தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

0
85

தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகையில்.. முருகனின் அருளை பெறுவோம்..!!

 

வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு ஆடி மாதத்தில் தான் அதிகளவு தெய்வங்களை வழிபடுவதற்குரிய சிறப்பான நாட்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஆடி கிருத்திகை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்த நாளை கொண்டாடுகிறார்கள்.

 

ஆடி மாத கிருத்திகை தேவர்களின் மாலை காலமாகும். இக்காலத்தில் உப்பில்லா உணவை உண்டு கார்த்திகை விரதம் இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப்படுகிறது. பலரும் ஆடி மாதத்திலிருந்து துவங்கி ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து தை மாத கார்த்திகையில் விரதத்தை முடிப்பார்கள்.

 

நட்சத்திரங்களில் கிருத்திகை சிறப்பு வாய்ந்தவையாகும். முருகன் பிறந்தது விசாக நட்சத்திரம் என்று சொல்லப்பட்டாலும், அவனைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தது கார்த்திகை பெண்கள் என்பதால் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. முருகனை வழிபடாத பக்தர்களே இல்லை. இதனால் முருகன் அனைவருக்கும் செல்லப் பிள்ளையாக கருதப்படுகிறார்.

author avatar
Parthipan K