இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

0
169
India came in second! Corona increasing day by day!
Serial casualties by Corona! People in shock!

இந்த மாவட்டங்களில் லாக்டௌன் உறுதி! தமிழக அரசின் அதிரடி முடிவு!

கொரோனா தொற்றானது போன ஆண்டு சீனாவில் தொடரப்பட்டு படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் சென்றது. இந்த கொரோனா தொற்றால் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்களின் நலன் கருதி அனைத்து நாடுகளும் ஊரடங்கை அறிவித்தது.மக்கள் வேலைவாய்ப்புகள் இன்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அதனைத்தொடர்ந்து இந்தியாவிலும் மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கானது ஆறு மாதங்களை கடந்தும் தொடர்ந்தது.

நவம்பர் மாதம் முதல் ஊரடங்கு சில தளர்வுகளுடன் முடிவுக்கு வந்தது.அதன்பின் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றை மறந்து தனது பழைய வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர்.மீண்டும் முதலில் ஆரம்பித்து போலவே ஐரோப்பியாவில் கொரோனா 2 வது அலை உருவாக ஆரம்பித்துவிட்டது.அதனைத்தொடர்ந்து சென்ற வருடம் நடந்தது போலவே வெளிநாடுகளில் அதாவது (ஜெர்மனி,பிரேசில்) போன்ற நாடுகளில் ஊரடங்கானது  அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து நமதுப தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடப்பதால் தற்போது அதிக அளவு கொரோனா தொற்று பரவி வருகிறது.ஏனென்றால் மக்கள் கூடத்தில் கலந்துக் கொள்ளும் போது சரியான விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.ஏன் தலைவர்களே சரியான விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.அதனால் தான் தலைவர்கள் பலருக்கே கொரோனா தொற்றானது உறுதியாகியிருக்கிறது.

தற்போது கொரோனாவின் தாக்கம் ஆனது தமிழ்நாட்டில் அதிக அளவு காணப்படுகிறது.குறிப்பாக தஞ்சாவூர்,திருச்சி,சென்னை என 8 மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது.இந்த தொற்றை கட்டுபடுத்த தமிழக அரசாங்கம் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க முடிவு செத்துள்ளது.இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அதில் அவர் கூறியது,இந்தியா முழுவதும் கொரோனா பரவல் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் சூழல் காணப்படுகிறது.அதிலும் குறிப்பாக மகராஷ்டிரம் மாநிலத்தில் இத்தொற்றானது அதிக அளவு பரவி வருகிறது.அதனைத்தொடர்ந்து பஞ்சாப்,சடிஷ்கர்,குஜராத்,மத்திய பிரதேசம்,கேரளா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்றானது ஓர் நாளில் நோய் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை முன்பை விட தற்போது அதிகரித்து கொண்டே தான் உள்ளது.

இந்த தொற்றை கட்டுபடுத்தவும்,வராமல் தடுக்கவும் நம் தமிழக அரசு போர்கால அடிப்படையில் பலவகை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.முன்பே தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன்,மாவட்ட ஆட்சித் தலைவர்கள்,மாநகராட்சி ஆட்சியர் மற்றும் மூத்த தலைவர்கள் ஆகியோர் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.அதன்பின் மருத்துவ வல்லுனர்களுடன் இவர்கள் சேர்ந்து கூட்டம் நடத்தினர்.அப்போது அவர்கள் நோய் தடுப்பிற்கான அனைத்து முடிவுகளையும் எடுத்தனர்.

முதலில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் அதிக அளவு கொரோனா தொற்று பரவியதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தனர்.அவர்களுக்கு பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் வகுப்பினிலே நடத்தும் படி ஆணை பிறப்பித்தனர்.அதன்பின் கல்லூரிகளுக்கும் அவ்வழியே பின்பற்றும் படி ஆணை வெளியிட்டனர்.பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தும் படி தெரவித்தனர்.

அதன்பின் மருத்துவம்,ஆயுஷ் போன்ற மருத்துவத்தில் கடைசி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் நடத்தப்படலாம் என ஆணை வெளியிட்டனர்.அதேபோல நிகழ்சிகள் நடைபெறும் உள்ளரங்கங்களில் மொத்தமாக 600 பேருக்கும் மிகாமல் இருக்க வேண்டும் எனவும்,அவர்கள் அனைவரும் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

பொது இடங்களில் அனைத்து மக்களும் முககவசம் அணிவது மற்றும் கைகளை சுத்தமாக கழுவுவது,சமூக இடைவெளிகளை சரியாக கடைபிடிப்பது என அனைவரும் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.நம் தமிழ்நாட்டில் அவர்கள் கூறிய 8 மாவட்டங்களில் சில விதிமுறைகளுடன் லாக்டௌன் போட அதிக அளவு வாய்ப்புகள் உள்ளது.நேற்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவர் கூறியது, தமிழகத்தில் அதிக அளவு கொரோனா தொற்று பரவி தான் வருகிறது.அதனால் மாக்கள் முழு ஊரடங்கு போடப்படும் என வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்.சில காலம்,நேரங்கள் படி தேர்தலுக்கு பிறகு ஊரடங்கு போடப்படும் எனக் கூறினார்.மேலும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 300 படுக்கைகள் அதிகபடுத்த முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.