ்ச்சி” என 5.6.2013 அன்று முரசொலி செய்தி வெளியிட்டது. “என்னுடைய தமிழ்ப் பணி – சமுதாயப் பணியைப் பாராட்டி ஆஸ்திரிய நாடு ஜூன் 3 அன்று வெளியிட்ட “கலைஞர் 90’’ அஞ்சல் தலையை பெற்றபோது” என்று 21.7.2013 அன்று இதுகுறித்த ஒரு படத்தையும் கருணாநிதி வெளியிட்டார்.

ஆஸ்திரியாவில் நமக்குப் பிடித்தவர்களின் படத்துடன் தபால் தலை வெளியிட அனுமதி உண்டு. அந்தவகையில் ஆஸ்திரிய தபால் துறைக்கு சிறப்புக் கட்டணம் செலுத்தி நமக்கு பிடித்தவர்களின் முகங்களை தபால் தலையாக வெளியிடலாம். இது ஒரு மிகச் சாதாரணமான காரியம் ஆகும்.

ஆஸ்திரிய நாட்டு அஞ்சல் துறையிடம் பணம் செலுத்தி நாம் எந்த புகைப்படத்தை வேண்டுமானாலும் அஞ்சல் தலையாக வெளியிட முடியும். எடுத்துக்காட்டாக, ஒரு குழந்தை, பூனை, நாய் அல்லது ஒரு கார்ட்டூன் போன்ற எதை வேண்டுமானாலும் வெளியிட முடியும். இதற்கு சுமார் 222 யூரோ பணம் கட்டினால் போதும்.

அப்படி ஒரு ஸ்டாம்பினை கலைஞர் கருணாநிதி பெயரில் பணம் கட்டி திமுகவினர் வாங்கினர். இதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். கலைஞரே ‘தன்னைத்தானே புகழ்ந்து’ முரசொலியில் கட்டுரை தீட்டினார்.

“மு.க. ஸ்டாலின்: கென்டக்கி கர்னல்”

அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பொதுச்சேவைக்காக பணம் திரட்டுவதற்காக கென்டக்கி கர்னல் எனும் விருதை வைத்துள்ளார்கள். இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பவர்களுக்கு கென்டக்கி கர்னல் எனும் விருதினை வழங்குவார்கள். அதாவது, யார் பணம் கொடுத்தாலும் அவர் பெயரில் ‘கென்டக்கி கர்னல்’ எனும் விருதினை அனுப்புவார்கள். இது முழுக்க முழுக்க நிதி திரட்டுவதற்கான ஒரு நுட்பம் மட்டுமே. இந்த விருதை பணம் கொடுத்து திமுகவினர் வாங்கினர்.

அதை வைத்து தமிழ்நாட்டில் பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்தனர், பாராட்டு விழாக்களை நடத்தினர். நடிகர் சங்கங்கள் சிறப்பு தீர்மானங்களை எல்லாம் நிறைவேற்றினர். இப்போதும் கூட கென்டக்கி கர்னலே என்று ஸ்டாலினை அழைக்கின்றனர் உடன் பிறப்புகள்!

“நடக்காத ஐநா கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை: மு.க. ஸ்டாலின் அண்டப்புளுகு!”

2017 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் கூடிய ஜெனீவா ஐநா மனித உரிமைகள் பேரவையின் 35 ஆம் கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை. ஆனால், இல்லாத ஒரு கூட்டத்திற்கு, மு.க. ஸ்டாலின் அழைக்கப்பட்டது போலவும், தமிழ்நாட்டில் சட்டமன்றம் கூடுவதால் அதற்கு வர இயலவில்லை என அவர் மறுத்ததாகவும் – ஒரு மோசடி நாடகத்தை திமுகவினர் நடத்தினர்.

இது தொடர்பாக திமுக வெளியிட்ட ஒரு அறிக்கையில் “ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் பங்கேற்று ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமைகள் குறித்து உரையாற்றுவதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தேன். என்றாலும், தமிழகத்தில் உள்ள சட்டமன்ற அலுவல்கள் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. இந்த முக்கியமான 35வது அமர்வில், ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கவும் பயனுள்ள ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” என்று மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

ஆனால், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 35வது கூட்டத்தில் ஈழத்தமிழர்கள் விவகாரம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை.

இப்படி இல்லவே இல்லாத ஒரு கூட்டத்திற்கு தான் அழைக்கப்பட்டதாகவும், ஆனால் ‘சட்டமன்ற அலுவல்கள் காரணமாக, தான் கலந்துகொள்ள இயலவில்லை’ என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையத்திற்கு மு.க. ஸ்டாலின் ‘காமெடி’ கடிதம் எழுதினார்.

“முகத்திரை கிழிக்கப்பட்டது”

இப்படியாக, பொய்யான கட்டுக்கதைகளை கட்டமைத்து, தமிழர்களை நம்பவைத்து ஏமாற்றுவது திமுகவுக்கு கைவந்த கலை. இப்படித்தான் காலம் காலமாக பொய்யான பிம்பங்களை பொய்ச்செய்திகள் மூலம் உருவாக்கி ஏமாற்றினார்கள். அண்மை தேர்தலில் கூட ‘கடன் தள்ளுபடி’ என்று பொய்யுரைத்து வாக்குகளை வாங்கினார்கள்!

இப்போது முதல் முறையாக, ஐநாவின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் ஜான் எலியாசன் மூலமாக இவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

0

அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

அஞ்சல் துறையில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் இன்று நடைபெறவுள்ள அஞ்சல்துறை தேர்வின் முடிவுகளை வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் இதில் தேர்வெழுதும் மொழியில் தமிழ் தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. 

தபால்துறை காலி பணியிடங்களுக்கான தேர்வுகள், இன்று நாடு முழுவதும் நடைபெறுகின்றன. தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்னர், இனி தேர்வுகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்படாது என்றும், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் எனவும் மத்திய அரசின் தபால் துறை அறிவித்தது. தமிழகத்திலிருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில், திடீரென தமிழ் மொழி உள்ளிட்ட மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளதால், தேர்வர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிராக, 
மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

கடைசி நேரத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால், ஆயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பினை இழக்கும் நிலை உருவாகியுள்ளது என்றும், எனவே, எழுத்துத் தேர்வுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கோரியிருந்தார். மேலும் தபால் துறை தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதும் வகையில், மத்திய அரசு புதிய அறிவிப்பினை வெளியிட உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு, நேற்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, மகாதேவன் ஆகியோர், இன்று எழுத்துத்தேர்வு நடத்த தடையில்லை என தெரிவித்தனர். எனினும் தேர்வு முடிவுகளை வெளியிட, தடை விதித்த நீதிபதிகள், தேர்வுகளில் தமிழ் மொழி தவிர்க்கப்பட்டது ஏன்? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்கவும் ஆணையிட்டு, வழக்கை 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

கடந்த முறை நடைபெற்ற தபால்துறை தேர்வின் தமிழ்மொழி தாளில் வடமாநில மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது சர்ச்சைக்குள்ளான நிலையில், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா?

0

வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா?

கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாரோ இல்லையோ தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் பதவியே வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அப்போதே ஓரளவு மக்களின் கணிப்பு உறுதியாகியது.

எதிர்பார்த்த மாதிரியே நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மத்தியில் ஆண்ட பாஜக அரசின் மீதுள்ள அதிருப்தியால் திமுக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை காரணமாக வைத்து உதயநிதி ஸ்டாலினை திமுகவின் இளைஞர் அணி செயலாளர் ஆக்கி விட்டார். இதையடுத்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதை சமாளிக்க வழக்கம் போல ஸ்டாலின் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சி போல உதயநிதி ஸ்டாலினையும் ஊர் ஊராக சென்று நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்குமாறு கூறியுள்ளார்.

திமுகவின் அடுத்த தலைவராக வரவுள்ள உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது சந்தித்துவிட வேண்டும் என்றும் இதன் மூலம் தங்களுடைய காரியங்களை முடிந்த வரை சாதித்து கொள்ளலாம் என்றும் பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகளும் தவியாய் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திமுக இளைஞர் அணிச்செயலாளராக உதயநிதி தேர்வு செய்யப்பட்ட பிறகு அககட்சி நிர்வாகிகள் இடையே ஒரு குழப்பம் இருந்தது. உதயநிதியை சென்று சந்திக்கலாமா? வாழ்த்து கூறலாமா? இல்லை காத்திருக்க வேண்டுமா? என்பது தான் அது. இதனால் பலரும் தவித்துக் கொண்டிருந்த நிலையில் சிலர் தலைமை கழகத்தை தொடர்பு கொண்டு உதயநிதியை சந்திக்க வேண்டும், வாழ்த்த வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறிவிட்டனர் என்கிறார்கள். இது உண்மையா என்பது கேள்வியே ஆனால் திமுகவின் அடுத்த அதிகார மையமாக மாறி வரும் உதயநிதி ஸ்டாலினை சந்திப்பது தான் சாதகமாக இருக்கும் என பெரும்பாலான நிர்வாகிகள் நினைக்க துவங்கி விட்டனர்.

உதயநிதி ஸ்டாலினை சந்திக்க தினமும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஏற்கனவே ஸ்டாலின் திட்டமிட்டது போலவே வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்கவும் உதயநிதி சந்திப்பிற்கான இந்த ஏற்பாடு உதவும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் என்கிற ரீதியில் நிர்வாகிகள் உதயநிதியை சந்திக்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது. துவக்கத்தில் உதயநிதி மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு ஸ்டாலின் தடை போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும், மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலினே நேரில் அழைத்து தம்பியை பார்த்துவிடுங்கள் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பிறகே சென்னையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பிற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்கட்டமாக சென்னை நிர்வாகிகளை உதயநிதி சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளர் முதல் வார்டு பிரதிநிதிவரை அனைவரும் நேற்று உதயநிதியை காண அழைத்து வரபட்டுள்ளனர்.

சால்வையுடன் வந்த நிர்வாகிகள் உதயநிதியை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் அவருடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திமுகவின் சென்னை முன்னாள் மேயர் மா.சுப்ரமணியம் செய்திருந்தார். சுமார் 1 மணி நேரம் வரை இந்த நிர்வாகிகள் சந்திப்பு நீடித்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பிற்கு பிறகு முக்கிய நிர்வாகிகளை மட்டும் அழைத்து உதயநிதி ஸ்டாலின் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த சந்திப்பின் போது சென்னையின் தண்ணீர் பிரச்சனை, போக்குவரத்து நெரிசல் குறித்தெல்லாம் உதயநிதி கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டதாகவும் சொல்கிறார்கள். இளைஞர் அணி நிர்வாகிகள் மட்டும் அல்லாமல் திமுகவின் வெவ்வேறு அணி நிர்வாகிகளும் உதயநிதியை சந்திக்க ஆர்வத்துடன் வருகின்றனர். இதில் சிலர் ஏற்கனவே கூறியது போல எதாவது ஒரு பரிந்துரை கடிதங்களுடன் உதயநிதியை சந்திப்பது தான் குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தல்களில் திமுக தலைவர் மக்கள் பிரச்னைகளுக்காக நமக்கு நாமே மற்றும் கிராம சபை கூட்டம் என நடத்தியது போல தங்களுடைய உட்கட்சி பிரச்சனைகளை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக சென்று நிர்வாகிகளை சந்திக்க ஏற்பாடு செய்துள்ள விளம்பர யுக்தி கை கொடுக்குமா? காத்திருந்து பார்க்கலாம்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை அறிவித்தார்

0

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டத்தை அறிவித்தார்

தமிழகத்தில் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க ‘யாதும் ஊரே’ என்ற இணையதளம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்ட அவர், உலகெங்கும் உள்ள தமிழர்கள், தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏதுவாக முதலீட்டு தூதுவர்களை உருவாக்கி, “யாதும் ஊரே” என்ற தனி சிறப்பு பிரிவு மற்றும் வலைதளம் ரூ.60 லட்சம் செலவில் உருவாக்கப்படும். மேலும் கோவையில் ஐ.டி நிறுவன தேவைக்காக 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டட வளாகம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், உற்பத்தியை பெருக்க வழங்கப்படும் மானியம் 50 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 20 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் அரசின் தரவுகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

அதே நேரம், “மக்களைத் தேடி அரசு” என்ற திட்டம் 90 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தார். நான்காவது தொழில் புரட்சிக்கான தகவல் தொழில் நுட்பங்களின் மூலம் தமிழ்நாட்டின் மின் ஆளுமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரைக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தை அவர் சுட்டிக் காட்டி பேசினார்.

இதையும் படிக்கலாம்: எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

இதற்கிடையில், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறோம் என பெருமையாக சொல்லும் திமுகவினர், தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற நாடாளுமன்றத்தில் பேசி உதவ வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொண்டார்.

இதையும் படிக்கலாம்: வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

0

எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்

வனச்சரக அலுவலரை மிரட்டியதாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 926 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார். 

இந்நிலையில், வேடன்கரடு மலைப்பகுதிக்கு கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வனச்சரக அலுவலர் திருமுருகன் தந்த புகாரின் பேரில் திமுக எம்.பி எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதுதொடர்பாக பேசிய அவர், தன் மீது அவப்பெயர் ஏற்படுத்தவே வழக்குப்பதிவு செய்துள்ளதாக எஸ்.ஆர். பார்த்திபன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த காலங்களில் திமுக என்றாலே அராஜகம் மற்றும் ரவுடிகள் நிறைந்த கட்சி என்று பெயர் எடுத்து வந்த நிலையில் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள ஆளுங்கட்சிகளின் மீதுள்ள அதிருப்தியால் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு மக்கள் வாய்ப்பளித்தனர். கிடைத்த வாய்ப்பை திமுக எம்பிக்கள் சரியாக பயன்படுத்தி கட்சிக்கு நல்ல பெயரை பெற்று தர முயற்சிக்காமல் வழக்கம் போல தங்களுடைய அராஜகத்தை காட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

இதற்கு முன் ஓசி பிரியாணி,ஓசி டீ, ஓசி பஜ்ஜி,பியூட்டி பார்லர் என திமுகவின் தொண்டர்களாலும் கீழ்மட்ட நிர்வாகிகளாலும் தான் மக்களுக்கு தொந்தரவுகள் ஏற்பட்டு வந்தது. தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.பி.யாலேயே மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

0

வைகோ எம்.பியானது இனிக்கிறது! அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா? தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி

நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் மக்களவை தேர்தலில் அமைத்த கூட்டணி வாக்குறுதியின் படி திமுக சார்பாக வைகோவிற்கும்,அதிமுக சார்பில் அன்புமணி ராமதாசிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் வைகோவை தேர்ந்தெடுத்த செய்தியை நேர்மறையாகவும் அன்புமணி ராமதாஸை தேர்தெடுத்ததை எதிர்மறையாகவும் தமிழக ஊடகங்கள் காட்டி வருவதாக பாமகவின் தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவர், பசுமை தாயகம் அருள் ரத்தினம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து “சாதிவெறி விகடன் கும்பலின் ஊடக விபச்சாரம்: பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!” என்ற தலைப்பில் முகநூல் பக்கத்தில் அவர் பதிவு செய்துள்ளதில் கூறியுள்ளதாவது.

விகடன் குழுமத்தில் பணியாற்றுவோரில், குறிப்பாக அங்கு செய்திகளை தீர்மானிப்பவர்களில் 50 விழுக்காட்டுக்கு மேல் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ‘புதிய பிராமணர்கள்’ ஆகும்.

தமிழக ஊடகங்களை இதற்கு முன்பு கட்டுப்பாட்டில் வைத்திருந்த பழைய பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களை எதிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். ஆனால், இப்போது பெரும்பான்மை தமிழ் ஊடகங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புதிய பிராமணர்களின் ஒற்றை எதிரி வன்னியர்கள் ஆகும் (கூடவே, அவ்வப்போது இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் தாக்குவார்கள்).

விகடன் குழுமத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊடகவியல் பணியில் சேர்ந்தவர்களில் 80% ஒரே சாதியினர் என்று கூறப்படுகிறது. அந்த குழுமத்திலிருந்து வெளியாகும், ஜூனியர் விகடன், ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களும், விகடன் டாட் காம் எனும் இணைய பத்திரிகையும் முழுக்க முழுக்க சாதிவெறி மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் வெளியாகும் செய்திகள் அனைத்திலும் சாதிவெறி விஷம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

“பாமக மீது பாய்ச்சல்! மதிமுகவுக்கு பூங்கொத்து!”

நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் அதிமுக ஆதரவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் (பாமக), திமுக ஆதரவுடன் வைகோ அவர்களும் (மதிமுக) வெற்றி பெற்றுள்ளார்கள். இதில் வைகோவின் வெற்றி இனிப்பான செய்தியாகவும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் வெற்றி மிகவும் கசப்பான செய்தியாகவும் விகடன் கும்பலின் மனதை தாக்குகிறது! இது சாதிவெறி மனநோய் அல்லாமல் வேறு என்ன?

“வைகோவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்குமா?” என்றும் “`ஒரு மணிநேரம் நடந்த விவாதம்’ – ராஜ்யசபா எம்.பி ஆகிறார் வைகோ!” என்றும் விகடன் கும்பல் வைகோவுக்காக எழுதிய கட்டுரைகளில், வைகோ வானளாவ புகழப்பட்டுள்ளார். ஆனால், “அன்று… ஜெயலலிதா தடுத்தார்! இன்று… எடப்பாடி கொடுத்தார்!” என மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் குறித்த விகடன் கும்பல் கட்டுரையில் மட்டும் பாமகவும் மறுத்துவர் அய்யா அவர்களும் வறுத்து எடுக்கப்பட்டிருக்கிறார்கள்!

இப்படி வெறிபிடித்த நாய் போல பாமக மீது பாய்ந்து விழும் விகடன் கும்பல், மதிமுகவுக்கு மட்டும் பூங்கொத்து கொடுப்பது ஏன்?

வைகோ அவர்கள் தேர்வுக்கும் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தேர்வுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. இரண்டுமே தேர்தல் கூட்டணி உடன்பாட்டில் அளிக்கப்பட்டுள்ளன. இரண்டு கட்சிகளுமே தங்களது கூட்டணி கட்சிகளை முற்காலத்தில் விமர்சனம் செய்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், பாமக அதிமுகவை விமர்சனம் செய்ததை விட, மதிமுக திமுகவை விமர்சனம் செய்ததுதான் அதிகம். ஆனால், பாமகவின் விமர்சனங்களை மட்டுமே விரிவாக பதிவு செய்துள்ள விகடன் கும்பல், வைகோ அவர்களின் விமர்சனங்கள் எதையும் குறிப்பிடாமலேயே கட்டுரை தீட்டியுள்ளது.

தமது சாதிவெறி அரிப்புக்காக, பாமகவை இழிவாக விமர்சிக்கும் விகடன் கும்பல் ஒரு இதழியல் குழுமமே அல்ல. அது ஊடக தர்மத்தை படுகொலை செய்யும் ஊடக விபச்சார கும்பல் என்பதே உண்மை ஆகும்.

“விகடன் கும்பல் தனது பன்முகத்தன்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்”

விகடன் குழுமம் ஒற்றை சாதியின் ஆதிக்கத்தில் இருப்பது ஜனநாயத்திற்கு பேராபத்து. விகடனின் சாதிவெறி தொடர் பிரச்சாரத்தால் தமிழ்நாட்டின் நல்லிணக்கமும், அமைதியும் பாதிக்கப்படும். இந்த ஆபத்தை தடுக்க – விகடன் குழுமம் தமது ஊடகத்தில் செய்திகளை உருவாக்கும் படிநிலைகளில் (ஆசிரியர் குழு, செய்தியாளர்கள் வாரியாக) தமிழ்நாட்டின் எந்த சமூகத்தினர் எத்தனை விழுக்காட்டினர் பணியாற்றுகிறார்கள் என்பதை வெளியிட வேண்டும்.

2018 மே மாதம் 3 ஆம் நாள் கானா நாட்டின் அக்ரா நகரில் கூடிய ஐநாவின் யுனெஸ்கோ ஊடகங்கள் மாநாட்டில், ‘அக்ரா பிரகடனம்’ (Accra Declaration) எனும் அறிவிப்பை வெளியிட்டார்கள். அந்த யுனெஸ்கோ பிரகடனத்தில் “ஊடகங்களில் பன்முகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, சமூகத்தில் அங்கம் வகிக்கும் எல்லா பிரிவினரும் ஊடகங்களிலும் இடம்பெற வேண்டும் (fair representation in the media of different groups in society)” என்று கூறப்பட்டுள்ளது.

Accra Declaration: UNESCO World Press Freedom Day International Conference.- “We therefore: Call on each UNESCO Member State to:… Promote media diversity, including by preventing excessive concentration of media ownership, by requiring media outlets to be transparent about their ownership, …by promoting fair representation in the media of different groups in society.”

அந்த வகையில் விகடன் குழுமத்தில் படிநிலை பணிகள் வாரியாக FC, BC, MBC, SC, ST, தமிழ் மொழி பேசுவோர், சிறுபான்மையினர் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவினரும் எத்தனை விழுக்காட்டினர் வேலை செய்கிறார்கள் என்பதை, பணி படிநிலை வாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

இது விகடன் குழுமம் என்கிற ஒரு நிறுவனத்தின் சிக்கல் அல்ல. இது தமிழ்நாட்டை பீடிக்கும் பேராபத்து. எனவே, “விகடன் கும்பல் தனது பன்முகத்தனமையை வெளிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தும் கடமை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் உள்ளது என்றும் அந்த பதிவில் அவர் கூறியுள்ளார் .

இதையும் படிக்கலாம்: எம்.பி ஆனதும் வழக்கம் போல அராஜகத்தை ஆரம்பித்த சேலம் திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன்