விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

0
139

விண்வெளி உடையில் அப்படி என்னதான் இருக்கிறது? வாங்க பாப்போம்!..

 விண்வெளி உடை என்பது கிட்டத்தட்ட சிறிய விண்கலம் போல தான் காட்சியளிக்கும். விண்வெளியில் நிலவில் ஏற்படும் கடினமான சூழலை சமாளிக்கும் விதத்தில் இந்த உடை வடிவமைக்கப்பட்டது

 

விண்வெளி உடை ஒரு விண்வெளி வீரருக்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் அழுத்தத்தை தருகிறது. மேலும் விண்வெளியின் குளிர்ச்சி, வெப்பம், விண்வெளிப் பாறைத்துகள், தூசு மற்றும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து விண்வெளி உடை நம்மை பாதுகாக்கிறது.

.

 

மேலும் இது பாய்ந்துவரும் விண் தூசுகளில் இருந்தும், விண்வெளி வீரரின் உடலைப் பாதுகாக்கும் வகையிலும் மற்றும் வீரரின் உடலுக்கு தேவைப்படும் காற்று, நீர், வெப்பம் ஆகியன கிடைக்கும் விதத்திலும் மற்றும் வேர்வை, சிறுநீர், கரியமிலவாயு ஆகியவற்றை அகற்றும் விதத்திலும் விண்வெளி உடை வடிவமைக்கப்படுகிறது.விண்வெளி உடைகள் சாதாரண துணியைக் கொண்டு தயாரிக்கப்படுவதில்லை. நைலான், ஸ்பான்டெக்ஸ், யுரேதேன் பூசிய நைலான், டேக்ரான், நியோபிரேன், மைலர், கார்டெக்ஸ், கெல்வர் மற்றும் நோமெக்ஸ் போன்ற வேதிப் பொருட்களை கொண்டு பல அடுக்குகள் கொண்ட உடையாக தயாரிக்கிறார்கள்.

 

விண்வெளி உடையில் வீரருக்கு உதவும் வகையில் பல கருவிகள் இருக்கும். குறிப்பாக தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடன் தொடர்பு கொள்ள தேவையான அனைத்து கருவிகளும் இருக்கும். வீரர் அணியும் தொப்பியில் பேசுவதற்கு மைக் மற்றும் இயர் போன் இருக்கும். மேலும், சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் தலைக் கவசமும் இருக்கும். இவ்வளவு கருவிகள் இருப்பதால் தான் இந்த உடையை அணிவதே வீரருக்கு சிரமமாக இருக்கும். ஆனால், விண்வெளியில் இதன் எடையை உணர முடியாததால் சிரமமின்றி வீரரால் செயல்பட முடியும்.

 

 

 

 

author avatar
Parthipan K