வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!!

0
166
#image_title

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் திருத்தம் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்!!!

வாகன ஓட்டிகளுக்கு டிரைவிங் லைசென்ஸ்(ஓட்டுநர் உரிமம்) என்பது மிகவும் முக்கியம்.ஆனால் பலர் டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஒட்டி வருகின்றனர்.சட்டப்படி இது மாபெரும் குற்றமாகும்.லைசென்ஸ் இல்லாத நபர் போக்குவரத்து காவலரிடம் மாட்டினால் வண்டி பறிமுதல் செய்யப்பட்டு விடும்.அதேபோல் பைன் அமௌன்ட் காட்டியே ஆக வேண்டும்.இப்படி சிலர் இருக்க வேறு சிலர் டிரைவிங் லைசென்ஸ் என்றால் என்னவென்ற தெரியாமல் சுற்றி திரிகின்றனர்.

இப்படி இருக்க டிரைவிங் லைசென்ஸ் வைத்திருபவர்கள் தங்களின் லைசென்ஸில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் இதற்காக அலைய வேண்டியதில்லை.வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸ் பெற மற்றும் திருத்தும் மேற்கொள்ள தமிழக அரசு வாகன ஒட்டிகளுக்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்த ஒருவருக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்களுக்குப் பிறகு பழகுநர் உரிமம் வழங்கப்படும்.பின்னர் பழகுநர் உரிமம் கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்குள்  https://sarathi.parivahan.gov.in/sarathiservices/state என்ற இணையதளம் மூலம் ஓட்டுநர் உரிமத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

அதேபோல் டிரைவிங் லைசென்ஸில் திருத்தங்கள் மேற்கொள்ளவதும் மிகவும் சுலபமான ஒன்று தான்.இதில் திருத்தங்கள் மேற்கொள்ள தேவைப்படும் ஆவணங்கள் ஆதார் கார்டு,கல்வி சான்றிதழ்,வகுப்பு சான்றிதழ்,பிறப்புச் சான்றிதழ்உள்ளிட்டவை ஆகும்.

வீட்டில் இருந்தபடி டிரைவிங் லைசென்ஸில் மொபைல் எண் மாற்றம் செய்வது எப்படி?

முதலில் https://parivahan.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

அடுத்து drivers/learners license என்ற பக்கதிற்குள் நுழையவும்.

அடுத்து உங்களுடைய மாநிலதின் பெயரை செலக்ட் செய்யவும்.

அதன் பின் “Others” என்பதை கிளிக் செய்யவும்.

“Mobile Number Update” என்ற பக்கம் வந்திருக்கும்.

அடுத்ததாக உங்களுடைய License எந்த பிரிவை சேர்ந்தது என்பதை குறிப்பிட 3 ஆப்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கும்.அதில் சரியானவற்றை க்ளிக் செய்யவும்.

அடுத்து அதில் “License Issue Date,Driving License Number,Date of Birth” போன்ற விவரங்களை முறையாக கொடுத்து “Submit” என்பதை க்ளிக் செய்யவும்.

அதன் பின்னர் உங்களுடைய இதர தகவல்கள் அந்த பக்கத்தில் தெரியும்.அவை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து விட்டு “Proceed” என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பின்னர் புது மொபைல் எண் மற்றும் அதை மாற்றுவதற்கான முறையான காரணத்தை கொடுத்து “Proceed” ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அடுத்து புதிய மொபைல் எண்ணுக்கு OTP வரும்.அதை இணையதளத்தில் பதிவிட்டு “Verify” என்பதை கிளிக் செய்தால் போதும்.டிரைவிங் லைசன்ஸில் உங்கள் மொபைல் எண் மாற்றம் அடைந்து விடும்.