Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

0
59

Heart Beat மற்றும் Blood pressure-யை துல்லியமாக அளக்கும் லாவா தொலைபேசி அறிமுகம்!

மனிதர்களின் இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை துல்லியமாக கணக்கிடும் தொலைபேசி ஒன்றை லாவா நிறுவனம்

லாவா பல்ஸ் என பெயரிட்டு வெளியிட்டு சாதனை படைத்துள்ளது.

இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்த சென்சார் கொண்ட உலகின் முதல் தொலைபேசியை லாவா வெளியிட்டுள்ளது.

லாவா பல்ஸ் என்பது இந்தியாவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் புதிய அம்சமான தொலைபேசியாகும், இதய துடிப்பை கண்டறிந்து ஒரு நிமிடத்தில் காட்டிவிடுகிறது.

லாவா பல்ஸ் விலை 1,599 ரூபாய் மற்றும் Rose Gold வண்ண ஆப்ஷனில் வருகிறது. இந்த தொலைபேசி Flipkart, Amazon மற்றும் நாடு முழுவதும் உள்ள பல கடைகளில் கிடைக்கிறது.

நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அளவு சாதனங்களை போலவே லாவா தொலைபேசியும் அந்த முறையை பயன்படுத்தியே வடிவமைத்துள்ளனர்.மேலும் அதன் முடிவுகள் மிகவும் துல்லியமானதாக இருக்கும் எனவும் கூறுகின்றனர்.

இதைப் பயன்படுத்துவது மிகவும் எளிதானது மற்றும் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் திரையில் காண்பிக்க Pulse Scanner ‘துடிப்பு ஸ்கேனர்’ பொருத்தப்பட்டுள்ளது. விரல் முனையை வைத்தால் இதய துடிப்புகளை துல்லியமாக கணக்கிட்டு திரையில் காண்பிக்கிறது.

லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இருதய நோய்களால் இறக்கின்றனர். முன்கூட்டியே இதனை கண்டறிந்து நாம் காப்பாற்ற முடியும் என்றாலும், நமது மக்கள்தொகையில் ஒரு பெரிய பகுதி இன்னும் அடிப்படை மருத்துவ சுகாதார வசதி இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். அடிப்படை வசதி கூட இல்லாத மக்கள் இந்த பரிசோதனைகளை அதிக செலவு கொண்டு மேற்கொள்ளமாட்டார்கள் என்பதால் இந்த லாவா பல்ஸ் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

லாவா பல்ஸ் சிறப்பம்சம்

1. 2.4′ இன்ச் டிஸ்ப்ளே

2. ஸ்டீரியோ ஒலியை ஆதரிக்கிறது

3.32 எம்.பி ரேம் மற்றும் 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ்

4.பாலிகார்பனேட் பாடி வடிவமைப்பு

5.மிலிட்டரி கிரேடு சான்றளிக்கப்பட்ட போன்

5.கேமரா

6.நம்பர் டாக்கர்,

7.தொடர்புகளைச் சேமிப்பதற்கான புகைப்பட ஐகான்

8.ரெக்கார்டிங் கொண்ட வயர்லெஸ் எஃப்எம்

9.இரட்டை சிம் ஆதரவு

10.1800 mAh பேட்டரி

11. 1 ஆண்டு ரீபிளேஸ்மென்ட் உத்தரவாதம்

 

 

 

author avatar
Kowsalya